Thursday, August 18, 2011

ஆதாமின் மறுபிறப்பு

உயிரற்ற உடம்பாக இருந்த ஆதாமின் சுண்டு விரலை இறைவன் தீண்ட ஆதாம் உயிர்பெற்று எழுந்ததாகச் சொல்லும் பைபிள் காட்சியை மைக்கேல் ஏஞ்சலோ தன் துரிகையால் படைத்தபோது ஆதாம் இரண்டாவது முறையாக உயிர் பெற்றான்!


கலை என்பது என்ன என்பதை இவன் வடிக்கப்போகும் சிற்பங்களிலிருந்து ஓவியங்களில் இருந்தும் உலகம் அறிவதாக மைக்கல் ஏஞ்சலோவை படைக்கும் போது இறைவன் இப்படி அறிவித்ததாக ஒரு நம்பிக்கை யாதார்தம் தத்துரூபம் என பார்போரை மெய்சிலிர்க்க வைத்த இவரின் படைப்புக்கள்  இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கின்றன இவர் இல்லாத இந்த உலகிலும்

ஆதாமின் பிறப்பு என்ற ஓவியம் உலகத்தில் இருக்கும் அனைத்து ஓவியர்களையும்; நிலைகுலைய வைத்தது. அந்த அற்புதமான படைப்பு சிஸ்டைன் மாதா கோயிலின் வாட்டிகான் மேற்கூரையில் உள்ளது இதனைப்போலவே வேறு 340 ஓவியங்கள் இருக்கின்றன இவற்றை ஓவியங்கள் என்று கூறுவதை விட ஓவியங்களின் டிக்ஷனரி என்று சொல்வது தான் பொருத்தமாக இருக்கும். மேற்கூரையில் வரையப்பட்ட மனித ஓவியங்கள் மனிதர்களைகப்போலவே காட்சியளிக்கின்றது முப்பரிமானத் தன்மையைப் பிரதிபலிக்கின்றது உட்காரும் போது குனியும் போது நிமிரும் போது ஓடும்போது  என்ற ஒவ்வொரு மனித அசைவுகளையும் ஒவியமாக ரெக்கார்ட் செய்த முதல் கலைஞன் மைக்கல் ஏஞ்சலோ அடிப்படையில் இவர் ஓவியர் அல்ல மகா சிற்பி.

1504-ம் ஆண்டு மைக்கல் ஏஞ்சலோh தனது இருபத்தொன்பதாவது வயதில் செதுக்கிய பதின் மூன்று அடி உயரமான டேவிட் சிலை அதுவரை இருந்த நடைமுறையினை மாற்றியமைத்தது
அப்போது தான் சர்வ அதிகாரத்தோடு விளங்கிய போப் ஆண்டவரான இரண்டாம் யூலியஸ் இடம் இருந்து மைக்கல் ஏஞ்சலோவிற்க்குத் சம்மன் வந்தது சிஸ்டைன் தேவாலயத்தில் மேற்கூரைகளிலும் சுவர்களிலும் பைபிலின் காட்சிகளை ஓவியங்களாகத் தீட்ட போப் ஆண்டவர்
ஏஞ்சலோவுக்கு கட்டளை பிறப்பித்தார் நான் சிற்பி ஓவியன் இல்லை என்னை விட்டுவிடுங்கள் என்ற ஏஞ்சலோவின் கெஞ்சல் போப் பாண்டவரின் காதில் விழவில்லை ஏஞ்சலோ வேண்டா வெறுப்புடன் தான் இந்த வேலையைத் தொடங்கினர் சுமார் பத்தாயிரம் சதுர அடியில் ஓவியங்களை வரையும் மாபெரும் பொறுப்பு பணியை நான்கு 5 ஓவியர்களை வைத்துக்கொண்டு ஏஞ்சலோ ஆரம்பித்தார் அவர் ஒரு முன்கோபக் காரர் சுற்றிவளைத்துப் பேசத்தெரியாதவர் அதனால் வேலைக்குத் சேர்ந்த வேகத்திலேயே உதவியாளர் விலகிட தேவாலயத்தின் உயர்ந்த உட்கூரைகளில் ஓவியம் வரையும் கஷ்டம் பணியைத் தனி ஒரு மனிதராக ஏஞசலோ மின்சார விளக்குகளை இல்லத அந்தக் காலத்தில் மொழுகுவர்தி வெளிச்சத்தின் சாப்பாடு தூக்கம் என்று எல்லாவற்றையும் மறந்து ஏஞ்சலோ தேவாலயத்தின் விதானத்தின் ஓவியம் தீட்டியபோது தூரிகையில் இருந்து சிதறிய வர்ணங்கள் அவர் கண்களை கசக்கி எடுத்தன இப்படி நாலு ஆண்டுகள் அவர் இரவுபகலாக  உழைக்க சிஸ்டைன் தேவாலயம் ஒர் ஒவியக்கூடமாக  மாறியது
இந்த அற்புதமான கலைஞன் இளைஞனாக இருந்த போது தான் செதுக்கிய
டேவிட்சிலையப் போல இறுக்கமான உருண்டு திரண்ட தசைகளுடன் திடகாத்திரமாக இருந்தார் ஆனால் கடைசிக் காலத்தில் இவர் விசித்திரமான உபாதைகளினால் தவித்தார் சார்க்ஸைக் கலற்றினால் கால் தோலும் சோர்ந்து கழன்றது திருமணம் மனைவி குழந்தை பார்காத ஏங்சலோ 1564 ஆண்டு மரணப்படுக்கையில் அருகே இருந்த நன்பரிடம்
நான் இந்த உலகத்துக்கு விட்டுச் செல்வது என்னுடைய படைப்புக்கள் என்ற குழந்தைகளைத்தான் என்னுடைய குழந்தைகள் என்று சொல்லவே அவற்றுக்குத் தகுதி இல்லை என்றாலும் என்றும் அவற்றில் நான் வாழ்வேன்.

