Saturday, November 5, 2011

இப்பிடியும் இருக்கலாமே.

நல்லவற்றை பேணிக்கொள்ளுங்கள புதுமை களிலும் நல்லவற்றை இணைத்துக் கொள்ளுங்கள். மாற்றம் ஒன்றுமட்டுமே மாறாத ஒன்று.

மாறிவரும் சுழலிற்கேற்ப்ப மாற்றம் நிகழ்ந்து வரும் 21ம் நூற்றாண்டிலும் உலகநாடுகளில் தனித்தன்மையான இடம் கொண்டு எல்லோராலும் போற்றி புகழ்ந்து பேசப்பட்டு எல்லோர் மனதிலும் வாழ்ந்து கொண்டிருக்கின்ற செம்மொழியாம் தமிழ்மொழி பேசும்   நம்மவர் கலாசாரம் இன்று ஆட்டம் கண்டுள்ளது. பரவிவரும் கொடிய நோய்களைவிட கலாசாரசீர்கேடு விரைவாக பரவுகின்றதை நாம் கண்கூடாக பார்க்கக் கூடியதாக உள்ளது என்றும் மணம் வீசிய பெருமைகள் இக்கலாசார சீர்கேட்டினால் சருகாகும் அபாய கட்டத்தை எட்டியுள்ளது என்றும் பலரும் பேசிக் கொள்கின்றனர்.

சினிமாவின் தாக்கத்தினாலும் வெளிநாட்டு உடை கலாசாரப் போக்கினாலும் இன்றைய இளைஞர்கள் தடம்மாறுகின்றனர.நல்வழிதாண்டி சேற்றுக்குள் இறங்குகின்றார்கள். பெற்றோர் பிள்ளைகளுக்கு சிறுவயதினிலே அவர்கள் கேட்பவை எல்லா வற்றையும் வாங்கிக் கொடுக்கி ன்றனர். இதனால் அவர்கள் தன்னிலை மறந்து வாகனங்களை மிகவிரைவாக ஓட்டி விபத்துக் குள்ளாகின்றனர். ஒவ்வொரு வருக்கும் கையில் ஒரு தொலைபேசி. சற்றுச் சிந்தித்துப்பாருங்கள் இதனால் ஏற்படும் இழப்புக்கள் யாருக்கென்று? பள்ளி செல்லும் காலத்தில் கைத் தொலைபேசி எதற்கு?; ஆபாச நோக்கிலான இணையம் எதற்கு? அதற்காய் நாம் இணையப் பாவனையோ இலத்திரனியல் உபகரணப் பாவனைகளையோ வேண்டாம் என்றுகூறவில்லை உலக முன்னேற்றத்திற்கேற்ப நாமும் வளர்ந்து செல்வது அவசியம்தான். ஆனால அதற் கொருஎல்லையுண்டு. வேலி தாண்டும் ஆடு பாதை மாறிச் செல்கிறது அதுபோன்று ஒவ்வோர் மனதிலும்  பிரச்சனைகள் பற்றிய விழிப்புணர்வு இருந்தாலே நம்மால் எம்மை வழிகாட்ட முடியும். பள்ளி மாணவர்கள் தகுந்தவழி காட்டலின்றி தம் வாழ்க்கையை வீணாக்குகின்றனர். நவ நாகரிக மோகம்இதவறானஉறவு முறைகள்இ முறைதவறிப்பிறந்து கொல்லப்பட்ட குழந்தைகள் இவை எல்லாம் இன்றைய இளம் சமுதாயத்தின் அளிவிற்கு காரணமாகின்றன. இன்றைய பொழுது நாகரிக போதையில் அவர்கள் மயங்கி இருந்தாலும் நாளைய பொழுது தெளிவுறும் போது அவர்களிடம் கண்ணீரோடான வாழ்க்கை யைத் தவிர வேறு எதுவும் மிகுதியாக இருக்காது. ஆனால் இதற்க்கு நாம் இளையோரை மட்டும்  முற்று முழுதாய் குறை கூறிவிட முடியாது.

