சந்திரனில் கொட்டிக் கிடக்கும் டைட்டேனியம் உலோகம் : பூமியை விட 10 மடங்கு அதிகம் உள்ளது
சந்திரனில் ஆய்வு மேற்கொள்ள அமெரிக்கா ஒரு விண்கலம் அனுப்பியுள்ளது. அதில் பொருத்தப்பட்டுள்ள சக்தி வாய்ந்த கேமராக்கள் சந்திரனின் மேற்பரப்பை போட்டோக்களை எடுத்து பூமிக்கு அனுப்பியுள்ளது. 7 விதமாக எடுத்து அனுப்பப்பட்ட அவற்றை அமெரிக்க விஞ்ஞானிகள் ஆய்வு செய்தனர். அதன் மூலம் ஏற்கனவே கடந்த 1972-ம் ஆண்டு அப்பல்லோ-17 விண்கலம் மூலம் சந்திரனுக்கு சென்ற விண்வெளி வீரர்கள் அங்கு வெட்டி எடுத்து வந்த பாறைகளில் பரிசோதனை மேற்கொண்டனர். அதில் டைட்டேனியம் டி என்ற உலோக தாதுக்கள் இருப்பது தெரியவந்தது. டைட்டேனியம் என்பது உருக்கு உலோகத்தை விட மிகவும் உறுதியானது. இந்த உலோகம் பூமியில்...
Thursday, October 13, 2011
Sunday, October 9, 2011
அடுத்த வினாடி
அடுத்த வினாடி எது வேண்டுமானாலும் நடக்கலாம், அழுது கொண்டிருப்பவன் சிரிக்கலாம், சிரித்துக் கொண்டிருப்பவன் அழலாம் ஏனெனில் கண நேரங்களிலெல்லாம் உலகம் மாற்றமடைந்து கொண்டே இருக்கிறது. நாம் எவளவு நாட்கள் வாழ்வோம் என்பதில் கூட எந்த நிச்சயமும் இல்லை, இதில் நானே பெரியவன் நானில்லையென்றால் எதுவும் நடக்காது என்று நினைத்துக் கொண்டிருப்பதில் எந்த பிரயோஜனமும் இல்லை, நமக்கு கொடுக்கப்பட்ட நிமிடங்களில் செய்ய வேண்டிய நல்ல செயல்களை, தேவையான காரியங்களை செய்து கொண்டிருப்பதை விட்டுவிட்டு எல்லாம் நானே என்று வாழ்ந்து கொண்டிருந்தால் அது அர்த்தமற்ற வாழ்க்கையாகும்.
இன்னும் இரண்டு தலைமுறைகள் சென்றால் நம்மை யாரென்று யாருக்குமே தெரியாது. அர்ப்பமான மனிதனாக வாழ்வதும் போதாமல்,...
பெண்கள் வாழ்க்கையில் சிறக்க ஐந்து விஷயங்கள்!
நம்பிக்கை
கணவன்-மனைவி இருவரும் ஒருவரையொருவர் நன்றாக புரிந்து கொள்ள வேண்டும். ஒருவரை மற்றவர் முழுமையாக நம்ப வேண்டும். தங்களுக்கென்று தனிபட்ட திறமை உள்ளது என்பதை உணர வேண்டும். அதை செயல்படுத்திக் காட்டும் வாய்ப்பினை ஒருவருக்கொருவர் உருவாக்கிக் கொடுக்க வேண்டும். வருங்காலத்தில் என்னவெல்லாம் நடக்க போகிறதோ என்று பயம் கொள்வதை விட, நிகழ்கால வாழ்க்கையை வெற்றி கரமாக நடத்திக் காட்டுவது தான் புத்திசாலித்தனம். முதுமை என்பது எல்லோருக்கும் வருவது தான். அதற்காக நாற்பது வயதை நாம் தாண்டி விட்டோம். உடல் சோர்வு தெரிகிறது. 50 வயதிற்கு பின் முட்டுவலி தெரிகிறது. 60 வயதிற்கு பின் தோல் சுருங்கி போய்விடுமே என்றெல்லாம் பயந்து கொண்டிருக்கக் கூடாது. எந்த வயதிலும் மனதை...
