Friday, December 30, 2011

2010 ம் ஆண்டில் யாழ்ப்பாணத்தில் இடம் பெற்ற அநீதிகள்

தமிழ் மக்களின் பாரம்பரிய பிரதேசங்களில் இருக்கின்ற தமிழர்களின் அரசியல் சமூக கலாச்சார பொருளாதர அடையாளங்கள் அனைத்தையும் அழிக்கும் பேரினவாத நடவடிக்கையில் தற்போது அரங்கேறிக் கொன்டிருக்கின்றது சிவாஜிலிங்கம் கருத்துத் தெரிவிக்கையில் சிலையாக நிற்பதற்க்கு கூட தமிழருக்கு உரிமையில்லை இந்த வசனத்தின் உள்ள ஆழமான கருத்தை ஆராய்ந்தால் புhயும் இன்றைய இலங்கைத்தமிழரின் நிலை சிங்கள இனவெறித்தனமான நடவடிக்கைகளை சர்வதேசத்துக்கு வெளிப்படுத்தியும் எந்தப்பயனும் இல்லை அது சரி சனல் 4 ஆவனப்படமும் வெளிவந்தது எந்தப் பிரியோசனமும் இல்லை சர்வதேசத்துக்கு சிங்கள கோர முகம் வெளி காட்டியதே தவிர அரசுக்கு எந்த நெருக்கடியும் ஏற்பட்டதாக தெரியவில்லை குடும்ப ஆட்சி மும்மரமாக இடம் பெறுகின்றது.

இயல்பு நிலை சகஜநிலை மீள்குடியேற்றம் புனரமைப்பு அபிவிருத்தி இவை இலங்கையிலும் இலங்கைக்கு வெளியில் வாழும் தமிழரிடையேயும் இன்று அதிகமாகப் பாவிக்கப்படும் சொற்பதங்கள் இவையில்லாமல் அமைதியில்லை அமைதியில்லாமல் இவையில்லை

இயல்பு நிலைக்கு வழிகோலுமா? துப்பாக்கிகளின் முழக்கம் வேட்டுச்சத்தம் நின்று முன்றான்டுங்கள் கழிந்துவிட்ட போதிலும் வடக்குக் கிழக்கில் சுழுக நிலை இன்னும் திரும்பி விடவில்லை என்பதை இலங்கை அரசாங்கம் ஏற்று கொண்டுள்ளது என்பதை வடக்குக் கிழக்கில் தொடர்ந்து இராணுவ மயமாக்கல் இருந்து வருவதானது அந்த பகுதியில் இன்னும் அமைதி திரும்பவில்லை என்பதையும் எடுத்துக் காட்டுகின்றது இன்றும் யாழ்ப்பாணத்தில் மக்கள் விசேட பதிவுகளுக்கு உள்ளடக்கப்படுவது மக்கள் தம் வீடுகளுக்கு வரும் விருந்தினர்கள் பற்றி பாதுகாப்பு படையினருக்கு அறிவிக்க வேண்டியிருப்பதும் சமய சமூகங்களும் கூட்டங்கள் போன்றவை தொடர்பாக இராணுவத்தினருக்கு அறிவிக்க வேண்டியிருப்பது முக்கியமாக குறிப்பிட்ட வேண்டியிருப்பது உயர் பாதுகாப்பு வலயம் என்ற பெயரில் பெரும் அளவிலான நிலங்கள் தொடர்ந்தும் ஆக்கிரமித்து வருவது திட்டவட்டமான உண்மை முன்னால் இரானுவ அதிகரிகளக்கும் அரசுடன் தொடர்புடைய ஏனைய வர்களுக்கும்...வழங்குவதும் அத்து மீறிய சிங்களக் குடியிருப்பு போன்றவையும் தென்னிலங்கையில் வேலையாள்களை கொன்டுவந்து அபிவிருத்தி வேலைகளுக்கு பயன்படுத்துவதனால் குடாநாட்டு மக்கள் பொருளாதார கஸ்டங்களும் தொழில் இழப்புக்களும் ஏற்படுகின்றது அவர்கள் தொடர்நததும் ஏழ்மையில் வைத்திருக்கின்றது.

