Monday, August 1, 2011

ஆதாமின் மறுபிறப்பு

உயிரற்ற உடம்பாக இருந்த ஆதாமின் சுண்டு விரலை இறைவன் தீண்ட ஆதாம் உயிர்பெற்று எழுந்ததாகச் சொல்லும் பைபிள் காட்சியை மைக்கேல் ஏஞ்சலோ தன் துரிகையால் படைத்தபோது ஆதாம் இரண்டாவது முறையாக உயிர் பெற்றான்!

கலை என்பது என்ன என்பதை இவன் வடிக்கப்போகும் சிற்பங்களிலிருந்து ஓவியங்களில் இருந்தும் உலகம் அறிவதாக மைக்கல் ஏஞ்சலோவை படைக்கும் போது இறைவன் இப்படி அறிவித்ததாக ஒரு நம்பிக்கை யாதார்தம் தத்துரூபம் என பார்போரை மெய்சிலிர்க்க வைத்த இவரின் படைப்புக்கள்  இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கின்றன இவர் இல்லாத இந்த உலகிலும்
ஆதாமின் பிறப்பு என்ற ஓவியம் உலகத்தில் இருக்கும் அனைத்து ஓவியர்களையும்; நிலைகுலைய வைத்தது. அந்த அற்புதமான படைப்பு சிஸ்டைன் மாதா கோயிலின் வாட்டிகான் மேற்கூரையில் உள்ளது இதனைப்போலவே வேறு 340 ஓவியங்கள் இருக்கின்றன இவற்றை ஓவியங்கள் என்று கூறுவதை விட ஓவியங்களின் டிக்ஷனரி என்று சொல்வது தான் பொருத்தமாக இருக்கும். மேற்கூரையில் வரையப்பட்ட மனித ஓவியங்கள் மனிதர்களைகப்போலவே காட்சியளிக்கின்றது முப்பரிமானத் தன்மையைப் பிரதிபலிக்கின்றது உட்காரும் போது குனியும் போது நிமிரும் போது ஓடும்போது  என்ற ஒவ்வொரு மனித அசைவுகளையும் ஒவியமாக ரெக்கார்ட் செய்த முதல் கலைஞன் மைக்கல் ஏஞ்சலோ அடிப்படையில் இவர் ஓவியர் அல்ல மகா சிற்பி
1504-ம் ஆண்டு மைக்கல் ஏஞ்சலோh தனது இருபத்தொன்பதாவது வயதில் செதுக்கிய பதின் மூன்று அடி உயரமான டேவிட் சிலை அதுவரை இருந்த நடைமுறையினை மாற்றியமைத்தது
அப்போது தான் சர்வ அதிகாரத்தோடு விளங்கிய போப் ஆண்டவரான இரண்டாம் யூலியஸ் இடம் இருந்து மைக்கல் ஏஞ்சலோவிற்க்குத் சம்மன் வந்தது சிஸ்டைன் தேவாலயத்தில் மேற்கூரைகளிலும் சுவர்களிலும் பைபிலின் காட்சிகளை ஓவியங்களாகத் தீட்ட போப் ஆண்டவர் ஏஞ்சலோவுக்கு கட்டளை பிறப்பித்தார் நான் சிற்பி ஓவியன் இல்லை என்னை விட்டுவிடுங்கள் என்ற ஏஞ்சலோவின் கெஞ்சல் போப் பாண்டவரின் காதில் விழவில்லை ஏஞ்சலோ வேண்டா வெறுப்புடன் தான் இந்த வேலையைத் தொடங்கினர் சுமார் பத்தாயிரம் சதுர அடியில் ஓவியங்களை வரையும் மாபெரும் பொறுப்பு பணியை நான்கு 5 ஓவியர்களை வைத்துக்கொண்டு ஏஞ்சலோ ஆரம்பித்தார் அவர் ஒரு முன்கோபக் காரர் சுற்றிவளைத்துப் பேசத்தெரியாதவர் அதனால் வேலைக்குத் சேர்ந்த வேகத்திலேயே உதவியாளர் விலகிட தேவாலயத்தின் உயர்ந்த உட்கூரைகளில் ஓவியம் வரையும் கஷ்டம் பணியைத் தனி ஒரு மனிதராக ஏஞசலோ மின்சார விளக்குகளை இல்லத அந்தக் காலத்தில் மொழுகுவர்தி வெளிச்சத்தின் சாப்பாடு தூக்கம் என்று எல்லாவற்றையும் மறந்து ஏஞ்சலோ தேவாலயத்தின் விதானத்தின் ஓவியம் தீட்டியபோது தூரிகையில் இருந்து சிதறிய வர்ணங்கள் அவர் கண்களை கசக்கி எடுத்தன இப்படி நாலு ஆண்டுகள் அவர் இரவுபகலாக  உழைக்க சிஸ்டைன் தேவாலயம் ஒர் ஒவியக்கூடமாக  மாறியது
இந்த அற்புதமான கலைஞன் இளைஞனாக இருந்த போது தான் செதுக்கிய டேவிட்சிலையப் போல இறுக்கமான உருண்டு திரண்ட தசைகளுடன் திடகாத்திரமாக இருந்தார் ஆனால் கடைசிக் காலத்தில் இவர் விசித்திரமான உபாதைகளினால் தவித்தார் சார்க்ஸைக் கலற்றினால் கால் தோலும் சோர்ந்து கழன்றது
திருமணம் மனைவி குழந்தை பார்காத ஏங்சலோ 1564 ஆண்டு மரணப்படுக்கையில் அருகே இருந்த நன்பரிடம்
நான் இந்த உலகத்துக்கு விட்டுச் செல்வது என்னுடைய படைப்புக்கள் என்ற குழந்தைகளைத்தான் என்னுடைய குழந்தைகள் என்று சொல்லவே அவற்றுக்குத் தகுதி இல்லை என்றாலும் என்றும் அவற்றில் நான் வாழ்வேன்.



0 comments:

Post a Comment

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | cheap international calls