Saturday, October 8, 2011

ஞாபக சக்தியை குறைக்கும் புகை பழக்கம்

ஞாபக சக்தியை குறைக்கும் புகை பழக்கம்
 
இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள நார்தம பிரியா பல்கலைக்கழகம் சார்பில் சமீபத்தில் புகைப் பழக்கம் உள்ளவர்களிடம் உள்ள ஞாபகசக்தி பற்றி ஆய்வு நடத்தப்பட்டது. புகைப்பிடிக்கும் சமயத்தில் அவர்களுக்கு ஞாபகசக்திக்கான சில போட்டிகள் நடத்தப்பட்டன.
 
அப்போது அவர்களால் சரிவர பதில் அளிக்க முடியவில்லை. புகை பிடிக்காதவர்கள் ஞாபக சக்திக்கான போட்டியில் அதிக புள்ளிகள் பெற்றனர். ஆய்வு நடத்திய பேராசிரியர் டாக்டர் டாம் பெடிபர் மேன் கூறும்போது, இங்கிலாந்தில் 1 கோடி பேரும், அமெரிக்காவில் 4.5 கோடி பேரும் புகை பிரியர்களாக உள்ளனர்.
 
அவர்கள் புகை பழக்கத்தில் இருந்து விடுபட்டால் நல்ல உடல்நிலையைப் பெற முடியும். தங்களது வேலையையும் சிறந்த முறையில் செய்ய முடியும் என்றார்.

0 comments:

Post a Comment

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | cheap international calls