உண்மை என்னவெனில் வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு வெளியிலுள்ள வர்த்தகர்களுக்கான இயல்பு நிலை திரும்பிவிட்டது குறிப்பாக கொழும்பில் உள்ள பல சிங்கள வர்த்தகர்கள் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் யாழ்ப்பாணம் வந்து வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர் எனினும் யாழ் வர்த்தகர்கள் நீண்ட இடைவெளிக்கு பின்னர் அதாவது தமது வர்த்தகத்தை அவர்கள் விரிவாக்கியுள்ளனர் அது போன்று கெழும்மை மையமாகக் கொன்ட பல நிறுவனங்கள் தமது கிளைகளைத்; திறக்கும் பணியில் உற்சாகமாக ஈடுபட்டுள்ளனர் எனினும் யாழ் வர்த்தகர்கள் தமது வியாபாரத்தை விஸ்த்தரிக்கும் முயற்சிகளின் ஈடுபடாதது குறிப்பிடத்தக்கது

போர் முடிவுக்கு வந்து மூன்றான்டுகள் நிறைவடைந்த போதும் தற்போது யாழ் மாவட்டத்தில் 2000 குடும்பங்கள் வரை நலன்பரி நிலையங்கள் மற்றும் இடைத்தடங்கள் முகாம்களில் உள்ளனர் மொத்தமாக 12 ஆயிரத்து 459 குடும்பங்களைச் சேர்ந்த 44599 பேர் இன்னுமும் தமது சொந்த இடங்களில் மீள்குடியமர தமதாகின்றார்கள்
15500 குடும்பங்களைச் சேர்ந்த 44300 பேர் பலாலியில் இருந்து இடம்பெயர்ந்த பலாலி வாழ் மக்கள் சுண்ணாகம் மல்லாகம் பருத்துத்துறை போன்ற இடங்களில் உள்ள இடம் பெயர்ந்தோர் முகாம்களில் வாழ்கின்றனர்
மாதகல் காரைநகர் போன்ற கரையோரப் பிரதேங்களை சேர்ந்த மக்கள் தற்போதும் மீள்குடியமர்விற்க்காக காத்திருக்கின்றனர் மேலும் வடக்குக் கிழக்கில் இருக்கின்ற 65619 சதுர கிலோ மீற்றர் நில அளவில் 18880 சதுர கிலோமீற்றர் அளவில் தமிழ் மக்கள் 2009 மே மாதத்திற்க்கு பின் தமிழ் மக்களுக்குரிய நிலங்கள் 7000 சதுர மீற்றரை ஆயதப்படைகள் ஆக்கிரமித்து கொன்டது யாழ் குடாநாட்டில் ஏறத்தாள 10 பொதுமக்களுக்கு 1 இராணுவத்தினர் மூலம் இருந்து வருகின்றார் இவ்வாறு இரானுவத்தினரின் பெரும் இருக்கையானது அல்லது ஆக்கிரமிப்பானது வடக்கு கிழக்கில் மக்களுக்கு அதிக அசௌகரியத்தையும் கவலையையும் அழிக்கின்றது .

மீள்குடியமர்வு உதவிகளைப் பெற்ற அனைவரையும் சொந்த இடங்களில் மீள்குடியமராத போதும் மீள் குடியமர்ந்தவர்களாக காட்டுவதற்க்கான நடவடிக்கைகளில் பிரதேச செயலாளர்கள் ஏனோ மும்மரமாக அரசு கூறிவரும் நிலையில் யாழ் மாவட்டதால் மட்டும் இடம் பெயர்ந்த 4400 பேர் தமது சொந்த வீடுகளுக்கு திரும்பி செல்ல முடியாமல் இருக்கின்றனர்

மாதகலில் இருந்த 410 குடும்பங்கள் கரைநகரில் இருந்த 400 குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளனர் தற்போது இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளனர் யாழ் மாவட்டத்தில் வேறு பிரதேசங்களைச் சேர்ந்த 3500 குடும்பங்களும் தமது சொந்த வீடுகளுக்குச் செல்லவதற்க்காக காத்திருக்கின்றனர் பிரதான இடம்பெயர்ந்தோர் முகாமாக சபாபதிப்பிள்ளை நலன்புரி நிலையம் அமைந்துள்ளது இங்கு 270 குடும்பங்கள் தங்கியுள்ளன அடிப்படை வசதிகள் அற்ற நிலையில் தொடர்ந்தும் கஸ்ரப்பட்டு வருகின்றனர்

