Monday, September 26, 2011

'LAKE HOUSE" இன் வரலாறு

டி.ஆர். விஜேவர்தன
 இலங்கையில் அநேக பத்திரிகைகள் ஆரம்பிக்கப்பட்டு சிறிது காலத்தின் பின் மூடப்பட்டுவிட்டன. ஆயினும் விஜேவர்தனவால் ஆரம்பிக்கப்பட்ட பத்திரிகைகள் முக்கியமாக டெயிலி நியூஸ் (Daily News), தினமின, சிலுமின, தினகரன், ஞாயிறு தினகரன், ஒப்சேவர்  போன்ற பத்திரிகைகள் இன்று ஆல்போல் தழைத்து அறுகுபோல் வேரூன்றி இலங்கையில் மட்டுமன்றி உலகளாவிய ரீதியில் பெயரும், புகழும் பெற்று ஜொலித்துக்கொண்டு இருக்கின்றன என்றால் அதற்குக் காரணம் விஜேவர்தன மேற்கொண்ட உன்னதமான நேர்மையான கொள்கையே ஆகும். இன, மத பேதங்களைக் கடந்து எல்லா மக்களும் இந்நாட்டவரே என்ற குறிக்கோளுடன் ஆங்கிலம், சிங்களம், தமிழ் ஆகிய பத்திரிகைகளை ஆரம்பித்து மக்கள் பயனடையும் முறையிலே அவர்களின் விருப்புகளை நன்கு ஆராய்ந்து, செயற்பட்டுள்ளார் என்பது தெளிவாகிறது. ஆங்கிலேயர் 1796ம் ஆண்டு இலங்கைக்கு வருமுன் தமிழிலோ, ஆங்கிலத்திலோ பத்திரிகைகள் இருந்ததாகத் தெரியவில்லை. 1862ம் ஆண்டு “விரிவீழிலினி பிஞிரிரிணிதினி” என்ற ஆங்கில பத்திரிகை ஆரம்பிக்கப்பட்டு சிறிது காலத்தின் பின் மூடப்பட்டுவிட்டது. 1863ம் ஆண்டு விரிவீழிலினி ஜிதிஹிஞியிலிஹி என்ற வார இதழ் ஆரம்பிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து 1876ம் ஆண்டளவில் “விதிஹிசிலிழியிவி மிஸிதிஞிளியிதினி” ‘சியினிளிஸி லிஞிமிதினி’ என்ற ஆங்கிலப் பத்திரிகைகள் யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப் பட்டன. ணிலிஞினியினிமி ஷிஹிதிஞி என்ற பத்திரிகை ஆங்கிலத்திலும், தமிழிலும் யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்டு மக்களிடையே பிரபல்யம் பெற்று விளங்கியது. இது மட்டுமன்றி மட்டக்களப்பில் ‘ஹிசிரி ழிதிணிஜி’ என்ற பத்திரிகை ஆரம்பிக்கப்பட்டு கிறிஸ்தவ மக்களிடத்தே மிகுந்த ஆதரவைப் பெற்று விளங்கியது. மற்றும் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்தவர்களுக்காக ‘ணிஸிஷிழியிணி பிஞியிரினிளி’ என்ற பத்திரிகை ஆரம்பிக்கப்பட்டு முஸ்லிம் மக்களிடையே பிரபல்யம் பெற்று விளங்கியது. இப்பத்திரிகை தமிழிலேயே பிரசுரிக்கப்பட்டது.