Saturday, October 8, 2011
2012ல் உலகம் அழியுமா
2012-ஆம் ஆண்டில் அதுவும் டிசம்பர் மாதத்தில் உலகம் அழிந்துவிட அதிக வாய்ப்புகள் இருப்பதாகச் சொல்லி பல்வேறு செய்திகள் உலகை சுற்றி வந்து கொண்டிருக்கின்றன.
மாயன் காலண்டர், எகிப்து பிரமிடின் அமைப்பு, பூமியின் சுழலில் ஏற்படப்போகும் மாற்றம், எதிர்பார்க்கப்படும் படுபயங்கர சூரியப் புயல் இப்படி பல காரணங்களை அட்டவணைபடுத்திக் கொண்டே போயிருக்கிறார்கள்.
இன்றைய நிலவரப்படி இது போன்ற டூம்ஸ்டே கதைகளுக்கு மக்களிடையே அதிக கிராக்கி உண்டு. இத்தகைய கதைகள் சீக்கிரமாக சூடுபிடித்து மக்களிடையே பிரபலமாகின்றன. TEOTWAWKI என புதிதாக ஒரு சொல்லையே உருவாக்கியிருக்கிறார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.
இதன் விரிவாக்கம் The End Of The World As We Know It என்பதாம்....
நோபல் பரிசு ( இயற்பியல்,அமைதிக்கான)
இயற்பியல்: அமெரிக்கர்கள் மூவருக்கு நோபல் பரிசு
பிரபஞ்சம் விரிவடைவது தொடர்புடைய கண்டுபிடிப்புக்காக இயற்பியலுக்கான நோபல் பரிசு அமெரிக்க விஞ்ஞானிகள் மூவருக்கு செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டது.அமெரிக்காவின் சால் பெர்ல்மட்டர், அமெரிக்காவில் பிறந்து ஆஸ்திரேலியாவில் ஆராய்ச்சி மேற்கொண்டுவரும் பிரையன் ஷுமிட், அமெரிக்காவின் ஆடம் ரீஸ் ஆகியோர் 2011-ம் ஆண்டுக்கான விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.இது குறித்து நோபல் கமிட்டி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: சூப்பர்நோவா என்றழைக்கப்படும் வெடிக்கும் நட்சத்திரங்களை 1990-கள் முதல் அவர்கள் மூவரும் ஆய்வு செய்துள்ளனர். மிகத் தொலைவிலுள்ள 50 சூப்பர்நோவாக்கள் எதிர்பார்த்ததைவிட வலுவற்ற அளவிலேயே ஒளியை உமிழ்வதை...
அப்பிள் நிறுவனத்தின் ஸ்தாபகர் ஸ்டீவ் ஜொப்ஸ்
அப்பிள் நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவரான ஸ்டீவ் ஜொப்ஸ் புற்றுநோய் பாதிப்பினால் (04/10/2011) அன்று காலமானார்.
உலகளாவிய தொழில்நுட்ப துறையில் அமெரிக்காவின் அப்பிள் நிறுவனம் புகழ் பெற்றதாகும்.
1976ல் தமது நண்பர் வோஸ்னியாக்குடன் அப்பிள் நிறுவனத்தை துவங்கினார் ஸ்டீவ் ஜொப்ஸ்.
அப்பிள் நிறுவனத்தில் i-Phone மற்றும் i-Pad போன்ற உலகப் புகழ்பெற்ற தயாரிப்புகளை அறிமுகப்படுத்திய பெருமை ஸ்டேவ் ஜொப்ஸை சாரும்.
நீண்டகாலமாக அப்பிள் நிறுவனத்திற்காக உழைத்த இவர் கடந்த 2004ஆம் ஆண்டுமுதல் கணைய புற்றுநோயினால் அவதிப்பட்டு வந்தார்.
உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையிலேயே தனது பதவியை கடந்த ஓகஸ்ட் மாதம் ராஜினாமா செய்துள்ளதாக அறிவித்திருந்தார்.
இந்நிலையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு கடந்த சில ஆண்டுகளாக சிகிச்சை
உலகத்தலைவர்கள் பலர் இவரது மறைவிற்கு தங்களது அனுதாபங்களைத் தெரிவித்து வருகின்றனர்....
ஞாபக சக்தியை குறைக்கும் புகை பழக்கம்
இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள நார்தம பிரியா பல்கலைக்கழகம் சார்பில் சமீபத்தில் புகைப் பழக்கம் உள்ளவர்களிடம் உள்ள ஞாபகசக்தி பற்றி ஆய்வு நடத்தப்பட்டது. புகைப்பிடிக்கும் சமயத்தில் அவர்களுக்கு ஞாபகசக்திக்கான சில போட்டிகள் நடத்தப்பட்டன. அப்போது அவர்களால் சரிவர பதில் அளிக்க முடியவில்லை. புகை பிடிக்காதவர்கள் ஞாபக சக்திக்கான போட்டியில் அதிக புள்ளிகள் பெற்றனர். ஆய்வு நடத்திய பேராசிரியர் டாக்டர் டாம் பெடிபர் மேன் கூறும்போது, இங்கிலாந்தில் 1 கோடி பேரும், அமெரிக்காவில் 4.5 கோடி பேரும் புகை பிரியர்களாக உள்ளனர். அவர்கள் புகை பழக்கத்தில் இருந்து விடுபட்டால் நல்ல உடல்நிலையைப் பெற முடியும். தங்களது வேலையையும் சிறந்த முறையில் செய்ய...
Friday, October 7, 2011
மாரத்தான் ஓட்டத்தின் வரலாறு
கிரீஸ் நாட்டில் உள்ள மாரத்தான் என்ற இடத்திலிருந்து தொடங்கியதால் இந்த ஓட்டத்திற்கு இப்பெயர் வந்தது. மாரத்தானின் தொடக்க வரலாறு சுவாரசியமானது. கி.மு.490ல் இது தொடங்கியது. பெர்சிய சக்ரவர்த்தி டேரியசின் படையெடுப்பைத் தோற்கடிக்க, ராணுவ உதவியை வேண்டி, 48 மணி நேரம் இடைவிடாது, ஏதென்ஸ் நகரிலிருந்து ஸ்பார்ட்டா நகருக்கு - மூச்சுப் பிடிக்க ஓரே ஓட்டமாக ஓடினான் - பிடிபிடிஸ் என்ற கிரேக்க வீரன். காடு, மலை, நதியெல்லாம் கடந்து ஓடினான் இவன்.
மாரத்தான் என்ற இடத்தில் பின்பு டேரியஸை எதிர்த்து சண்டையும் போட்டு, மீண்டும் ஏதென்சுக்கே ஓடினான் - வெற்றிச் செய்தியைக் கூற. இது 24 மைல் தூரம். ஓட்டமாக ஓடி, “மகிழ்ச்சியான செய்தி, தோழர்களே! நாம் வென்றோம்!”...
புவி வெப்பம் அதிகரிப்பது ஏன்?
குளிர் நாடுகளில் தாவரங்களுக்கு அதிகமான வெப்பம் தேவைப்படுவதால் கண்ணாடி வீட்டிற்குள் (green house) செடிகளை வளர்க்கிறார்கள். கண்ணாடி வெப்பத்தை எளிதில் கடத்துவது இல்லை. கண்ணாடி வீட்டிற்குள் புகுந்த வெப்பம் வெளியேற வழியில்லாமல் அங்கேயே தங்கிவிடுகிறது. இதனால் கண்ணாடி வீட்டிற்குள் எப்போதும் வெப்பம் அதிகமாகவே இருக்கும்.
