Thursday, August 18, 2011

பிரான்ஸ் கலைகளின் தலைநகர் !

மன்னன் என்றால் இவன் அல்லவா மன்னன் என்று பல நாட்டு மன்னர்களும் பார்த்து வியந்த ஓர் அரசன் பிரான்ஸ் நாட்டின் பதிநான்காம் லூயி!
வெர்வெர்ஸேய்ல்ஸ்

வெர்ஸேய்ல்ஸ்




மாளிகைக்கு ஒர் மாநாகர்!

இதை மாளிகை என்பதை விட ஒரு பெரிய நகரம் என்று சொல்வதுதான் பொருத்தமாக இருக்கும்; மன்னன் லூயிக்குச் சூரியன் மீது பெருத்த ஈர்ப்பு!அதனால் மாளினையின் எங்கு திரும்பினாலும் அங்கே சூரியனின் ஒவியமோ சிற்பமோ நிச்சயமாக இருக்கும் காரணம் அவர் தன்னைத்தானே சூரிய ராஜா ளரn மiபெ என்று தான் அழைத்துக் கொண்டார்
இந்த அரண்மனையை நிர்மானிக்க சுமார் நாற்பதானடுகள் ஆயின.இதற்க்காக உழைத்த தொழிலாளர்களின் எண்ணிக்கை சுமார்
முப்பதாயிரம் இந்த அரண்மனை மன்னருக்கு என்று மட்டும் மொத்தம் நானூற்று  பதின்மூன்று கட்டில்கள் உண்டு கொடியிடை என்ற வர்ணணை இவரது மனைவி மரியாவிற்க்கு மட்டும் பொருந்தும் அவளின் இடை அளவின் சுற்றளவு பதின்மூன்றே அங்குலம் தானாம்!
முன்னனின் மனைவி கருவுற்று பிரசவ வலியில் துடித்துக் கொண்டுடிருந்த சமயம் அவளைப்பார்க்க வந்த மன்னன் அருகில்இருந்த
மருத்துவரிடம் எப்போது குழந்தை பிறக்கும்? என்று கேட்க்க மருத்துவர் என்ன சொன்னார் தெரியுமா…?”மன்னா நீங்கள் எப்போது பிறக்க வேண்டும் என்று கட்டளையிடுகிறீர்களே அப்போது..” அந்த அளவுக்கு கொடிகட்டிப் பறக்க வாழ்ந்த மன்னன் லூயிக்கும் அடிசறுக்கும் என்பதை 1667-ல் மூண்ட போர்கள் நீருபித்தன!


அஸ்தமனம் ஆரம்பம்!

தன்னுடைய வெட்டித்தனமான கௌரவத்துக்காக நெதர்லாந்து மீது லூயிபடையெடுத்தார் நியாயமே இல்லாமல் அண்டை நாடுகள் மீது மன்னன் லூயி அடுத்தடுத்து தொடுத்த போர்கள் பிரான்ஸ்ல் நிதிப்பற்றாக்குறையை ஏற்படுத்தியது இன்னொருபுறம் கிறிஸ்த்தவ மதம் துண்டு துண்டாக உடைந்த போது அதை லூயி! கையானண்ட விதம்..நாட்டில் ஒரு பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது இது போன்ற பிரச்சனைகள் சுமார் ஐந்து லட்சம் பேரை நாட்டைவிட்டே விரட்டியது இவர்கள் அத்தனை பேரும் தொழில்திறமை உடையவர்கள் அதனால் அவர்கள் நாட்டை விட்டு வெளியேறியதும் பிரான்ஸ் பெரிய பொருளாதார வீழ்சியைக் கண்டது!சுமார் எழுபத்திரண்டு ஆண்டுகள் பிரான்ஸை ஆண்ட மன்னன் லூயி இறந்த போது அடுத்த பேரனோ உயிருடன் இல்லை !அதனால் இவரின் ஐந்தே வயதான கொள்ளுப் பேரனே ஆட்சிப் பீடம் ஏறினான்பிரெஞ்சுப் புரட்ச்சி என்று சரித்திரம் குறிப்பிடப் போகும் ஒரு மாபெரும் புரட்சிக்கு தனது நாடு தயாராகிக் கொண்டிருக்கின்றது என்று அப்போது அந்த சிறுவனுக்கு தெரியாது


