Monday, November 7, 2011

பெண்களின் நிகழ்காலம் சமூகத்தின் எதிர்காலம் .women's day

மார்ச் 8ம் திகதி அதாவது சர்வதேச மகளிர் தினம். இத் தினம் கொண்டாடுவதற்கு காரணங்கள் இருக்கின்றனவா இருந்தாலும் குறிப்பாக இவ் திகதியை மட்டும் தேர்தெடுத்தார்கள்? சற்று வரலாற்றை பின்னோக்கி புரட்டிப் பார்த்தால் வியப்பூட்டும் செய்திகள் பல பல்வேறு இடங்களில் இருந்து பெற்றுக் கொண்டேன்.

அன்று பெண்கள் கைகளில் ஏந்திய பதாகைகளும் நடத்திய தொடர் போராட்டதிற்கும் கிடைத்த மிகப் பெரிய வெற்றியாகும்
1789 ஆம் ஆண்டு யூன் 14 ஆம் திகதி சுதந்திரத்துவம் சமத்துவம் மற்றும் பிரதிநிதித்துவம் போன்ற கோhரிக்கைகளை முன்வைத்து பிரஞ்சு புரட்சியின் போது பாரிசில் உள்ள பெண்கள் ஆர்பாட்டங்களை முன்னெடுத்தனர்.

அதாவது ஆணுக்கு சமமாக பெண்கள் இவ் சமூதாயத்தில் மதிக்கப்படவேண்டும் என்பதற்காகவும் உரிமைகள் பெறவேண்டும் என்பதற்காகவும் வேலைக்கு ஏற்ப ஊதியம் பெண்களிற்கான வாக்குரிமை பெண்னடிமைகளாக நடத்தப்படுவதில் இருந்து விடுதலை போன்ற கோரிக்கைகளை முன்வைத்து கிளர்சிகளை துவக்கினர் அக் கிளர்சியின் நோக்கத்தினை அனைத்து நாடுகளும் தெரியப்படுத்தும் வகையில் கையில் கிடைத்த ஆயுதங்களை தமது போராட்டத்தின் போது பாரிஸ் நகரில் ஒன்று கூடினர்

இருந்த போதும் அவ் நாட்டு அரசன் இப் போராட்டத்தை துரும்பாகவே எண்ணினான்”இவர்களை என் அதிகாரம் கொண்டு அடக்குவேன் என்றும் ஆர்பாட்டத்தில் ஈடுhட்டோரை கைது செய்வேன் எனவும் அறிவித்தார்” எனினும் நினைக்க முடியாத அளவான பெண்கள் ஓன்று திரண்டனர் கூடவே ஆண்களும் கலந்து கொள்ள உற்சாகம் கரைபுரள கோஷங்கள் வானைப்பிளக்க பதாதைகளை கைகளில் ஏந்திய வண்ணம் அரச மாளிகை நோக்கி நகர்ந்தது அந்த ஊர்வலம் .அரச மாளிகைக்கு முன்பு ஆர்பாட்டம் செய்த அனைவரையும் கைது செய்வோம் என்று மிரட்டிய அரசனின் மெய்காவலர்கள் இருவரை கூட்டதினர் தாக்கினர் இருவருமே அந்த இடத்திலேயே கொள்ளப்பட்டனர்
இதை சற்றும் எதிர்பாராத அரசன் லூயிஸ் பிலிப் அதிர்ந்து போனார்.

கோரிக்கைகளை பரிசீலிப்பேன் சாதமாகவும் அறிவிப்பேன் என்று ஆர்பாட்டத்தில் பொதித்தெழுந்தவர்களை சமாதானப்படுத்தினர். இருந்தும் இயலாது போனதால் அரசன் லூயிஸ் பிலிப் முடிதிறந்தார். இந்தச் செய்தி ஐரோப்பிய முழுவதும் ஓலிக்கவே அங்கும் கிளர்சிகள் வெடித்தன
தொடர்ந்து பல நாடுகளில் போராட்டங்கள் மலர்ந்தன கிரீஸில் ஜெர்மனி ஆஸதிரியா டென்மார்க் எனைய பல நதடுகளில் பெண்கள் கலந்து கொண்டு தொடர் போராட்டத்தை ,டைவிடாமல் தொடர்நதனர் ,தனால் ஆளும் வர்கம் என்று கூறலாம் அவர்கள் அசைந்து கூடுக்கத் தொடங்கினர்கள் இதே போல் ,த்தாலியில் பெண்கள் வாக்குரிமை பற்றிய கேரிக்கையை சமயம் பார்த்து முன்வைத்தனர்.