நாம் வாழும் பூமியைச் சுற்றிலும் இருக்கும் காற்று மண்டலம்தான் சுவாசிப்பதற்கு ஆக்சிஜனை வைத்திருக்கிறது. பூமி அதிகமாக சூடாகிவிடாமலும், அதிகமாக குளிர்ச்சியடைந்து விடாமலும் சம நிலையை இந்த காற்று மண்டலம்தான் ஏற்படுத்துகிறது. நம்முடைய உடலுக்கு சட்டை எப்படியோ அதைப்போல பூமிக்கு காற்று மண்டலம்தான் சட்டையாக இருக்கிறது. காற்று மண்டலத்தில் ஆக்சிஜனுடன்,...
பவளப்பாறைகள்-அழிவின் விளிம்பில்
அழிவின் விளிம்பில் பவளப்பாறைகள்
மு.குருமூர்த்தி
பவளப்பாறகள் அழிந்து போவதற்கான காரணங்கள் வெளிச்சத்துக்கு வரத்தொடங்கியுள்ளன. புவிவெப்பமடைவதும் கடல்நீரில் அமிலத்தன்மை கூடுவதும் பவளப்பாறைகளின் அழிவுக்கு முக்கியமான காரணங்கள் என்று ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. பவளப்பாறைகளை அழியாமல் காப்பது எப்படி என்பதும்கூட இந்த ஆய்வுகளில் அடங்கும்.
பவளங்கள் என்பவை மிகச்சிறிய உயிரினங்கள். மரபியல் ரீதியாக ஒத்த உருவமுடையவை. இவை தாவர உயிரிகளை உண்டு வாழக்கூடியவை. பவளங்கள் தங்களைத் தாங்களே காப்பாற்றிக் கொள்ளக்கூடியவை. வளர்சிதைமாற்றத்தின்போது கால்சியம் கார்பனேட் என்னும் வேதிப்பொருளை இவை சுரக்கின்றன. கால்சியம் கார்பனேட் படிவுகளின்மீதுதான் பவளங்கள் அமர்ந்துகொள்கின்றன. இவ்வாறு...
Thursday, October 6, 2011
பழ நெடுமாறனின் -தமிழீழம் சிவக்கிறது
தமிழீழம் சிவக்கிறது
தமிழீழம் சிவக்கிறது புத்தகத்தின் அட்டை
இலங்கை இந்திய ஒப்பந்தம் -ராஜிவ் காந்தியினால் கைசாத்திட்ட போது
தமிழீழத்தின் வரலாற்றுப் பதிவாய் விளங்கும் இந்நூல் 1993-ஆம் ஆண்டு அச்சிடப்பட்டது. பழ. நெடுமாறன் தடா-வில் கைது செய்யப்பட்ட போது இந்நூலின் பிரதிகள் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் அவ்வழக்கு முடிந்த பிறகு, 2002-ஆம் ஆண்டு அந்நூலை வெளியிடுவதற்கான தயார் நிலையில் இருந்த போது, 2002 ஏப்ரலில் அந்நூல் மீண்டும் பறிமுதல் செய்யப்பட்டு, சட்டவிரோதமான நூல் என வழக்கு தொடரப்பட்டது. அந்நூலை ஏற்றுமதி செய்யவிருந்ததாக சாகுல் அமீது கைது செய்யப்பட்டார்.
அண்மையில் நூல் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில்; தீர்ப்பு வெளிவந்துள்ளது. இந்நூல் சட்டத்திற்கு...
ஹென்றி டி டாலெஸ் லாட்ரெக் (1864 - 1901)
விலைமகளிரைக் கருப்பொருளாகக் கொண்டு வரைந்த வண்ணமயமான போஸ்டர்கள் மூலம் 19ம் நூற்றாண்டின் இணையற்ற ஓவியர்களில் ஒருவராக இன்றளவும் நினைவும் கூறப்படுவர் ஹென்றி டி டாலேஸ் லாட்ரெக்.
