Friday, September 30, 2011

“விடிய எழும்பிப் பார்த்தேன் எங்க வீட்டு முத்தத்தில பாதி எரிஞ்சுபோன தலை கிடந்ததுங்கோ..உந்த வீட்டில தான் தான் கால் கிடந்தது பாவம் அவள் ஒரு இளம் பொம்பிள பயந்து போய் கத்திக் கொண்டு ஓடி வந்தது அப்ப நேரம் விடியக்கால 5.00 மணி இருக்கும்…..!







சொல்லி முடிப்பதற்க்குள் இதயமே ஒரு கணம் நின்று விடும் இருந்தது.
யாழ்பாணத்தில் இருந்து சுமார் 2 கிலோமீற்றர் தூரத்துக்கு அப்பால் அமைந்துள்ளது காக்கை தீவு J/133 கிராம சேவையாளர் பிரிவை கொண்டமைந்தது ஒர் மீனவக் கிராமம் மொத்தமாக 86 கிராமங்களைக் கொண்டுள்ளது.



இக் கிராமம் பற்றிய பல செய்திகளை கேள்விப்பட்டுள்ளோம் மேலும் அறிய ஆவலுடன் அக்கிராமத்திற்க்கு செல்ல 789 இலக்க போரூந்தில் ஆரம்பமானது எம் பயணம்.இப் பேரூந்து சுமார் 50மீற்றர் தொலைவில் வரும் போதே அனைவரும் முக்கினை பொற்றிக் கொள்கின்றனர்.



முகத்தினை சுழிக்கிறார்கள் வாய்குள் எதோ முனுமுனுக்கிறார்கள் வண்டியின் வேகம் அதிகரிக்கின்றது.யன்னல் கம்பிகளின் ஊடாக தலையை வெளியே நீட்டி சிலர் துப்புகின்றார்கள் காக்கை தீவு இது தான் இனம் காட்டுவதற்க்கு இப்படியொரு குறியீடா. மீன் சந்தைக்கு முன் பேரூந்து நின்றது காக்கை தீவு எங்கே என்று கேட்டோம்.
இது தாங்க காக்கைதீவு மீன் சந்த உதால நேர போன தெரியும் “ என்றார்கள் மீன் வாடை காற்றோடு கலந்து ஊரெங்கும் ஆக்கிரமித்திருந்தது. கமராவில் படங்கை பதித்தபடியே சென்றோம். சுpறிய சிறய ஓலைக் குடில்கள் பெரிய கல்வீடுகள் என கலந்திருந்தன சிறு தொலைவில் வறட்சியினால்  நிலம் வெடித்து இருந்தது அது ஒர் தாழ்வான பிரதேசம் வற்றி போய் கொண்டிருக்கும் குளம் சிறிதளவு நீர் இருந்தது அதில் என்ன ஆச்சரியம் என்றால் அந்த நீர் ஊதா நிறமாக இருந்தது.


இதைபற்றி கேட்பதற்க்கு சங்க செயளார் கஜேந்திரனை சந்தித்தோம் அவர் கூறுகையில் “இந்த குளம் மழை வத்தி போகேக்க இப்டித்தான் இருக்கும் மாரி காலத்தில நாங்க இங்க இருக்கவே முடியாதுங்க பக்கத்தில எங்கயாவது பள்ளிகூடத்தில போய் தான் தங்கனும் ஒரு மாசத்துக்கு மேல தண்ணி வத்தாது பிறகு இந்த வீட்ட வருவம் இது தான் ஒவ்வரு வருஷமும் நடக்குது நாங்க இடம்பெயராம இருக்கனும் என்ட பள்ளமான இந்த குளத்த நிரப்பனும் அப்ப தான் இந்த தண்ணி கடலுக்கு போகும் இதுககுக ஒரே தீர்வு இது மட்டும் தான் “
இத பற்றி யாரிடமாவது கதைத்தீர்களா? யார் யாரிடம் கதைத்தீர்கள்?
கோரிக்க மட்டுமே எங்களாள முன்வைக்க முடியும் தீர்வு அவங்க கையில தான் இருக்கு சிறுகைத்தொழில் அமைச்சர்.டக்ளஸ் தேவானந்தா அவர்களிடமும் பொதுக்குழுக்களிடம் முன்வைத்தோம் கூட எல்லா மட்டங்களிலும் கதைத்து பாத்திட்டோம் அரசாங்கம் நினைச்சா ஒரு செக்கனில இத முடிக்கலாம் ஆனா எந்த நடவடிக்கையும் எடுக்கிற மாதிரி தெரியல
யசாக் நிறுவனம் 10 லட்சம் செலவில் 2008 ஆண்டு குளத்தின் ஒரு பகுதி கட்டை அமைத்தது தந்தது. சிறுவர் பாதுகாப்பு நிதியம் 50லட்சம் செலவில் 2004 ஆண்டு வாய்கால் கட்டி தந்தார்கள். ஆனாலும் மழை காலங்களில் வெள்ளத்தண்ணீர் வீடுகளுக்குச் போவதும் நாங்க இடம் பெயர்வதும் தொடந்து கொன்டே தான் இருக்குது. எங்களுக் இருக்கிற ஒரேயொரு வேண்டு கோள் பள்ளமான குளத்தை மேடக்க வேண்டும்.ஏதாவது தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறோம்.என்ற எக்கத்துடன் கதைத்து முடித்தார்

