24 மணி நேரமும் செய்திகளை அள்ளித்தரும் தொலைக்காட்சிகள் ஆங்கிலம், இந்தியில் மட்டுமல்ல, தமிழிலும் நிறைய வந்து விட்டன. இந்த செய்தி ஊடகங்கள் வெறுமனே ரேடியோ போல் இல்லாது காட்சி ஊடகமாகவும் இருப்பதால் எந்நேரமும் பரபரப்பான செய்திகளுக்காக ஒரு வேட்டை நாயைப் போல அலைகின்றன. குறிப்பிட்ட நாளில் தீனி சரியாக அமையவில்லை என்றால் இவர்கள் டி.ஆர்.பி ரேட்டிங்குக்காக ஒன்றுமில்லாத செய்திகளையும் விசுவரூபமாக சித்தரித்து விடுவார்கள்.
செய்தி, அதன் முக்கியத்துவம், ஆதாரங்களின் நம்பகத்தன்மை, நெருடும் காட்சிகள் மீதான சுய தணிக்கை, பார்வையாளர்களின் மலிவான உணர்ச்சிகளைத் தூண்டாமல் விமரிசனமாகப் பார்க்க கற்றுத்தரும் பொறுப்பு என்று அடிப்படை ஊடக அறவியல் எதனையும் இச்செய்தி ஊடகங்களிடம்...
Monday, January 21, 2013
Friday, May 18, 2012
காட்சிகளை சாட்சியங்களாய் எண்ணுங்கள்
ஊடகங்களே சமூக அமைப்புக்களே;
உங்கள் ஒற்றுமைதான் தாயக தமிழனை வாழவைக்கும். தமிழர்தாயகமான எங்கள் மண்ணில் வேற்றுநாட்டவன் வந்து
எங்கள் பெண்களை மானபங்கப்படுத்தினான். எம்மால் தடுக்கமுடிந்ததா? இல்லை.
எல்லாம் முடிந்துபோய் இன்று எங்கள் பெண்களை சீரழித்த காட்சிகளை
பார்க்கிறோம். காட்சிப்பொருளாக்கிவிட்டான் சிங்களன்.
தான் செய்த கொடுமைகளை காட்சியாக்கி
வைத்துள்ளான் அவன். எங்களுக்கான நீதி நியாயம் கிடைக்கவேண்டும் குற்றம்
செய்தவன் தண்டிக்கப்பட வேண்டும் இதுதானே எமக்கெல்லாம் வேண்டும்.
ஊடகங்களில் போர்க்குற்றக்காட்சிகள்
குற்றத்துக்கான சாட்சிகளாய் வெளியிடப்படுகின்றன. நடந்தவைகள் தான்
சாட்சியங்கள். அவற்றையே பொய்யாக்கத்துடிக்கும் இனவாத அரசின்
செயற்பாடுகளுக்கு உலகநாட்டின் மனச்சாட்சியை உருக்கக்கூடிய சாட்சிகள் தான்
இந்த காட்சிகள். வேதனையின் விளிம்பில் நின்று தான் இந்தக்காட்சிகளை
பார்க்கிறோம். எங்கள் உறவுகள்...
Tuesday, March 27, 2012
நேற்றைய நிஜங்கள் இன்றைய எழுத்தில்....

ச்சே எவ்வளவு பயங்கரக் கனவு..
வயிற்றைக் கிழித்துக் கொண்டு புறப்பட்ட திகில் தூக்கத்தில் இருந்து என்னை தூக்கி வாரிப் போட்டது படுக்கையறையில் இருள் உறைந்திருந்தது மின் தடையால் மின் விசிறி நின்று போனதில் கழுத்தும் பிரடியும் வேர்த்து நசநசத்தன
வெளியே வந்து ஜன்னலின் கேட்டினை தொட்டுத் தடவி திறந்தேன் கையில் தூசி ஒட்டிக் கொண்ட மரமரத்தன மங்கிய நிலா வெளிச்சத்தில் தூரத்து மரங்கள் அமானுஷ்ய வடிவம் கொன்டு வெறியாட்டம் போடுவது போல் என் மனதுக்குப் பட்டது.
பகல் நேரங்களில் மாபெரும் இசை செண்டுகளாக நிஷ்டையில் ஆழ்ந்த தவமுனிவர் கைதேர்ந்த சிற்பி வடித்த கலைப்படைப்புகளாக முகம் காட்டும் செடிகளையும் பதர்களையும் மரங்களையும் இரவு நேரம் பயந்தவர்களை மிரட்டும் மருட்டும்...
Wednesday, February 15, 2012
மூர்த்தி

