Sunday, July 31, 2011

மனித மிருகத்தின் வெறியாட்டம்

இடி அமின்.உச்சரிக்கும் பேதே நம்மை உலுக்கிப் போடுகின்ற பெயர்! முந்நூறு பவுண்டு எடையுடன் ஆரடி முன்று அங்குல உயரமான ராட்சதன்  மாதிரி தோற்றமளித்த இவன் ஐந்து லட்சம் பேரைக் கொன்று குவித்தவன்
இடி அமின்



நீர்யானையின் கல்லீரலிலிந்து மனித மாமிசம் வரை இவர் சாப்பிட்டிருக்கிறான் என்று இவருடன் நெருங்கிப் பழகிய ராணுவ அதிகாரிகள் வாக்குமூலம் கொடுத்திறுக்கிறார்கள்.
பாலியல் நோய் வரும் அளவுக்கு பல பெண்களோடு கொட்டம் அடித்தவன் .நடு ரோட்டில் நிர்வாணமாக ஓடியவர் என்ற பெருமையும்  இடி அமீனுக்கு உண்டு இடி அமீன் ராணுவத்தில் பணியாற்றிய சமயம் சக ராணுவ வீரனின் மனைவியோடு உல்லாசமாக இருந்தபோது கையும் களவுமாக பிடிபட மேலே சொன்ன சம்பவம் இடம் பெற்றது.



இவர் 1924 ஒகஸ்ட் 16 2003 உலகின் அதி பயங்கர கொடுங்கோலரின் ஒருவன் .



1971 முதல் 1979 வரை உகண்டாவை ஆட்சி செய்தான் இவன் பிறந்த ஆண்டு தொடர்பில் சரியான தகவல் உறுதிப்படுத்தப்படவில்லை 1924 ஆம் ஆண்டு அல்லது 1925 இல் பிறந்திருக்கலாம் என்ற கருத்தும் உண்டு இவனது ஆட்சி பற்றிய விபரங்கள் பல பயங்கரமானவை ஆகும் .


இவன் ஒரு சாதாரன குடும்பத்தில் பிறந்த விவசாயியின் மகன் தொடக்கக் கல்வி மட்டுமே பயின்ற இவன் தாயால் வளர்க்கப்பட்டான் 1946 இல் சாதாரன சமையல் காரனாக ரானுவத்தில் சேர்ந்து  பின்னர் படிப்படியாக லெப்டினன்ட் ஆக பதவி பெற்றான் 1962 இல் உகண்டா ஆங்கிலேய ஆட்சியில் இருந்து சுகந்திரம் பெற்றது பின்னர் நடந்த சம்பவங்கள் உலக வரலாற்றில் ரத்தத்தில் எழுதப்பட்டன!


1966 இல் இடி அமின் மேஜர் ஜெனரல் ஆக ஒபோடே அசால் நியமிக்கப்பட்டான் பின்னர் இருவரும் சேர்ந்து உகண்டாவை அளிவுப் பாதைக்கு கொண்டு செல்லத் தொடங்கினர் 1971 இல் ஒபோடே அரசை தனது ராணுவ பலத்தால் முற்றுகையிட்டு இடி அமின் சர்வாதிகாரியாக உகண்டாவின் ஆயுட் கால அதிபராக தன்னை அறிவித்துக் கொண்டான்
வெள்ளையர்களை தனது பல்லுக்கு சிப்பந்திகளாகவும் குடை பிடிக்க வைத்த இடி அமின் தனது ஹீரோ இமேஜ்ஜை கறுப்பின மக்களிடையே தக்க வைத்துக் கொன்டான்



1972 இல் தனது கனவில் கடவுள் தோன்றியதாகவும் …உகண்டா ஒரு  கறுப்பர் நாடு எனவும் அதில் உள்ள ஆசியர்களும் குறிப்பாக இந்தியர்களும் பாகிஸ்தானியர்களும் உடனே நாட்டை விட்டு ஒட வேண்டும் என்று கூறினான் தொண்ணூறு நாட்கள் கெடு விதிக்கப்பட்டு ஆசியர்கள் வெளியேற்றப்பட்டனர்


அதிகார வெறி இவனை ஆட்டிப்படைத்தது ராணுவத்தில் சமையல் காரனாக இருந்த இடி அமீனுக்கு முக்கிய பொறுப்புக்களும் பதவி உயர்வும் கொடுத்து நாட்டின் தளபதி பதவிக்கு உயர்தியவர் ஜனாதிபதி “மில்டன் ஓபோட்டை” வளர்த்த கடா மார்பில் பாய்வது போல அவரையே இவன்; இரத்தம் தெறிக்க ராணுவப் புரட்சி நடத்தி ஆட்சியினை விட்டு விரட்டினார்  ஈவு இரக்கமற்று மில்டன் ஓபோட்டின் ஆதரவாளர்களையும் தன்னை எதிர்க்கும் எல்லா கறுப்பின பிரிவினரையும் கொன்று குவிக்கத் தொடங்கினான்.


அந்த ஆண்டு மட்டும் கொன்றவாகளின் எண்ணிக்கை ஐந்து லட்சத்திற்கும் அதிகமாவர்கள்! அடியோடு ஒரு சில கிராமங்கள் அழிக்கப்பட்டன கொல்லப்பட்டவர்களின் சடலங்கள் நைல் நதியில் வீசப்பட்டு பின்னர் அவைகளை அடைப்பு ஏற்படாமல் வெளியே எடுத்துப்போட வேலையாட்கள் நியமிக்கப்பட்டனர்.