புpரான்சில் புருஸ்ஸியன் ,ரண்டாவது குடியரசை நிறுசிய லூயிஸ் பிளாங்  பெண்களை அரசசபை ஆலோசனைக் குழுக்களில் இடம் பெறவும் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கவும் ஓப்புதல் கொடுத்தார்.அந்த நாள் 1848ம் ஆண்டு மார்ச் 8ம் நாளாகும். பேண்களின் குரல் ஒலித்த பொன் நாள் அது.மேலும் பல நாடுகளில் தத்தம் உரிமைக்கான போராட்டங்கள் தொடர்ந்த வண்ணமே ,ருந்தன பல மகளீர் அமைப்புக்களும் தோன்றின.போராட்டங்கள் மூலம் தம் உரிமைகளை பெறலாம் என்ற சிந்தனை வேகமாக பரவியது .கனவாக ,ருந்த அனைத்தும் பலிக்க தொடங்கிய காலம் அது

 இதன் விளைவு 1910 இல் ஹேகனில் சர்வதேச பென்கள் மாசாடு கிளாரா தலைமையில் கூடியது.அதன் தொடர்பாக சர்வதேச மகளீர் அமைப்பு தோற்றுவிக்கப்பட்டது இந்த அமைப்பின் சார்பில் 1911ஆம் ஆண்டு மார்ச் 19ம் திகதி ஜேர்மனி டென்மார்க் மற்றும் சில ஐரோப்பிய நாடுகளில்லிருந்து வந்து கலந்துகெபண்ட கென் பிரதிநிதிகளின் முதல் சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடினர்.அந்த கூட்டத்தில் தான் லூயிஸ் பிளாங்க் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்க ஓப்புதல் அளித்த நாளான மார்ச் 08 நினைவு கூறும் தினமாக சர்வதேச மகளீர் தினமாகக் கொண்டாட முடிவு செய்து தீர்மானம் நிறைவேற்றினர்..

பென்கள் அன்று தொடங்கிய போராட்டங்கள் இன்று வரை ஏதோ ஓர் காரணங்களுக்காக நடந்தவண்ணமே இருக்pன்றன காலத்தின் தேவைக்கேற்ப தங்களது சவால்களை முன்வைத்து போராடி வருகின்றனர். பெண்கள் இன்றும் ஆணாதிக்கதின் நிழலில் தான் இருக்கின்றார்கள் . சர்வதேச நாடுகளில் இன்று பெண்கள் ஆண்கள் பெண் சமத்துவம் பேணப்படுகின்றன  ஆனால் எமது தமிழ் சமூகத்தில் பிரிவினைகள் அடக்குமுறைகள் பல்வேறு கோணங்களிலும் இன்றும் அரங்கேரிக்கொண்டு தான் ,ருக்கிறது .பெண்களுக்காக அன்று ஏற்படுத்தப்பட்ட கட்டுப்பாடுகள் 21நூற்றாண்டிலும் எந்தவித மாற்றமும் இன்றி தொடர்வது தான் ஆச்சரியம் அன்று நல்ல நோக்கத்துக்காக துவங்கப்பட்ட பல விடயங்கள் காலப்போக்கில் திசை மாறின இன்று கட்டுபாடுகள் என்ற பெயரில் முற்றுமுலுதான அடக்குமுறை கையாலப்படுவது தான் ஏதற்க்கு?. இன்றைய யாழ்பாணத்தில் தனியாக ஓரு பெண் இரவு நடமாட முடியுமா…,வற்றிற்கு பதில் தோடும் போது தான் பெண்களின் நிலை புரியும்.  

0 comments:

Post a Comment

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | cheap international calls