Saturday, October 8, 2011

அப்பிள் நிறுவனத்தின் ஸ்தாபகர் ஸ்டீவ் ஜொப்ஸ்


அப்பிள் நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவரான ஸ்டீவ் ஜொப்ஸ்  புற்றுநோய் பாதிப்பினால் (04/10/2011)  அன்று காலமானார்.

உலகளாவிய தொழில்நுட்ப துறையில் அமெரிக்காவின் அப்பிள் நிறுவனம்  புகழ் பெற்றதாகும்.

1976ல் தமது நண்பர் வோஸ்னியாக்குடன் அப்பிள் நிறுவனத்தை துவங்கினார் ஸ்டீவ் ஜொப்ஸ்.

அப்பிள் நிறுவனத்தில் i-Phone மற்றும் i-Pad போன்ற உலகப் புகழ்பெற்ற தயாரிப்புகளை அறிமுகப்படுத்திய பெருமை ஸ்டேவ் ஜொப்ஸை சாரும்.

நீண்டகாலமாக அப்பிள் நிறுவனத்திற்காக உழைத்த இவர் கடந்த 2004ஆம் ஆண்டுமுதல் கணைய புற்றுநோயினால் அவதிப்பட்டு வந்தார்.

உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையிலேயே தனது பதவியை கடந்த ஓகஸ்ட் மாதம் ராஜினாமா செய்துள்ளதாக அறிவித்திருந்தார்.

இந்நிலையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு கடந்த சில ஆண்டுகளாக சிகிச்சை

உலகத்தலைவர்கள் பலர் இவரது மறைவிற்கு தங்களது அனுதாபங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

குறிப்பாக ஒபாமா ” அமெரிக்காவின் சிறந்த கண்டுபிடிப்பாளர்களில் இவரும் ஒருவர் எனவும், வித்தியாசமாக யோசிக்கத் தைரியமுள்ளவர் எனவும், தன்னால் உலகை மாற்றமுடியும் என்பதை நம்புபவர் எனவும் அதை செய்து காட்டும் திறமையும் கொண்டவர் என தனது அஞ்சலி அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பல பிரபலங்கள் தங்களது அனுதாபத்தினை வெளியிட்டுள்ள இத்தருணத்தில் அவரின் வாழ்க்கைப்பயணங்களை மீட்டிப் பார்ப்பது சாலப்பொருந்துவதாக அமையும்.
இந்நிலையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு கடந்த சில ஆண்டுகளாக சிகிச்சை பெற்று வந்த 56 வயதான ஸ்டீவ் ஜொப்ஸ்  கலிபோர்னியாவில் உயிரிழந்ததாக அப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது.
நேற்றை முன் தினம் அப்பிள் நிறுவனத்தின் தயாரிப்பான ஐ போன் 4 எஸ் (Iphone 4S) வெளியாகியுள்ள நிலையில் இம் மரண செய்தியை அப்பிள் நிறுவனத்திற்கு பெரும் துயராகவே இருக்கும் என்பது உண்மை.