இது  நடந்தது 1971 72 க்கும் இடைப்பட்ட காலப்பகுதியில்! இடி அமீன் வீழ்திய ஜனாதிபதி சோஷலிஸ் சித்தாந்தத்தின் பக்கம் சாயக்கூடியவர் என்ற சந்தேகம் இருந்தால் அமெரிக்காவும் இங்கிலாந்தும் கூட அப்போது இடி அமீனை ஆதரித்தன

எழுதப்படிக்ககூடத் தெரியாத இடி அமீன் கைகளுக்கு உகன்டாவின் தலையெழுத்தையே எழுதக்கூடிய அதிகாரம் கிடைத்த போது அவர் அடித்த கொட்டங்களுக்கு அளவே இல்லை Commenvelth நாடுகளின் தலைவன் இங்கிலாந்தை வென்ற வீரன் ஸ்கொட்லாந்தின் கடைசி மன்னன்..டாக்டர் என்று வாய்க்கு வந்த பட்டங்களை எல்லாம் அவர் தனக்குத் தானே வழங்கிக் கொண்டார். தனது அகலமான மார்பே மறையும் அளவுக்கு ராணுவத்தின் எத்தனை பதக்கங்கள் உண்டோ அத்தனையும் எடுத்துச் சட்டையில் குத்திக் கொண்டார்!



தன்னைப்போல எழுதப்படிக்கத் தெரியாதவர்களையே அமைச்சர்களாகவும் ராணுவ உயர்அதிகாரிகளாகவும் நியமித்தார் அடுத்தடுத்து நாட்டின் பொருளாதாரமும் நிர்வாகமும் சீர்குலைந்தன .நாட்டு மக்கள் இடி அமீனுக்கு எதிராகப் போர்க் கொடி தூக்கும் நிலை உரு வெடுத்தது
உகண்டா நாட்டில் இருக்கும் கிறிஸ்தவர்களுக்கு எதிராக வன்முறையைத் தூண்டினார்.இதில் கிறிஸ்தவ மத ஆர்ச்பிஷப் உட்பட பல்லாயிரம் பேர் படுபொலை செய்யப்பட்டனர் .




தனது கைகளில் இருந்து ஆட்சி நழுவி வீடுமோ என்ற பயம் இடிஅமினுக்கு வர அவனது கொலைவெறி அதிகமாகியது தன்னை எதிர்த்துப் பேசிய காபினெட் அமைச்சர்களையே அவர் கொன்றார் அதிகார வாழ்கையிலும் அவர் கொலைவெறியுடன் தான் இருந்தான்


1978 இல் உள்நாட்டு கலகங்களும் பொருளாதார பிரச்சனைகளும் உகண்டாவில் தலைவிரித்தாடத் தொடங்கியது அதனை மூடி மறைக்க அண்டை நாடான தான்சானியாவை வம்புக்கு இழுத்தபோது இடி அமீனுக்கு கெட்ட காலம் தொடங்கியது அந்த நாட்டின் சில பகுதிகளை ஆக்கிரமிப்பு செய்தார் .அதைத் எதிர்த்த ஜனாதிபதியை தன்னுடன் குத்துச்சன்டை போட தனியே வரும்படி சாவால் விடுத்தார்!


இதனால் ஆத்திரமடைந்த தான்சானியா மற்றும் உள்நாட்டு படைகள் எதிர்த்து தாக்கின இதனை சமாளிக்க முடியாமல் இடி அமின் லிபியாவில் தஞ்சம் புகுந்தான் பின்னர் அங்கேயும் எதிர்ப்பு அதிகரிக்கவே சில காலம் ஈராக்கில் வாழ்ந்தான் அவனுக்கு ஏறக்குறைய 40 பிள்ளைகளும் 8 மனைவிக்கு மேல் இருந்ததாகவும் தகவல் தெரிவிக்கின்றன. அதே ஆண்டு சவுதி அரசு அவனுக்கு அடைக்கலம் அளித்து இலங்கை ரூபாய் மதிப்pல் மாதம் ஒரு லட்சத்து இருபதாயிரம் உதவித் தொகையும் வீடும் கார் மற்றும் பணியாட்களையும் கொடுத்தது!


இறுதிக்காலகட்டத்தில் 2003 இல் சவுதி அரேபியாவில் கோமா நிலையில் இருந்து ரத்த அழுத்தத்தாலும் சிறு நீரக கோளாறாலும் பாதிக்கப்பட்டு இறந்தன்.அவன் உயிரோடு வந்தால் சிறையில் அடைக்கப்படுவான் என்று உகண்டாவில் அப்போதய ஜனாதிபதி அறிவித்தார் மேலும் இறந்த உடல் வந்தால் சாதாரன உகண்டா மனிதனைப் போல அடக்கம் செய்ய அனுமதிக்கப்படுவான் என்றும் தெரிவித்தார் ஆயினும் இடி அமின் இறந்த சில மணி நேரங்களில் சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டா நகரில் புதைக்கப்பட்டான்.

0 comments:

Post a Comment

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | cheap international calls