மிக மிக வசதியான குடும்பத்தில் பிறந்தவர் லாட்ரெக். இவருக்கு சிறுவயதிலேயே இரு கால்களிலும் ஊனம் ஏற்பட்டு, அதன் காரணமாக வளர்ச்சி குன்றியவராகக் காணப்பட்டார். ஓவியராக மாறிய பின்பு, லாட்ரெக் பெரும்பான்மையான தனது நேரத்தை இரவு விடுதிகள், டான்ஸ் கிளப் மற்றும் விபசார விடுதிகளில் செலவிட்டார். குடிப்பது, விலைமகளிரை மையமாகக் கொண்டு ஓவியம் வரைவது ஆகியவையே இவரது தினசரி வாழ்க்கையாக இருந்தது. 26ம் வயதில் ஓவியத் துறையில் புகழின் உச்சத்தை அடைந்தார். ஆனால் மிதமிஞ்சிய குடிப்பழக்கம் அற்புதமான...
Tuesday, October 4, 2011
முதல் திரைப்படம்

சாப்ளின் நடித்த முதல் சினிமா
சார்லி சாப்ளின் நடித்து வெளிவந்த முதல் சினிமா மேக்கிங் ய லிவிங் (Making a Living) என்பதாகும். வாழ்க்கைக்கான வழி என்ற தலைப்பு கூட அவரைப் பொறுத்தமட்டில் சரியானதாகவே அமைந்ததது. படம் 1914 பிப்ரவரி மாதம் 2ஆம் தேதியன்று வெளிவந்தது. பெரிய வெற்றியைப் பெறவில்லை. ஆனால் ஒப்பந்த நடிகரான அவருக்கு வராச் சம்பளம் தந்தாக வேண்டுமே! படத் தயாரிப்பாளர் படம் எடுக்கத் தொடங்கினார். வெறுமனே உட்கார வைத்துச் சம்பளம் தர முடியாதல்லா? படப்பிடிப்புக் குழுவினருடன் நடிகரை அனுப்பிவிட்டார். தயாரிப்பாளர் உடன் செல்லவில்லை.
லாஸ் ஏஞ்சல்சுக்குப் பக்கத்தில் வெனிஸ் என்ற ஊரில் பிரபலமான மோட்டார் பந்தயம் இப்பந்தயத்தில் சில குழந்தைகளும் பங்கெடுத்துக்...
சேக்குவேரா -கிளர்ச்சிக்குப் பிந்தைய கட்டம்
குவேரா வழங்கிய அருங்கொடை - கிளர்ச்சிக்குப் பிந்தைய கட்டம்
புதுவை ஞானம்
கியூபாவுக்கு வெளியே FOCO கிளர்ச்சிக் குழுக்களைத் துவக்கியதன் மூலம் குவேராயிசம் செல்வாக்கு பெற்றிருந்தது. கியூபாவுக்குள் அது சோஷலிசக் கட்டுமானத்தின் மூலம் ஒரு மார்க்சீய லெனினியக் கட்சியின் முன் மாதிரியாக இருந்தது. போக்கோ கிளர்ச்சி குழுக்களின் வாரிசு என்ற முறையில் கட்சியின் முன்னணி போராட்டத்தைக் கையிலெடுத்துக் கொண்டது. சாராம்சத்தில் குவேராயிசம் இரண்டு கட்டமான ஆனால் தொடர்ச்சியான புரட்சிக்கு தன்னை ஈடுபடுத்திக்கொண்டிருந்தது. அதில் போக்கொ கிளர்ச்சிக் குழுக்கள் முதல் கட்டத்தின் முன்கையெடுக்கும் செயற்பாட்டுடனும், இரண்டாம் கட்டத்தில் மார்க்சீய லெனினிய கட்சியின் முன்னணி செயற்பாட்டுடனும்...
