Monday, November 7, 2011

ஆதரவற்ற சிறுவர்களை அரவணைக்கும் தியாகி அறக்கொடை நிறுவனமும்


யாழ்-நல்லூர் இராசவீதியில் அமைந்துள்ள தியாகி அறக்கொடை நிலையம் நலிவுற்ற மக்களின் மேம்பாட்டிற்காக கல்விஇ சுகாதாரமஇ; பொருளாதாரம் போன்ற துறைகளில் சில திட்டங்களை செயற்படுத்தி வருகின்றது. இது பற்றிய மேலதிகதகவலுக்காக  திரு விஸ்வலிங்கம் சுந்தரமூர்த்தி என்பவரை சிறுவர் இல்லத்தில் நேரில் சந்தித்து செவ்வி கண்டோம். இதன் போது கருத்து தெரிவித்த அவர் தற்போது இந் நிறுவனம் ஒன்பது செயற்திட்டங்களை நடை முறைப்படுத்தி வருகிறது. இந்த நிறுவன மானது அரசசார்பற்ற நிறுவனமாக பதிவு செய்யப் பட்ட போதும்  தனிமனித உழைப்பில் இயங்குகின்ற பொது நிறுனமாக கொள்ளப் படுகின்றது. இந் நிறுவனத் ;தின் இயக்குனராக திரு வாமதேவன் தியாகேந்திரன் பணி யாற்றுகின்றார்.

கடந்த காலங்களில் நாட்டில் ஏற்பட்ட யுத்தம் மற்றும்  இயற்கை அனர்த்தங்களால் ஏராளமான இழப்புக்கள் ஏற்ப்பட்டுள்ளன. இவ் இழப்புக்களால் பெரும்பாலன சிறுவர்கள்  தாய் தந்தையை இழந்து சிறுவர் இல்லங்களில் வாழ்கின்றனர். இவ்வாறான சிறுவர் இல்லங்கள் பெரும்பாலும் அரசசார்பற்ற நிறுவனங்களின் கைகளிலேயே தங்கியுள்ளது. நீதிமன்ற உத்தரவின் பெயரில் தெரிவுசெய்யப்படும் சிறுவர்களே இங்கு இணைக்கப்படுவார்கள.;  தற்போது இங்கு 8 தொடக்கம் 18 வரையான வயதெல்லை உடைய 20 பெண்பிள்ளைகள் உள்ளனர.;  அவர்களில் நான்கு பிள்ளைகளுக்கு தாய் தந்தை இருவரும் இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இறந்து விட்டார்கள.;  இன்னும் சிலர் வறிய குடும்பத்தை சேர்ந்தவர்களாகவும் மற்றும்பெற்றோரால் கவனிக்க முடியாத சூழ் நிலையில் உள்ளவர்களும் இங்கு காணப்படுகின்றனர்.இவர்கள் அனைவருக்கும் தேவையான வசதிகள் செய்யப்பட்டுள்ளது. இதில் இருவர் யாழ். இந்து மகளிர் கல்லுரியிலும் ஏiயோர் யாழ.; கனகரத்தினம் மகா வித்தியாலயத்திலும் கல்விகற்கிறார்கள். பாடசாலைக்கு இந் நிறுவன வாகனத்தில் செல்வார்கள.; பிரத்தியேக வகுப்புக்கள் தினமும் இந்த இல்லத் திலேயே நடை பெறும் என்றும் தெரிவித்தார்;.

மேலும் இல்ல பராமரிப் ;பாளர்  ஒவ்வொரு இடமாக காட்டிய வாறே சென்று கொண்டிருந்தார். அந்த வகையில் பிரத்தியேக வகுப்புக்கள் நடைபெறும் இடம் அதன் பின் அனைவரும் சேர்ந்து படிக்கும் இடம் முதலிய வற்றைப்பாரத்தோம்.  அதைத்; தொடர்ந்து அங்குள்ள சிறுவர்கள் அனைவரையும்   பராமரி ப்பாளர் அறிமுகப்படுத்தி வைத்தார். சிறுவயதிலேயே குடும்பத்தினரை விட்டுப் பிரிந்திருக்கும் ஏக்கம் அவர்களின் மனதில் இருப்பதை அவதானிக்க கூடியதாக இருந்தது.

0 comments:

Post a Comment

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | cheap international calls