
இந்த பயணத்தை எழுத இரவில் வெளியே பார்த்திருந்தேன் இருளில் ஒன்றும் தெரியாததினால் தான் எனக்கு எண்ணம் ஏதுவும் வரவில்லை அதானால் தான்; வார்த்தைகள் ஏதும் வழிக்கோலவில்லை அத்தனை அழகான காலங்கள் அந்த இனிமையான நினைவுகள் வாசனையோடு என்றும் நினைவிருக்கும்.
நாம் தாண்டி வந்த நாட்களின் கீறல்கள் எம் மனதில் அடியாளத்தில் கோடு போல் பதிந்துவிட்டன நாம் அவர்களுடன் இருந்த அந்த 15 நாட்களும் கனப்பொழுதில் மறைந்து போகாது மனங்களிளே பல மாற்றத்தை ஏற்படுத்தி பயணத்தில் புது வசந்தத்தினை நுகர்ந்து கொண்டோம்
பல எதிர்பார்ப்புகளுடன் பரபரப்பாய் ஒக்டோபர் 16ம் திகதி MRTC யில் ஒன்று கூடினோம் 9.20am பஸ் கொழும்பை நோக்கிப்பயணிக்கத் தொடங்கியது யாழ்ப்பாணத்தை விட்டு எத்தனையோ தடைவை வெளியேறியுள்ளேன்...