உலகை உலுக்கிய பேரழிவு(ஹிரோஷிமா - நாகசாகி)
ஹிரோஷிமா - நாகசாகி
ஜப்பான் நாட்டிலுள்ள ‘ஹிரோஷிமா’ நகரத்தின் மீது 1945 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 6 ஆம் தேதி அமெரிக்கா அணுகுண்டு போட்டது. அந்த அணுகுண்டிற்கு அமெரிக்கா விளையாட்டாக வைத்த பெயர் ‘சின்னப் பையன்’ (little boy) என்பதாகும் மூன்று நாட்கள் கழித்து ‘நாகசாகி’ நகரத்தின் மீது அணுகுண்டைப் போட்டனர். அதற்கு ‘குண்டு மனிதன்’ (fat man) என்று பெயர் சூட்டினர். இந்த அகோரக் குண்டு வீச்சினால் ஏற்பட்ட சாவும் சேதமும் இன்றுவரை துல்லியமாக மதிப்பிட முயன்றும் முடியவில்லை. வரலாறு காணாத சேதாரம் என்று மட்டுமே சொல்ல முடியும்.
சுமாராகக் கணக்கிட்டதில் ஹிரோஷிமாவில் மட்டும் குறைந்தபட்சம் 1,40,000 பேர் இக்குண்டு வீச்சினால் இறந்திருக்கிறார்கள் என்றும்...
கலீலியோ கலிலி
கலீலியோ கலிலி
வானத்தை பாருங்கள், அது உண்மையைச் சொல்லும்.
டெலஸ்கோப் மிகவும் நம்பகமானது. போப்பைக் காட்டிலும்''
- கலீலியோ கலிலி
இந்த ஆண்டை சர்வதேச வானியல் ஆண்டாக (International Year of Astronomy 2009) ஐ.நா. சபை அறிவித்துள்ளது. 400 ஆண்டுகளுக்கு முன்பு 1609-இல் கலீலியோ தனது தொலைநோக்கி மூலம் கோள்களை ஆராய்ந்து கூறினார். "சூரியக் குடும்பத்தின் மையப்பகுதி சூரியன். அதனைச் சுற்றியே பூமி வலம் வருகிறது”. இதனை நம்ப மறுத்த மதவாதிகளுக்காக பொதுமக்களுக்கு முன் செய்முறை விளக்கத்தை அளித்தார். தனது கண்டுபிடிப்பை மக்கள் மத்தியில் தொலைநோக்கி வழியே பார்க்கச் செய்தார். வானை நோக்கி தொலைநோக்கியைத் திருப்பிய அந்த ஆண்டிலிருந்து நவீன அறிவியலின் பெரும் புரட்சி...
மூளையில் பதியும் நினைவுகள்......???????
மீன்வாடையுடன் சேர்ந்து வீசும் உப்புக் காற்றைப் பிளந்தபடி, கட்டுமர முகப்புக் கட்டையை மார்பில் ஏந்திக் கொண்டு, அலைகளைத் தாவித் தாவி சமாளித்துக் கொண்டு நான் ஓடுவேன். கழுத்தாழம் தண்ணீர் வந்ததும் கரை நோக்கிப் பாயும் அலையில் மரக்கட்டைமீது படுத்துக் கொண்டு அலை ஓடுவேன். எத்தனை முறை விளையாடினாலும் இந்த விளையாட்டு எனக்குச் சளைக்காது. உப்பு படிந்து காய்ந்துபோன என் முதுகு இழுத்துக் கட்டிய டமாரத்தோல் மாதிரி இருக்கும்.
பெரிய அலை ஒன்றில் தலை குப்புற கவிழ்ந்தேன். சமாளித்து நிமிர்வதற்குள் இன்னொரு அலை உள்ளே இழுத்துக் கொண்டது. மரண பயம் என்றால் என்ன என்பது எனக்கு அந்த நிமிடத்தில் தெரிந்தது. மரக்கட்டையோடு கரையில் துôபாக்கி வீசி என்னைக் காப்பாற்றியது ஒரு அலை. நாற்பத்தைந்து...