மந்திரிகளை நம்பாதே!பிரான்ஸ் நாட்டை லூயி ஆட்சி செய்த போது அதே பதினேழாம் நூற்றண்டில் மதகுருமார்களின் ஆதிக்கம் ஐரோப்பாவில் விஸ்வரூபம் எடுத்து மன்னர்களை அச்சுறுத்தி வந்தது ஆனால் மன்னன் மன்னன் லூயிபயப்பிடவில்லை “நாடு தான் நான்” என்று பகிரங்கமாகப் பிரகடனப்ப்படுத்தும் அளவுக்கு அவரிடம் அதிகாரம் பலம் செல்வம் என்று அத்தனையும் குவிந்திருக்கின்றது!
லூயி பிறக்கும்போது அவருக்கு பற்க்கள் முளைத்திருந்தன .இது நல்லதுக்கா? கெட்டதுக்காக? ஏன்று நாட்டு மக்கள் விடை தொரியாமல் ஒருவரை ஒருவர் அச்சத்தோடு கேட்டுக்கொண்டனர் லூயிக்கு ஐந்து வயதான போது இதற்க்கு விடை கிடைத்தது .லூயியின் தந்தை இறந்துவிட்டார் அதனால் அப்போது பிரதான அமைச்சராக இருந்த கார்டினல் மஸேரின் என்பவர் திறமையாக நிர்வாகம் செய்து நாட்டை வழி நடத்தினர்.
மஸேரின் தனது கடைசிக் காலத்தில் எந்த மந்திரியையும் நம்பாதே என்று மன்னன் லூயியிடம் புத்திமதி செல்லிவிட்டு இறந்து போனார்.இது மன்னனின் மனதில் ஆணிவேராகப் பதிந்திருந்தது!பிரான்ஸ் மன்னனாக  முடிசூட்டிக்கொண்டான் லூயி நாட்டின் எல்லா அதிகாரங்களையும் தனது கைகளில் வைத்துக்கொண்டதற்க்கு இதுவே காரணமாக அமைந்தது!
திட்டமிட்டபடி நகர்புறச்சாலைகள் தெருவிளக்கு பொதுமக்களின் பாதுகாப்புக்கு பொலீஸ்  என்று பல விடயங்களை உலகுக்கு அறிமுகப்படுத்தியவர் லூயி! தொழில் நிர்வாகம் வரிவசூல் ரானுவம் என்று அவரது ஆட்சியில் பல துறைகளிலும் பிரான்ஸ் முன்னோக்கி சென்று கொண்டிருந்தது கலையும் இலக்கியமும் அந்தக் கால ரோமாபுரிக்கு இணையாக செழிர்த்து வளர்ந்தன பிரெஞ்சு மொழிக்கு அறிஞர்களின் மொழி என்ற அந்தஸ்தும் கிடைத்தது.தனது நாட்டின் அமைச்சர்கள் தளபதிகள் நீதிபதிகள் குறுநில மன்னர்கள் என்று நாட்டின் முக்கியமான ஐயாயிரம் பேரை நெருக்கமாக கண்காணிக்க வசதியாக இவர்களுக்குப் பணிவிடை செய்ய இன்னும் பத்தாயிரம் பேரும் ஒரே இடத்தில் வசிப்பதற்க்கு ஒர்  இடம் வேண்டாமா? இதற்க்காக தலைநகர் பாரீஸ்லிருந்து முப்பது மைல் தூரத்தில் வெர்ஸேய்ல்ஸ் இடத்தில் அதுவரை உலகமே கண்டிராத அளவுக்கு மன்னன் லூயி! ஓர் பிரமாணடமான மாளிகையை எழுப்பினான் சிலிக்கவைக்கும் ஒவியங்கள் சிற்பங்கள் நீரூற்றுக்கள் என்று அவர் நிர்மாணித்த அந்த மாளிகையின் ஒவ்வொரு சதுர அங்குலமும் ஒர் கலைப் பெட்டகம்! மகாராணி தூங்கும் மஞ்சத்தில்கூட தங்க வேலைப்பாடு

0 comments:

Post a Comment

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | cheap international calls