ஊடகங்களே சமூக அமைப்புக்களே;
உங்கள் ஒற்றுமைதான் தாயக தமிழனை வாழவைக்கும். தமிழர்தாயகமான எங்கள் மண்ணில் வேற்றுநாட்டவன் வந்து
எங்கள் பெண்களை மானபங்கப்படுத்தினான். எம்மால் தடுக்கமுடிந்ததா? இல்லை.
எல்லாம் முடிந்துபோய் இன்று எங்கள் பெண்களை சீரழித்த காட்சிகளை
பார்க்கிறோம். காட்சிப்பொருளாக்கிவிட்டான் சிங்களன்.
தான் செய்த கொடுமைகளை காட்சியாக்கி
வைத்துள்ளான் அவன். எங்களுக்கான நீதி நியாயம் கிடைக்கவேண்டும் குற்றம்
செய்தவன் தண்டிக்கப்பட வேண்டும் இதுதானே எமக்கெல்லாம் வேண்டும்.
ஊடகங்களில் போர்க்குற்றக்காட்சிகள்
குற்றத்துக்கான சாட்சிகளாய் வெளியிடப்படுகின்றன. நடந்தவைகள் தான்
சாட்சியங்கள். அவற்றையே பொய்யாக்கத்துடிக்கும் இனவாத அரசின்
செயற்பாடுகளுக்கு உலகநாட்டின் மனச்சாட்சியை உருக்கக்கூடிய சாட்சிகள் தான்
இந்த காட்சிகள். வேதனையின் விளிம்பில் நின்று தான் இந்தக்காட்சிகளை
பார்க்கிறோம். எங்கள் உறவுகள்...