இதனை விட தெல்லிப்பலை மாவட்டபுரம் கொல்லங்கலட்டி கீரிமலை கருகம்பானை போன்ற இடங்களைச் சேர்ந்த மக்களுக்கு மீள்குடியமர்த்தப்பட்ட பேரில் நிர்;மூலமாக்கப்பட்ட இல்லங்களுக்கு அனுப்பபடுகின்றனர்

மீள்குடியமர்த்தப்பட்ட பகுதிகளுக்கு போனால் ஆளளவு வளர்ந்த புதர்கள் தானுள்ளது இந்திய அரசின் உதவியால் ஆரம்பிக்கப்பட்ட வீட்டுத்திட்டத்தில் தெல்லிப்பளை உதவி அரச அதிபர் பிரிவில் இன்னும் ஒர் வீடு கூட முழுமையாக கட்டி முடிக்கப்படவில்லை இத்தகைய நிலையில் அனுமதிக்கப்பட்ட பகுதிகளிலும் கூட முமுமையாக சாத்தியப்படவில்லை ஆனால் மீள்குடியமர்வுக்கான உதவியை பெற்றார்கள் என்ற பெயரில் ஒரே காரனத்துக்காக அத்தனை பேயரையும் மீள் குடியமதோர் பட்டியலில் இருந்து நீக்கக் கோறுகின்றது இரானுவம் இன்னும் இப் பிரதேச சேத விபரங்கள் என்னும் திரட்டப்படவில்லை ஆயினும் ஒன்று மட்டும் உண்மை வடக்குக் கிழக்கை புனரமைக்க பல்லாயிரக்கான கோடி ரூபாய் ஆயினும் இதுவரை கடுகளவே வடக்கு மற்றும் கிழக்கில் சென்றிருக்கின்றது

இவை ஒரு புறத்தே இருக்க அரசு தனது பணியை அரசியல் வாதிகள் மூலமும் இராணுவத்தினர் மூலமும் மேலதிகமாக செய்து வருகின்றது
பாரம்பரிய தமிழர் வாழ் பிரதேசங்களில் உள்ள மரபுhரிமைச் சொத்துக்கள் தமிழரை அடையளப்படுத்தும் சின்னங்கள் என அனைத்துமே திட்டமிட்டு அழிக்கப்படுகின்றது நடாத்தப்பட்ட காட்டுமிரான்டித்தனமான செயல் தமிழரை வேதனை உள்ளாக்கியுள்ளது


அதே போல 26.10.2010 தமிழ் மக்களின் உரிமைகளை வெண்றெடுப்பதற்க்காக காந்திய வழியில் போராடிய ஈழத்து காந்தியே அண்ணன் திலிபன் ஒவ்வொரு தமிழ் மக்களின் நெஞ்சங்களிலும் தெய்வமாக பூசிக்கப்பட்ட உயரிய மனிதன் மரணித்த மணிதனது நினைவுத்தூபியை காட்டுமிரான்டித் தனமாக இரவோடு இரவாக அழித்தனர்.

எல்லாவற்றிற்க்கு மேலாக 17 வது திருத்தச் சட்டத்தின் வடக்கும் கிழக்கும் தமிழர் வாழும் பிரதேசமாக அங்கிகரிக்கப்பட்டுள்ளது இன்றும் குறிப்பிடத்தக்க விடயமாக உள்ளது.
நுடந்து முடிந்த யுத்தத்திற்க்கு காரணமாக இருந்த அநீதிகளை இருந்து அகற்றுவதற்க்கு முயற்ச்சி எடுக்கப்பட்hல் நீதியுடன் கூடிய அமைதி நிலை நாட்டப்பட்டால் எதிர்ப்புணர்வுகள் மேல் எழுந்து புதிய முரண்பாடுகளுக்கு வலுக்கோலுவதாக இருக்கும் புலனாய்வினூடாக தீர்வுகளை முன்வைக்காது விடின் அதிகார துஸ்பிரயோகங்கள் விரிவடைந்து நாட்டில் ஏனைய பகுதிகளுக்கும் இது பரவி விட வாய்புண்டு



மீண்டும் அடுத்த ஆக்கத்துடன் சந்திக்கின்றேன்

0 comments:

Post a Comment

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | cheap international calls