
உயிரற்ற உடம்பாக இருந்த ஆதாமின் சுண்டு விரலை இறைவன் தீண்ட ஆதாம் உயிர்பெற்று எழுந்ததாகச் சொல்லும் பைபிள் காட்சியை மைக்கேல் ஏஞ்சலோ தன் துரிகையால் படைத்தபோது ஆதாம் இரண்டாவது முறையாக உயிர் பெற்றான்!
கலை என்பது என்ன என்பதை இவன் வடிக்கப்போகும் சிற்பங்களிலிருந்து ஓவியங்களில் இருந்தும் உலகம் அறிவதாக மைக்கல் ஏஞ்சலோவை படைக்கும் போது இறைவன் இப்படி அறிவித்ததாக ஒரு நம்பிக்கை யாதார்தம் தத்துரூபம் என பார்போரை மெய்சிலிர்க்க வைத்த இவரின் படைப்புக்கள் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கின்றன இவர் இல்லாத இந்த உலகிலும்
ஆதாமின் பிறப்பு என்ற ஓவியம் உலகத்தில் இருக்கும் அனைத்து ஓவியர்களையும்; நிலைகுலைய வைத்தது. அந்த அற்புதமான படைப்பு சிஸ்டைன் மாதா கோயிலின் வாட்டிகான்...