பிரான்ஸ் கலைகளின் தலைநகர் !

மன்னன் என்றால் இவன் அல்லவா மன்னன் என்று பல நாட்டு மன்னர்களும் பார்த்து வியந்த ஓர் அரசன் பிரான்ஸ் நாட்டின் பதிநான்காம் லூயி!
வெர்வெர்ஸேய்ல்ஸ்

வெர்ஸேய்ல்ஸ்




மாளிகைக்கு ஒர் மாநாகர்!

இதை மாளிகை என்பதை விட ஒரு பெரிய நகரம் என்று சொல்வதுதான் பொருத்தமாக இருக்கும்; மன்னன் லூயிக்குச் சூரியன் மீது பெருத்த ஈர்ப்பு!அதனால் மாளினையின் எங்கு திரும்பினாலும் அங்கே சூரியனின் ஒவியமோ சிற்பமோ நிச்சயமாக இருக்கும் காரணம் அவர் தன்னைத்தானே சூரிய ராஜா ளரn மiபெ என்று தான் அழைத்துக் கொண்டார்
இந்த அரண்மனையை நிர்மானிக்க சுமார் நாற்பதானடுகள் ஆயின.இதற்க்காக உழைத்த தொழிலாளர்களின் எண்ணிக்கை சுமார்
முப்பதாயிரம் இந்த அரண்மனை மன்னருக்கு என்று மட்டும் மொத்தம் நானூற்று  பதின்மூன்று கட்டில்கள் உண்டு கொடியிடை என்ற வர்ணணை இவரது மனைவி மரியாவிற்க்கு மட்டும் பொருந்தும் அவளின் இடை அளவின் சுற்றளவு பதின்மூன்றே அங்குலம் தானாம்!
முன்னனின் மனைவி கருவுற்று பிரசவ வலியில் துடித்துக் கொண்டுடிருந்த சமயம் அவளைப்பார்க்க வந்த மன்னன் அருகில்இருந்த
மருத்துவரிடம் எப்போது குழந்தை பிறக்கும்? என்று கேட்க்க மருத்துவர் என்ன சொன்னார் தெரியுமா…?”மன்னா நீங்கள் எப்போது பிறக்க வேண்டும் என்று கட்டளையிடுகிறீர்களே அப்போது..” அந்த அளவுக்கு கொடிகட்டிப் பறக்க வாழ்ந்த மன்னன் லூயிக்கும் அடிசறுக்கும் என்பதை 1667-ல் மூண்ட போர்கள் நீருபித்தன!


அஸ்தமனம் ஆரம்பம்!