வீதி அருகே தண்ணீர் பம்பியின் கீழ் கிட்டத்தட்ட முப்பது தண்ணீர் கலன்னள்  அடுக்கி வைக்கப்பட்டிருந்தது எதிரே மரத்தடியில் இருந்த முத்தமிழ் சனசமூக நிலைய தலைவர் அ.கஜேந்திரன் அவர்களை சந்தித்தோம் குடிநீர் பிரச்சனை பற்றிக் கேட்டோம்
“ரnனி குடிநீர் விநயோகம் செய்கின்றது ஞாயிற்று கிழமைகளில் மட்டும் தண்ணி வராது ஒரு குடும்பத்துக்கு 35லீற்றர் மட்டுமே பொதுக்கினருக்கு இடம் ஒதுக்கி இருக்கினம் பொதுக்கிணறு 7 இருக்கு நல்ல தண்ணி ஆனா கானது பிள்ள”என்றார்.
ஆவரிடம் விடைபெற்றுக் கொன்டு சென்றோம்
எங்க இருந்து வாரீங்க. பேப்பர் காரங்களே.எந்தப் போப்பர் எனக் கேட்டுக் கொன்டே அருகில் வந்தார் என்னை அறிமுகப்படுத்தினேன்
“நிழலுக்க வாங்கோ என்றார் இந்த இடத்தில வெள்ள தண்ணி குடி தண்ணிய விட பெரிய பிரச்சன இருக்கு இதுக்கு எத்தின வருஷமா தீர்வு கானரது என்டு எத்திதின பேர் வெளிக்கிட்டுட்டினம் ஒரு பிரியோசனமும் இல்ல என்டு கோபத்துடன் முனுமுனுத்தார். என்னத்த பற்றி சொல்கிறார் என்று ஆரம்பத்தில் புரியவில்லை நில்லுங்கோ என்டு சொல்லிக் கொன்டு என்னத் தான்டி தம்பி தம்பி என்று கூப்பிட்டுக் கொன்டே போனார் சிறிது நேரத்தில என்னொருவருடன் வந்தார் இவற்ற வீட்ட தான் நடந்தது “விடிய எழும்பிப் பார்த்தேன் எங்க வீட்டு முத்தத்தில பாதி எரிஞ்சுபோன தலை கிடந்ததுங்கோ..உந்த வீட்டில தான் தான் கால் கிடந்தது பாவம் அவள் ஒரு இளம் பொம்பிள பயந்து போய் கத்திக் கொண்டு ஓடி வந்தது அப்ப நேரம் விடியக்கால 5.00 மணி இருக்கும்…
அங்க பாருங்கோ ஒரு மதில் தெரியுதோ அது தாங்க சுடல என்றார்.
குடியிருப்புக்களுடன் சேர்நதே கானப்பட்டது சுமார் 50 மீற்றர் சுற்று வட்டத்தில் குடில்கள்; கானப்பட்டது. ஆங்ககாங்கே உடைந்த மதில்கள் பற்றைகள் என பார்க்கும் போது எதுவும் புலப்பட வில்லை இரண்டு தகரங்களை  தாங்கிக் கொன்டிருந்த உயரமான கம்பிக் கொட்டகை அங்கு சென்றோம்.
சுடலை குடியிருப்பிற்க்கு 2மஅ தூரத்திற்க்கு அப்பாலாவது அமைந்திருத்தல் அவசியம் .இருப்பினும் இக் கிராமத்தில் எது வித நடவடிக்கையும் அரசு எடுக்க வில்லை .அக் கிராமத்தவர்கள் மேலும் தெரிவிக்கையில்.கலாநிதி மனோன்மனி சன்முகதாஸ் அவர்கள் தமது மகனின் உடலை அடக்கம் செய்ததன் காரணமாக தற்போது இச் சுடலையை புனர்நிர்மானம் செய்து கொன்டு இருக்கிறார்கள்.
தனி ஒர் மனிதன் காட்டும் அக்கறை அரசுக்கு இல்லை என்றே தான் கூற வேண்டும்.இக் கிராம மக்கள் ஒன்றினைந்து கொடுத்த மனு பல முறை கொடுத்தும் எந்தப் பயனும் இல்லை என்று விசனம் தெரிவித்தனர். யுதார்த்ததையும் தான்டி ஒர் விடயத்தை யோசித்து பார்தால் சுடலைக்கு அன்மையில் இருப்பது சாதாரனமாக  உள்ள அனைவருக்கும் பயத்தை உண்டாக்கும் செயல் அதனை அவர்களே கூறினார்கள்.
ஓலிவாங்கியினை கையில் எடுத்ததுமே தேவையான விடயங்களை பேச மறந்து தமது பெருமைகளையும் அரசியல் விடயங்களையும் கதைப்பர்களே தவிர மக்களுக்கு தேவையான விடயங்களையோ மக்கள் சார்பாகவோ கதைப்பது இல்லை.சிங்கள அரசின் கைக்கூலிகளாக செயற்படுவதே பிரதான நோக்கமாக கொன்டுள்ளனர்.
இந்த நிலைக்கு வேறு எதுவும் குறிப்பிட வேண்டிய அவசியமில்லை . அதற்கு பதில் இந்தப் பாரதியார் பாடல் பொருத்தமாக இருக்கும்
நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறமு மின்றி,
வஞ்சனை சொல்வா ரடீ! - கிளியே!
வாய்ச் சொல்லில் வீரரடி.
கூட்டத்தில் கூடிநின்று கூவிப் பிதற்ற லன்றி,
நாட்டத்தில் கொள்ளா ரடீ! - கிளியே!
நாளில் மறப்பா ரடீ   

0 comments:

Post a Comment

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | cheap international calls