மேலும் இலங்கை சுதந்திரம் அடைந்த பின்னர் அதாவது 1948ம் ஆண்டுக்குப் பின் பத்திரிகைகளின் எண்ணிக்கையும், வளர்ச்சியும் மேலோங்கத் தொடங்கியது.
டி. ஆர். விஜேவர்தன ஓர் தலைசிறந்த அறிவாளியாகவும், ஆளுமையும், ஆற்றலும், அர்ப்பணிப்பும் பெற்றிருந்த போதிலும் அரசியலுக்கு ஏற்ற பேச்சாற்றலும், நம்பிக்கையும், மக்களை திசை திருப்பும் சாமர்த்தியமும் பெற்றிருக்கவில்லை. இதன் காரணமாகவே ஆசியாவிலே தலைசிறந்த பத்திரிகைகளை ஆரம்பித்து அதன் மூலம் இலங்கை சுதந்திரம் அடைவதற்காக நாட்டு மக்களைக் கட்டி எழுப்பினார். உண்மையிலே விஜேவர்தன பத்திரிகைத்துறையிலே சிறந்து விளங்கியதற்குக் காரணம் அவர் ஏ.ஜீ. ஹாடினர் என்பவரால் பிரசுரிக்கப்பட்ட ‘லண்டன் டெயிலி நியூஸ்’ பத்திரிகையை தவறாமல் வாசித்து அதன்மேற் கொண்ட விருப்பின் காரணமேயாகும். அதனால் போலும் தான் தோற்றுவித்த பத்திரிகைக்கும் ‘இலங்கை டெயிலி நியூஸ்’ என்ற நாமத்தைச் சூட்டினார். இத்துடன் சிங்களப் பத்திரிகையான ‘தினமின’ நொறிஸ் வீதியில் சேர். பாரன் ஜெயத்திலகவால் நடத்தப்பட்டு வந்துள்ளது.
டி. ஆர். விஜேவர்த்தன முகாந்திரம் டி.பி. விஜேவர்த்தனவுக்கு மூன்றாவது மகனாக சேதுவத்த என்ற கிராமத்தில் பிறந்தார். இவர் தமது கல்லூரிப் படிப்பை சென். தோமஸ் கல்லூரியில் முடித்துக்கொண்டு லண்டன் சென்று கேம்பிரிஜ் பல்கலைக்கழகத்தில் படித்து சட்டத்துறையில் பட்டம் பெற்றார். கேம்பிரிஜ் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் காலகட்டத்தில் இந்திய நாட்டின் விடுதலைக்காக பெரும் தியாகங்களைச் செய்த பெருமக்களாகிய சுரேந்திரநாத் பனேஜீ, கோபால் கிருஷ்ண கோகேல் ஆகியவர்களோடு நன்கு பழகும் வாய்ப்பு இருவருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக தாமும் இலங்கை நாடு சுதந்திரம் அடையவேண்டும். அதற்காக எவ்வாறாயினும் தாமும் பங்குகொள்ள வேண்டும் என்ற உன்னதக் கருத்தோடு இலங்கைக்குத் திரும்பி வந்து அன்றைய காலகட்டத்தில் பெயரும், புகழும் பெற்று விளங்கிய சேர். பொன்னம்பலம் இராமநாதன், சேர். பொன்னம்பலம் அருணாசலம், சேர். முத்துக்குமாரசுவாமி, சேர். வைத்தியலிங்கம் துரைசாமி, டாக்டர் ஆனந்தகுமாரசாமி, சேர். பாரன் ஜயதிலக்க, டாக்டர் ரி.பி. ஜாயா, ஈ. டபிள்யூ பெரேரா, டி. எஸ். சேனநாயக்கா, எப். ஆர். சேனநாயக்கா போன்ற பெருமக்களோடு இணைந்து நாடு சுதந்திரமடைவதற்காகப் பத்திரி கைகளை ஆரம்பித்து வெற்றியும் கண்டார்.
இவர் ஒரே சமயத்தில் ஏழு பத்திரிகைகளை ஆரம்பித்தார். டெயிலி நியூஸ், தினமின, சிலுமின, ஒப்சேவர், தினகரன், ஞாயிறு தினகரன் போன்ற பத்திரிகைகளை ஆரம்பித்து, தலைசிறந்த பத்திரிகை ஆசிரியர்களையும், பத்திரிகை நிருபர்களையும் தெரிவு செய்து, அவர்களுக்குப் பயிற்சி அளித்து பத்திரிகைகள் இலங்கையிலே தலைசிறந்ததாக விளங்க பல வழிகளில் செயற்பட்டார். இத்துடன் விசுவாசத்தோடும், அர்ப்பணிப் போடும் கடமை புரியும் தொழிலாளர்களையும், வேலையாட்களையும் தம்முடைய பத்திரிகை நிறுவனத்தில் வைத்திருந்தார்.