திருமணம் நடந்து பல வருடங்களாய்;  இன்பமாய் வாழ்ந்த தம்பதிகள்   பலர் இன்று இணையப் ;பாவனையால் பிரிந்துள்ளனர். காலம்காலமாய்  இணைந்து வாழ்ந்த நம் முன்னையவர்; வழிகளின் பெருமைகளை மழுங் கடிக்கும் வகையில் இன்று  திருமணமாகி ஒரு வருட காலத்தினுள் தம்பதிகள் விவாகரத்துக்கோரி நீதிமன்றம் செல்வது வழமையாகியுள்ளது. அன்றைய காலகட்டத்திலும்  இவ்வாறான நிலைமைகள் காணப்பட்டது. இருப்பினும் இன்று  இள வயதுத் திருமணங்கள் பெற்றோரின் எதிர்ப்பைத் தாண்டி நடந்து வருவது நாம் அறிந்தது. அதனிலும் கொடுமை அவையும் ஒருசில வருடங்களில் விவாகரத்து வேண்டி நிற்பதே பெற்றோர் விவாகரத்து கோருகின்ற போது அவர்களின் பிள்ளைகளின் எதிர் காலம் கேள்விக் குறியாகின்றது.
 ஒரு காலத்தில் கல்விக்கு புகழ்பெற்று இருந்தது எம்மண்!  தற்போதைய நிலவரம் என்னவோ? தரவுகளை ஒப்பிட்ட அளவில் கவலைக் கிடம்தான். யாழ் மாவட்டத்தில் புகழ்பூத்த முன்னணிக் கல்வி நிலையங்களில் இன்றைய காலகட்டம் மிகவும் கொடுமையானது. ஆசிரியர் முன்னின்று பாடம் விளங்கப் படுத்தும் வேளையில் மாணவர்கள் தம் இருக்கையிலேயே இருந்து கைத்தொலைபேசி பாவிப்பது எஸ்.எம்.எஸ் அனுப்புவதுஇ முகப்புத்தக அரட்டைகள் என்பவை எல்லாம் இன்று நடைபெறுவது சாதாரணமாகிவிட்டது.

 குருவைக் கடவுளாக மதித்த நம்மரபு இன்று குருவை இழிவாக பார்க்கும் வகைக்குத் தள்ளப்பட்டுள்ளது வெட்கத்திற்கும் வேதனைக்கும் உரியவிடயமாகும். இவை தவிர இளம்வயது கற்பங்கள் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றன.  18 வயதிற்கு உட்பட்ட பள்ளி மாணவிகள் பலர் சீர்திருத்தப் ;பள்ளிகளில் இணைக்கப்பட்டுள்ளனர். சரியான அறிவு இல்லாமல் நாகரிகம் என்ற போர்வைக்குள் தவறாய்ப்போய் எதிர்காலக்கனவை தொலைத் துவிட்டு நிற்கிறார்கள் .இவை தவிர இன்று நம்மவர் மத்தியில் பரவிவரும் எயிட்ஸ் நோயால் எத்தனையோ இளையோர்கள் பீடிக்கப்பட்டு  இருக்கிறார்கள்;. இந் நிலை தொடர்ந்தால் நம் நாட்டின் நிலை தான் என்னவோ?
 இவ்வாறான நிலைமைகள் கடந்து சென்ற காலங்களில் இடம் பெறாமல் இல்லை. இருப்பினும் இன்று அவை சற்று அதிகரித்து வருவதை உணருகிறோம். சென்ற காலம் திரும்பிவராது. ஆனால் வரும்காலங்களை நமதாக்கலாம். போன காலத்தை நினைத்து வருந்துவதை விடுத்து வரும் காலத்தை சுபீட்சமாக அனைவரும் கைகோர்க்க வேண்டும்; . இவைபற்றி விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய பாரிய பொறுப்பு  சமூகத்தின் கைகளில் உண்டு. அதைவிட ஒவ்வொருவரும் தம்மைத்தாமே திருத்திக் கொண்டு புரிந்துணர்வுடன் செயற்பட்டால் வெற்றி இல்லாமல் போய்விடுமா?
      இளைஞரே நீண்ட பாரம் பரியம் மிக்க  தமிழர்களின் கலாச்சாரத்தை  நாகரீகமோகம் என்னும் வாள்கொண்டு அடியோடு சாய்த்து விடாமல்  கலாச்சார வழியில் நின்று விஞ்ஞான வளர்ச்சியில் ஈடுபாட்டை காட்டி  உலகத்திற்கேற்ப மாறுங்கள.; ஆனால் நவீனத்தில் உண்டான மோகம் உங்களை நிலைகுலைக் காமல் பார்த்துக்  கொள்ளுங்கள.; பழமைகளிலும் நல்லவற்றை பேணிக்கொள்ளுங்கள புதுமை களிலும் நல்லவற்றை இணைத்துக் கொள்ளுங்கள். மாற்றம் ஒன்றுமட்டுமே மாறாத ஒன்று. நல்லவற்றிற்காக உங்களை மாற்றிக்கொள்ளுங்கள். நம் கலாச்சாரம் நம்கையில் என உங்கள் மனதில் நிலை நிறுத்திக்;கொண்டு உங்கள் வாழ்க்கையை உதயமாக்குங்கள்.

0 comments:

Post a Comment

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | cheap international calls