
ச்சே எவ்வளவு பயங்கரக் கனவு..
வயிற்றைக் கிழித்துக் கொண்டு புறப்பட்ட திகில் தூக்கத்தில் இருந்து என்னை தூக்கி வாரிப் போட்டது படுக்கையறையில் இருள் உறைந்திருந்தது மின் தடையால் மின் விசிறி நின்று போனதில் கழுத்தும் பிரடியும் வேர்த்து நசநசத்தன
வெளியே வந்து ஜன்னலின் கேட்டினை தொட்டுத் தடவி திறந்தேன் கையில் தூசி ஒட்டிக் கொண்ட மரமரத்தன மங்கிய நிலா வெளிச்சத்தில் தூரத்து மரங்கள் அமானுஷ்ய வடிவம் கொன்டு வெறியாட்டம் போடுவது போல் என் மனதுக்குப் பட்டது.
பகல் நேரங்களில் மாபெரும் இசை செண்டுகளாக நிஷ்டையில் ஆழ்ந்த தவமுனிவர் கைதேர்ந்த சிற்பி வடித்த கலைப்படைப்புகளாக முகம் காட்டும் செடிகளையும் பதர்களையும் மரங்களையும் இரவு நேரம் பயந்தவர்களை மிரட்டும் மருட்டும்...