Monday, August 1, 2011

போல்பார்டின் வெறியாட்டம்!

ஆட்சியாளன் நல்லவனாக இருந்தால் அவன் இறந்ததும் மக்கள் சோகத்தில் மூழ்கிப்போவர்கள் கொடுங்கோலனாக இருந்தால் நின்மதிப் பெருமூச்சு விடுவார்கள்
ஆனால் கம்போடிய மக்கள் ஆத்திரப்பட்டார்கள் அவர் இறந்தாலும் பரவாயில்லை அவர் பிணத்தையாவது தூக்கில் போடுவோம் !என்று கொதித்து தெழுந்தார்கள் அந்த அளவுக்கு பொடுங்கோளன் போல்பாட்.




போல்பாட்டுக்கு சீனாவின் மாசேதுங்தான் மானசீக குரு! 1975 லிருந்து 1979 ம் ஆண்டு வரை போல்பார்டின் ஆட்சியின் கீழ் கம்போடியா இருந்தது. ஏழை –பணக்காரன் என்ற வர்க்க வேறுபாடு இல்லாத ஆதர்சநாட்டை உருவாக்கப் போகிறேன் என்று சொல்லி போல்பாட் ஆடிய வெறியாட்டத்தைப்பார்த்து கம்போடியா மக்களின் முதுகெலும்பு சில்லிட்டுப் போனது
இப்படி  நடந்த போல்பாட்டின் நான்கு ஆண்டு கால காட்டுமீராண்டி ஆட்சியில் அந்த நாட்டின் கால்வாசி ஜனத்தொகை காலியானது கடைசியில் 1979ம் ஆண்டு வியட்நாமுக்கும் கம்போடியாவுக்கும் இடையே கசிந்து வந்த எல்லைப்பிரச்சனை பூதாகரமாக வெடிக்க வியட்நாம் துரப்புகள் கம்போடியாவிற்க்குள் புகுந்தன இதை அடுத்து போல்பாட்டும் அவரது படையினரும் நாலா திசைகளிலும் தப்பி ஓடினர்.


கும்போடியா விவசாய நாடு இந்த நாட்டுக்குத்தேவை நிலத்தில் இறங்கி கடுமையாக வேலை செய்யக்கூடிய உழைப்பாளிகளே தவிர சட்டையின் மடிப்பு கலையாமல் வேலை செய்யும் அரச ஊழியர்களோ வியாபரிகளோ ஆசிரியர்களோ இல்லை “..என்று அத்தனை பெயரையும் துப்பாக்கி முனையில் வயர்காடுகளை  நோக்கி ஓட ஓட விரட்டினார் போல்பாட்
வீடு சொத்து சுகம் எல்லாவற்றையும் அப்படி அப்படியே விட்டுவிட்டு ஆண்-பெண் குழந்தைகள் என்று அத்தனை பேரும் ஓடினார்கள்.

 கிராமங்களுக்கு குடி பெயர மறுத்தவர்களை போல்பாட்டின் படையினர் ஈவு இரக்கமே இல்லாமல் சுட்டுக் கொன்றார்கள்  ஒவ்வொரு நகரமாகப் போன இந்த இயந்திரத்துப்பாக்கிப் படையினர் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக படுத்திருந்த நோயாளிகளையும் கூட வயதானவர்களையும் கூட விட்டு வைக்கவில்லை ! அவர்களைத் தரதர வென்று இழுத்துவந்து வீதிகளில் போட்டுவிட்டு மருத்துவமனைகளையும் வெடிவைத்துத் தகர்த்தினார்கள் .

"பள்ளிக்கூடங்களில் படித்துக்கொன்டிருந்த பிஞ்சுக் குழந்தைகளையும் போல்பர்’டின் படைவிட்டு வைக்கவில்லை மக்களிடையே பீதியைக் கிளப்புவதற்காக குழந்தைகளின் இரண்டு கால்களையும் பிடித்து அரக்கத்தனமாக அவர்கள் கிழித்தெரிய ..."
மக்களுக்கு  பயத்தில் மூச்சுப் பேச்சே வரவில்லை !காகிதப்பணமே தேவையில்லாத ஒன்று என்று போல்பாட் சொல்ல கம்போடியாவின் எல்லா வங்கிகளையும் அவரது படையினர் தரைமட்டமாக்கினர்.தெருவில் பணம் மலைபோல் குவிக்கப்பட்டு கொளுத்தப்பட்டது





 கம்போடியாவைத் தனது பினாமியின் மூலம் வியட்நாம் ஆட்சி செய்ய ஆரம்பித்து ஒரு கட்டத்தில் காட்டில் மறைந்திருந்த  போல்பாட்.தனது படையினராலயே காடடுச் சிறையில் வைக்கப்பட்டு இருந்தார் 1998ம் ஆண்டு ஏப்பிரல் 18ம் திகதி அந்தக் காட்டுச் சிறையிலேயே இறந்து போனார்.



இருபது லட்சம் மக்களின் கொலைபற்றி நிருபர்கள் ஒருசமயம் கேள்வி எழுப்ப அதற்க்கு போல்பர்ட் சொன்ன பதில் “நான என்ன செய்தாலும் அதை என் நாடடின் நன்மைக்காகவே செய்தேன்..”

0 comments:

Post a Comment

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | cheap international calls