Thursday, October 13, 2011

சந்திரனில் கொட்டிக் கிடக்கும் டைட்டேனியம் உலோகம் : பூமியை விட 10 மடங்கு அதிகம் உள்ளது

சந்திரனில் கொட்டிக் கிடக்கும் டைட்டேனியம் உலோகம் : பூமியை விட 10 மடங்கு அதிகம் உள்ளது


சந்திரனில் கொட்டிக் கிடக்கும் டைட்டேனியம் உலோகம் : பூமியை விட 10 மடங்கு அதிகம் உள்ளது
சந்திரனில் ஆய்வு மேற்கொள்ள அமெரிக்கா ஒரு விண்கலம் அனுப்பியுள்ளது. அதில் பொருத்தப்பட்டுள்ள சக்தி வாய்ந்த கேமராக்கள் சந்திரனின் மேற்பரப்பை போட்டோக்களை எடுத்து பூமிக்கு அனுப்பியுள்ளது.
7 விதமாக எடுத்து அனுப்பப்பட்ட அவற்றை அமெரிக்க விஞ்ஞானிகள் ஆய்வு செய்தனர். அதன் மூலம் ஏற்கனவே கடந்த 1972-ம் ஆண்டு அப்பல்லோ-17 விண்கலம் மூலம் சந்திரனுக்கு சென்ற விண்வெளி வீரர்கள் அங்கு வெட்டி எடுத்து வந்த பாறைகளில் பரிசோதனை மேற்கொண்டனர்.  
அதில் டைட்டேனியம் டி என்ற உலோக தாதுக்கள் இருப்பது தெரியவந்தது. டைட்டேனியம் என்பது உருக்கு உலோகத்தை விட மிகவும் உறுதியானது. இந்த உலோகம் பூமியில் ஒரு சதவீதம்தான். அதாவது மிக குறைவாக உள்ளது. ஆனால் சந்திரனில் அவை கொட்டிக் கிடக்கின்றன. அதாவது 10 மடங்கு அதிகம் இருக்கிறது. இவை பாறைகளில் மறைந்து கிடக்கின்றன.   டைட்டேனியம் தவிர இரும்பு தாதுக்களும் மறைந்துள்ளன.
இந்த தகவலை அமெரிக்காவின் அரிசோனா பல்கலைக்கழக விஞ்ஞானி மார்க் ராபின்சன் தெரிவித்தார். பிரான்சில் உள்ள நான்டெஸ் என்ற நகரில் நடந்த மாநாட்டில் தனது ஆய்வறிக்கையை தாக்கல் செய்து இந்த தகவலை வெளியிட்டார்.

0 comments:

Post a Comment

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | cheap international calls