Friday, July 29, 2011

டாவின்சியின் தசாவதாரம்

திருடன் ஒருவன் உலக மகா மோனாலிசா ஒவியத்தை திருடிக்கொன்டு போய்விட்டான்.கானாமல் போன பிறகும் ஒவியம் வைக்கப்பட்டிருந்த வெற்றிடத்தைப் பார்க்கவே கூட்டம் கூடியது


லியனார்டோ டாவின்சி இவரைத்தெரியாதவர் யாரும் இருக்க முடியாது  மோனாலிசா ஒவியத்தை வரைந்ததன் மூலம் அனைவரின் கவனத்தயும் தன் பால் திருப்பிக் கொன்டவர் இன்று வரை அப் புன்னகைக்கு ஈடாக அவர் வரைந்த ஓவியம் மட்டுமே கானப்படுகின்றது
ஆனால் இவர் ஒர் ஒவியர் மட்டும்மல்ல ஒர் தேர்ந்த சிற்பி,சிறந்த கவிஞர் இசைவிற்பனர், தத்துவமேதை, விளையாட்டு வீரர், கட்டிடக்கலைஞர் ,கடல் ஆராச்சியாளர் ,வானியல் விஞ்ஞானி, நீர்பாசன நிபுணர், ராணுவ ஆலோசகர். இப்படி இவர் எடுத்த ஆவதாரங்கள்  பத்திற்க்கு மேல்
ஐநூறு ஆண்டுகளுக்குப் பின்பு மனிதன் கண்டுபிடிக்க இருக்கும் ஹெலிகப்பட்டரிலிருந்து பீரங்கி வரையிலான பல கண்டுபிடிப்புகளைத்தாண்டி தொலை நோக்கோடு கற்பனை செய்து  காகிதத்தில் வரைந்தார் இவர்



விமானமோ ஹெலிகப்பட்டரோ கண்டுபிடிக்காத காலத்திலயே இவர் பரசூட்டைப்பற்றி தூரிகையால் கற்பனை செய்தார். கடிகாரம் கண்டுபிடிக்கப்படாத அந்த நாளில் அலாரம் வரை சிந்தித்தார்
தாயின் கருப்பையில் குழந்தை எப்படி இருக்கின்றது என்று கூட இவரின் கற்பனை விசாரனை செய்ததது!பிறகு ஒளி அலைகளைப்பற்றி விசாரணை செய்தார் காமராவிற்க்கான அடிப்படைத்தத்துவத்தை வழங்கியதே இவரின் ஆராச்சிதான் மனிதர்களை ஓவியமாக வரைந்தபோது மனிதன் உடற்கூறு இயலை ஆராச்சி செய்தார்





ஒவியத்தில் ஒளியையும் நிழலையும்  ஒரு சேரக் கொண்டுவந்த முதல் ஓவியரும் இவர் தான் ஒளியையும் நிழலையும் இவர் கவனிக்க ஆரம்பித்தபோது கண்களைப்பற்றி ஆராய ஆராய ஆரம்பித்தார்




செடிகளை வரைந்த போது தாவரவியல் பற்றிய தேடலில் இறங்கினர் இதிலே மிகப்பெரிய பிரமிப்பு என்னவென்றால் இவரின் காலத்தில் மேலே சொன்ன எந்த விஞ்ஞான ஆராச்சியுமே துளிர்விடக்கூட ஆரம்பிக்கவில்லை
ஒரேசமயத்தில் இரண்டு கைகளாலும் ஒவியம் வரையக்கூடிய ஒப்பற்ற ஆற்றல் இவருக்கு உண்டு அது மட்டுமல்ல  மூளையைப் போலவே இவரின் புஜங்களும் பலம் வாய்ந்தவை குதிரை லாடங்களை வெறும் கைகளால் இரண்டாக உடைக்கக்குடிய இவர்




இத்தாலியன் ப்ளோரன்ஸ் நகர் அருகே இருக்கம் வின்ஸி என்ற மலைகள் சூழ்ந்த கிராமம் தான் இவர் பிறந்த ஊர் டாவின்சியின் அப்பாவின் பொயர் சாப்பியரோ இவருக்கும் கேத்தரினா என்ற விவசாயக் கூலிவேலை பார்த்த பொண்ணுக்கும் 1452 ம் ஆண்டு சட்டவிரோதமாகப் பிறந்த குழந்தைதான் டாவின்சி பிறந்ததுமே இவரின் தாய் இவரை விட்டுப் போய் விட்டார்
தாய் பாசம் என்னவென்று தெரியாமல் வளந்ததர்
சமகாலத்திலேயே மைக்கல் ஏஞ்சலோ போன்ற சிறந்த கலைஞர்களும் அதேகாலத்தில் வாழ்ந்தார்கள் இவர் வாழ்ந்த இத்தாலியில் தான் அவரும் இருந்தார்.
இருப்பினும் இவரினைப்போல பல்துறையிலும் தேர்ச்சிபெற்றவராக திகழவில்லை
பல துறைகளில் தடம் பதித்த இன்னொருவரை உலகம் இன்று வரை ஈன்றெடுக்கவில்லை !
.


மோனாலிசா1911ம் ஆண்டு திருடன் ஒருவன் இந்த உலக மகா ஒவியத்தை திருடிக்கொண்டு போய் விட்டான் ஓவியம் காணமல் போன பிறகும் இவ் ஓவியம் வைக்கப்பட்டிருந்த வெற்றிடத்தைப்பார்க்க கூட்டம் அலைமோதியது பிறகு ஒரு வழியாக மீட்கப்பட்ட இந்த ஒவியம் இப்போது பாரீஸின் லூவர் மியூஸியத்தை  அழகுபடுத்திக் கொண்டு இருக்கின்றது
மோனாலிசா ஓவியம் இப்போது சுமார் ஆறுநூறு கோடி றுபாய்கு மேல் மதிப்பிடப்பட்டுள்ளது

0 comments:

Post a Comment

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | cheap international calls