ஸ்டீவ் ஜொப்ஸின் வாழ்நாள் மற்றும் அப்பிள் நிறுவன வரலாற்றில் சில முக்கிய தருணங்கள்
1955: ஸ்டீவன் போல் ஜொப்ஸ் பெப்ரவரி 24 ஆம் திகதி பிறந்தார்.
1972: ஜொப்ஸ் போர்ட்லேண்டில் உள்ள ரீட் கல்லூரியில் இணைந்தார் எனினும் முதல் செமஸ்டரிலேயே அதனை நிறுத்திவிட்டார்.
1976: அப்பிள் கணனியை ஏப்ரல் முதலாம் திகதி உருவாக்கினார். த அப்பிள் ஐ கணனி 666.66 அமெரிக்க டொலர்களுக்கு விற்பனைக்கு வருகின்றது.
1977: அப்பிள் நிறுவனம் கூட்டு நிறுவனமாக்கப்படுகின்றது. த அப்பிள் ஐஐ கணனி அறிமுகப்படுத்தப்படுகின்றது.
1978: ஸ்டீவ் ஜொப்ஸின் மகள் லிஸா பிறந்தார்.
1980: அப்பிள் நிறுவனம் முதல் முறையாக தனது பங்குகளை வெளியிட்டது (ஐய்ண்ற்ண்ஹப் ல்ன்க்ஷப்ண்ஸ்ரீ ர்ச்ச்ங்ழ்ண்ய்ஞ்). 110 மில்லியன் அமெரிக்க டொலர்களை திரட்டிக் கொண்டது.
1982: அப்பிள் நிறுவனத்தின் வருடாந்த வருவாய் 1 பில்லியன் அமெரிக்க டொலர்களாய் அதிகரிக்கின்றது.
1983: அப்பிளின் லிசா கணனிகள் விற்பனைக்கு வருகின்றன.
1984: அப்பிளின் மெகிண்டொஸ் கணனிகள் விற்பனைக்கு வருகின்றன.
1985: நிறுவனத்தின் அப்போதைய பிரதம நிறைவேற்று அதிகாரி ஸ்கூலி மற்றும் ஜொப்ஸ் இடையே மோதல், ஜொப்ஸ் மற்றும் வொஸ்னிஹக் ஆகியோர் அப்பிளில் இருந்து பதவி விலகுகின்றனர்.
1986: ஜொப்ஸ் நெக்ஸ்ட் என்ற நிறுவனத்தை ஆரம்பித்ததுடன், உயர் தொழிநுட்பம் கொண்ட கணனிகளை பல்கலைக்கழகங்களுக்கென தயாரிக்கத்தொடங்குகின்றார்.
1989: முதலாவது நெக்ஸ்ட் கணனி விற்பனைக்கு செல்கின்றது. விலை 6,500 அமெரிக்க டொலர்கள்.
1991: அப்பிள் மற்றும் ஐ.பி.எம் நிறுவனங்கள் இணைந்து கணனிகளுக்கான புதிய மைக்ரோபுரசசர்கள் மற்றும் மென்பொருட்களை உருவாக்கவுள்ளதாக அறிவித்தன.
பவர்புக் என்றழைக்கப்படும் காவிச்செல்லக்கூடிய மெக்ஸ் கணனிகளை அறிமுகப்படுத்துகின்றது.
ஜொப்ஸ் லொரன் பவல் என்பவரை சட்டப்படி மணக்கின்றார்.
1996: ஸ்டீவ் ஜொப்ஸ் மற்றும் அவரது குழு இணைந்து உருவாக்கிய நெக்ஸ்ட் நிறுவனத்தின் இயங்குதளத்தினை 430 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு கொள்வனவு செய்யும் திட்டத்தினை அப்பிள் அறிவிக்கின்றது.
1997: ஜொப்ஸ் அப்பிள் நிறுவனத்தின் இடைக்கால பிரதம நிறைவேற்று அதிகாரியாக பதவியேற்கின்றார்.
2000: ஜொப்ஸ் அப்பிள் நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரியாக பதவியேற்கின்றார்.
2001: முதல் ஐ பொட் விற்பனைக்கு வருகின்றது. ஐ டியூன்ஸ் மென்பொருளை வெளியிடுகின்றது.
2004: கணையப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஜொப்ஸ் சத்திரசிகிச்சைக்கு முகங்கொடுக்கின்றார்.
2006: ஜொப்ஸ் டிஸ்னி நிறுவனத்தின் அதி கூடிய பங்குகளைக் கொண்ட தனிநபராகின்றார்.
2007: அப்பிள் தனது முதல் கையடக்கத் தொலைபேசியான ஐ போனை வெளியிடுகின்றது.
2009: ஜொப்ஸ் சிறுநீரக மாற்று சத்திரசிகிச்சைக்கு முகங்கொடுக்கின்றார்.
2011 ஜனவரி 17: ஜொப்ஸ் 2 ஆவது முறையாக மருத்துவ விடுமுறையில் செல்வதாக அறிவிக்கின்றார்.
2011 ஓகஸ்ட் 24: ஜொப்ஸ் தான் அப்பிளின் நிறைவேற்று அதிகாரி பதவியிலிருந்து விலகுவதாக அறிவிக்கின்றார்.
2011 ஒக்டோபர் 5: ஜொப்ஸ் காலமானதாக அறிவிக்கப்படுகின்றது.
இதேவேளை உலகம் பூராகவும் மக்கள் பலர் தங்கள் அஞ்சலிகளை செலுத்திய வண்ணமுள்ளனர்

0 comments:

Post a Comment

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | cheap international calls