தமிழ் மக்களின் பாரம்பரிய பிரதேசங்களில் இருக்கின்ற தமிழர்களின் அரசியல் சமூக கலாச்சார பொருளாதர அடையாளங்கள் அனைத்தையும் அழிக்கும் பேரினவாத நடவடிக்கையில் தற்போது அரங்கேறிக் கொன்டிருக்கின்றது சிவாஜிலிங்கம் கருத்துத் தெரிவிக்கையில் சிலையாக நிற்பதற்க்கு கூட தமிழருக்கு உரிமையில்லை இந்த வசனத்தின் உள்ள ஆழமான கருத்தை ஆராய்ந்தால் புhயும் இன்றைய இலங்கைத்தமிழரின் நிலை சிங்கள இனவெறித்தனமான நடவடிக்கைகளை சர்வதேசத்துக்கு வெளிப்படுத்தியும் எந்தப்பயனும் இல்லை அது சரி சனல் 4 ஆவனப்படமும் வெளிவந்தது எந்தப் பிரியோசனமும் இல்லை சர்வதேசத்துக்கு சிங்கள கோர முகம் வெளி காட்டியதே தவிர அரசுக்கு எந்த நெருக்கடியும் ஏற்பட்டதாக தெரியவில்லை குடும்ப ஆட்சி மும்மரமாக இடம் பெறுகின்றது.
இயல்பு நிலை சகஜநிலை மீள்குடியேற்றம் புனரமைப்பு அபிவிருத்தி இவை இலங்கையிலும் இலங்கைக்கு வெளியில் வாழும் தமிழரிடையேயும் இன்று அதிகமாகப் பாவிக்கப்படும்...
Friday, December 30, 2011
Wednesday, December 21, 2011
"தங்கிலிஸ்" வார்த்தைகளால் தடுமாறும் ஊடகங்கள்

பல சிறப்புக்களை கொண்ட தமிழ் மொழி இன்று பல மொழிக் கலப்பினால் பாதிக்கப்பட்டு வருவதாக இன்று பலரும் குற்றம் சுமத்திக்கொண்டு இருக்கின்றனர். தமிழ் மொழியை வளர்ப்பதிலே ஊடகங்களின் பங்கு இன்றியமையாத ஒன்றாகும் ஊடகங்களால் பாரிய மாற்றங்களை ஏற்படுத்த முடியும்.
தமிழ் மொழியோடு பிற மொழி கலப்பதை தடுப்பதிலும், தமிழ் மொழியை வளர்ப்பதிலும் ஊடகங்களின் பங்கு அளப்பெரியது. தமிழ் ஊடகங்கள் தமிழ் மொழியை வளர்ப்பதனையும் தமது நோக்கங்களிலே ஒன்றாக கடைப்பிடிக்க வேண்டும். இன்று பல ஊடகங்களும் ஊடகவியலாளரும் தமிழ் மொழியை வளர்ப்பதிலே ஆர்வம் காட்டிவரும் நேரம் சில ஊடகங்களிலே தமிழ் பயன்பாட்டைப் பார்க்கின்றபோது எல்லோருமே கவலைப்பட வேண்டிய விடயமாக இருக்கின்றது.
நாகரிக உலகில், நாமும்...
Wednesday, December 14, 2011
ஊடக பயங்கரவாதம்

மிகவும் அருவருப்பான மனநிலையோடுதான் இக்கட்டுரையை எழுதத் தொடங்குகிறேன். தமிழில் வெகுமக்கள் ஊடகங்கள் இருக்கிற இருப்பைப் பார்த்து, ஒரு பத்திரிகையாளராக அருவருப்பைத் தவிர வேறெந்த உணர்வை அடைந்துவிட முடியும்?
உரிமை மீறல்களின், சாதிய மேலாதிக்கத்தின், வக்கிர சிந்தனைகளின், வன்ம உணர்வின் மொத்த உருவாக தமிழில் (ஆங்கிலத்திலும்தான்) வெகுமக்கள் ஊடகங்கள் இயங்கி வருகின்றன! இதில் எதுவும் எதற்கும் சளைத்ததில்லை! பத்திரிகை, காட்சி ஊடகங்கள், திரைத்துறை இப்படி எதுவும் வன்மங்களுக்கு விதிவிலக்கல்ல. வர்த்தக உத்தி என்பதை மீறி இவற்றுக்கு தனிப்பட்ட முறையில் நிறைய நோக்கங்களும் விருப்பு வெறுப்புகளும் இருக்கின்றன! வர்த்தக உத்தியோடு வக்கிர புத்தியும் இணையும்போது, எவையெல்லாம்...
திப்பு சுல்தான் ஆட்சியிலும் .............
கடந்த இரண்டாயிரம் ஆண்டு இந்திய வரலாற்றில் பார்ப்பனர்கள் ஆதிக்கம் இல்லாத அரசுகளைக் காண இயலவில்லை. இந்தியாவை அரசாண்ட இசுலாமியர் ஆட்சி நிருவாகங்களிலும் பார்ப்பனர்களின் ஆதிக்கம் இருந்தது என்பதை வரலாறு நமக்குக் காட்டுகிறது. அந்த வகையில் 1760 முதல் 1800 வரை மைசூரை ஆண்ட ஐதர் அலி, அவருடைய மகன் திப்பு சுல்தான் ஆகியோரின் ஆட்சிக் காலங்களில் அரசு நிருவாகங்களில் பார்ப்பனர் பெற்றிருந்த ஆதிக்கத்தை இக்கட்டுரையில் காணலாம்.ஐதர்அலி, திப்புசுல்தான் ஆகிய இருவரும் சிருங்கேரி சங்கராச்சாரிக்கு எழுதிய மடல்களையும், அவற்றுக்குப் பதிலளித்துச் சிருங்கேரி சங்கராச்சாரி எழுதிய மடல்களையும் ஆய்ந்து திருமதி ஜலஜா சக்திதாசன் என்கிற பார்ப்பன அம்மையார் ‘திப்பு மதவெறியரா?’ என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் நூலாக எழுதியுள்ளார். அந்நூலிலிருந்து சில முக்கியப் பகுதிகளை மட்டும் தமிழாக்கம் செய்து இங்கே தருகிறோம். ஐதர்அலி சிருங்கேரி சங்கராச்சாரிக்கு...