வெயிலில் உலர்ந்து வாடிய உடலும்
துவைக்காத உடையும்
மழிக்காத தாடியும்
வாராத தலையுமாக
மூர்த்தி என்ற இளைஞன்
என்னிடம் தன்னை அறிமுகப்படுத்திக் கொன்டான்
கண்களில் மட்டுமல்ல நகத்து நுணி வரை துயரம் பொங்கி வழிகிற தோற்றம்எதிராளியைக் கூட வலுவாகத் தாக்கும் சோகம்..
12/02/2012
9.2...
Wednesday, February 1, 2012
இந்தியாவில் நாம்-கலாட்டாக்காலம்
இந்த பயணத்தை எழுத இரவில் வெளியே பார்த்திருந்தேன் இருளில் ஒன்றும் தெரியாததினால் தான் எனக்கு எண்ணம் ஏதுவும் வரவில்லை அதானால் தான்; வார்த்தைகள் ஏதும் வழிக்கோலவில்லை அத்தனை அழகான காலங்கள் அந்த இனிமையான நினைவுகள் வாசனையோடு என்றும் நினைவிருக்கும்.
நாம் தாண்டி வந்த நாட்களின் கீறல்கள் எம் மனதில் அடியாளத்தில் கோடு போல் பதிந்துவிட்டன நாம் அவர்களுடன் இருந்த அந்த 15 நாட்களும் கனப்பொழுதில் மறைந்து போகாது மனங்களிளே பல மாற்றத்தை ஏற்படுத்தி பயணத்தில் புது வசந்தத்தினை நுகர்ந்து கொண்டோம்
பல எதிர்பார்ப்புகளுடன் பரபரப்பாய் ஒக்டோபர் 16ம் திகதி MRTC யில் ஒன்று கூடினோம் 9.20am பஸ் கொழும்பை நோக்கிப்பயணிக்கத் தொடங்கியது யாழ்ப்பாணத்தை விட்டு எத்தனையோ தடைவை வெளியேறியுள்ளேன்...
Tuesday, January 10, 2012
உச்சிதனை முகர்ந்தால் "இருப்பாய் தமிழா நெருப்பாய்"

இனம் சார்ந்த உணர்வையும் மனிதம் சார்ந்த வலியையும் மையமாக வைத்துக் கலாபூர்வமாக வழங்கப்பட்டிருக்கும் ஒரு தனிக்காவியம் ’உச்சிதனை முகர்ந்தால்’.
தமிழ் சினிமாவுக்கென்று அன்றுதொட்டு இன்றுவரை தவிர்க்க முடியாத சில அடிப்படை அம்சங்கள் உண்டு. எதையும் சாதிக்கவல்ல ஒரு நாயகன் அவனையே நினைத்து அவனுக்காகவே நெகிழ்ந்து அவனுள் கலந்து கரைந்துவிட உருகித் தவிக்கும் ஒரு நாயகி இயற்கைக்கு எந்த வகையிலும் பொருந்தாமல் கடற்கரையிலும் பூந்தோட்டத்திலும் பரபரப்பான வீதிகளிலும் கட்டியணைத்துக் காம விகாரத்தை வார்த்தைகளிலும் அங்க அசைவுகளிலும் வெளிப்படுத்தும் இரண்டு காதல் காட்சிகள்: இரட்டை அர்த்தமுள்ள வசனங்கள் பேசும் நகைச்சுவை நாயகர்களின் சகிக்கமுடியாத சேட்டைகள்: இருபது பேரை ஒரேயொரு...
Wednesday, January 4, 2012
யாழ்பாடிய மண்ணில் பன்பாடிய பறை ஒலி

கடிவாளம் பத்திரிகை யின்பக்கம்
aho;kz;iz gw;wp cq;fsJ fUj;J
யாழ்ப்பாணத்துக்கு வர ரொம்ப ஆர்வமாக இருந்தது. கடல்கடந்து இருக்கின்ற அதுவும் தமிழ் நாட்டை போன்று தமிழ் பேசுகின்ற மக்களை சந்திக்க வந்திருந்த பொழுதுகளை வார்த்தைகளால் சொல்ல முடியாது.
யாழ் மண்ணின் மீது நான் கொண்ட காதலின் பால் இந்த மக்களைச் சந்திக்கவும் இந்த மண்ணில் இந்தக் கலையினை நடாத்துவதற்கும் வாய்ப்புக் கிடைத்துள்ளது.இக் கலையானது ஒடுக்கப்பட்ட சமூகத்தினரை உலகத்திற்கு வெளிக்காட்டுவதற்காகவே நாட்டார் கலைகள் உருவாக்கப்பட்டன. அந்த மக்கள் நாட்டார் கலைகளின் மூலமாக தமது வாழ்வியலை உலகிற்குக் காட்டியுள்ளனர். பூஜ்ஜியம் என்ற வடிவம் இல்லை என்றால் கணிதத்திற்கு பூஜ்ஜியம் என்ற சொல்...