விஜேவர்த்தனவிற்கு இங்கிலாந்திலே அறிமுகமான எஸ். ஜே. கே. குரோதர் என்பவரை 1919ம் ஆண்டளவில் டெயிலி நியூஸ் பத்திரிகையின் பிரதம ஆசிரியராக நியமித்தார். இது மட்டுமன்றி விஜேவர்தன லேக்ஹவுஸ் நிறுவனத்திற்கு காலை 10.00 மணியளவில் வந்துவிடுவார். வந்தவுடன் பத்திரிகைகள் நேரத்திற்கு அச்சிடப்பட்டதா? நேரத்திற்கு வெளியிடங்களுக்கு அனுப்பப்பட்டதா என்று கேட்டறிவார். அதன் பின்னர் டெயிலி நியூஸ், பிரதம ஆசிரியர் விஞிலிதீஹிசிரிஞி ரோடு அன்றைய ஆசிரிய தலைப்பைப் பற்றி கலந்துரையாடிய பின்னர்தான் ஆசிரியர் தலைப்பு எழுதப்படும். இதை இருவரும் வழமையாகக் கடைப்பிடித்து வந்தனர். இதன் காரணமாக பத்திரிகையும் வளர்ச்சி கண்டது.
மேலும் விஜேவர்த்தன ‘தினமின’ பத்திரிகையின் முன்னேற்றத்திற்காக டி.பி தனபாலா பிரதம ஆசிரியராக நியமித்து பத்திரிகையை திரம்பட நடாத்தி வந்தார். டி.பி. தனபாலா சிங்களத்திலும், ஆங்கிலத்திலும் பாண்டித்தியம் மிக்கவராக விளங்கிய காரணத்தினால் விஜேவர்தனவின் அன்புக்கும், நம்பிக்கைக்கும் பாத்திரமாக விளங்கினார். இதுமட்டுமன்றி தமிழ்ப் பத்திரிகையான ‘தினகரன்’ சிறந்த பத்திரிகை ஆசிரியர்களால் திறம்பட நடத்தப்பட்டு வந்தமை இங்கு குறிப்பிடவேண்டும். முக்கியமாக கைலாசபதி நாதன், சிவகுருநாதன், அருளானந்தன், செந்தில்வேலவர், ராஜசிaகாந்தன், சிவாசுப்பிரமணியம் போன்றவர்களால் திறம்பட நடத்தப்பட்டு வந்தது. இதேவேளை தினகரன் வாரமஞ்சரியை காலம் சென்ற எஸ். கே. சுப்பிரமணியம் மிகவும் அர்ப்பணிப்போடும், திறமையாகவும் செய்து யாவரின் பாராட்டையும் பெற்றவர் ஆவார்.
மேலும் தற்போதைய தினகரனின் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் எஸ். தில்லைநாதன் பத்திரிகைத்துறையில் மிக்க அனுபவம் பெற்றவர். அவர் ‘தினகரன்’ பத்திரிகையின் முன்னேற்றத்திற்காக பற்பல செயற்பாடுகளைக் கையாண்டு வருகிறார். தினகரன் பத்திரிகையில் பணிபுரியும் சகலரும் அர்ப்பணிப்போடு செயற்பட்டு பத்திரிகையின் வளர்ச்சிக்காக தம்மால் இயன்ற ஆக்கபூர்வமான பணிகளைச் செய்து வருவதை நாம் கண்கூடாகக் காணக்கூடியதாக உள்ளது.

உண்மையிலே விஜேவர்தன இலங்கை, அந்நியரின் ஆதிக்கத்திலிருந்து விடுபடுவதற்காக தாம் ஸ்தாபித்த பத்திரிகைகள் மூலம் ஆற்றிய பணிகள் மகத்தானவை. அவை பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படவேண்டியவை.

0 comments:

Post a Comment

Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | cheap international calls