தன்னுடைய வெட்டித்தனமான கௌரவத்துக்காக நெதர்லாந்து மீது லூயிபடையெடுத்தார் நியாயமே இல்லாமல் அண்டை நாடுகள் மீது மன்னன் லூயி அடுத்தடுத்து தொடுத்த போர்கள் பிரான்ஸ்ல் நிதிப்பற்றாக்குறையை ஏற்படுத்தியது இன்னொருபுறம் கிறிஸ்த்தவ மதம் துண்டு துண்டாக உடைந்த போது அதை லூயி! கையானண்ட விதம்..நாட்டில் ஒரு பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது இது போன்ற பிரச்சனைகள் சுமார் ஐந்து லட்சம் பேரை நாட்டைவிட்டே விரட்டியது இவர்கள் அத்தனை பேரும் தொழில்திறமை உடையவர்கள் அதனால் அவர்கள் நாட்டை விட்டு வெளியேறியதும் பிரான்ஸ் பெரிய பொருளாதார வீழ்சியைக் கண்டது!சுமார் எழுபத்திரண்டு ஆண்டுகள் பிரான்ஸை ஆண்ட மன்னன் லூயி இறந்த போது அடுத்த பேரனோ உயிருடன் இல்லை !அதனால் இவரின் ஐந்தே வயதான கொள்ளுப் பேரனே ஆட்சிப் பீடம் ஏறினான்பிரெஞ்சுப் புரட்ச்சி என்று சரித்திரம் குறிப்பிடப் போகும் ஒரு மாபெரும் புரட்சிக்கு தனது நாடு தயாராகிக் கொண்டிருக்கின்றது என்று அப்போது அந்த சிறுவனுக்கு தெரியாது


மந்திரிகளை நம்பாதே!பிரான்ஸ் நாட்டை லூயி ஆட்சி செய்த போது அதே பதினேழாம் நூற்றண்டில் மதகுருமார்களின் ஆதிக்கம் ஐரோப்பாவில் விஸ்வரூபம் எடுத்து மன்னர்களை அச்சுறுத்தி வந்தது ஆனால் மன்னன் மன்னன் லூயிபயப்பிடவில்லை “நாடு தான் நான்” என்று பகிரங்கமாகப் பிரகடனப்ப்படுத்தும் அளவுக்கு அவரிடம் அதிகாரம் பலம் செல்வம் என்று அத்தனையும் குவிந்திருக்கின்றது!
லூயி பிறக்கும்போது அவருக்கு பற்க்கள் முளைத்திருந்தன .இது நல்லதுக்கா? கெட்டதுக்காக? ஏன்று நாட்டு மக்கள் விடை தொரியாமல் ஒருவரை ஒருவர் அச்சத்தோடு கேட்டுக்கொண்டனர் லூயிக்கு ஐந்து வயதான போது இதற்க்கு விடை கிடைத்தது .லூயியின் தந்தை இறந்துவிட்டார் அதனால் அப்போது பிரதான அமைச்சராக இருந்த கார்டினல் மஸேரின் என்பவர் திறமையாக நிர்வாகம் செய்து நாட்டை வழி நடத்தினர்.
மஸேரின் தனது கடைசிக் காலத்தில் எந்த மந்திரியையும் நம்பாதே என்று மன்னன் லூயியிடம் புத்திமதி செல்லிவிட்டு இறந்து போனார்.இது மன்னனின் மனதில் ஆணிவேராகப் பதிந்திருந்தது!பிரான்ஸ் மன்னனாக  முடிசூட்டிக்கொண்டான் லூயி நாட்டின் எல்லா அதிகாரங்களையும் தனது கைகளில் வைத்துக்கொண்டதற்க்கு இதுவே காரணமாக அமைந்தது!
திட்டமிட்டபடி நகர்புறச்சாலைகள் தெருவிளக்கு பொதுமக்களின் பாதுகாப்புக்கு பொலீஸ்  என்று பல விடயங்களை உலகுக்கு அறிமுகப்படுத்தியவர் லூயி! தொழில் நிர்வாகம் வரிவசூல் ரானுவம் என்று அவரது ஆட்சியில் பல துறைகளிலும் பிரான்ஸ் முன்னோக்கி சென்று கொண்டிருந்தது கலையும் இலக்கியமும் அந்தக் கால ரோமாபுரிக்கு இணையாக செழிர்த்து வளர்ந்தன பிரெஞ்சு மொழிக்கு அறிஞர்களின் மொழி என்ற அந்தஸ்தும் கிடைத்தது.தனது நாட்டின் அமைச்சர்கள் தளபதிகள் நீதிபதிகள் குறுநில மன்னர்கள் என்று நாட்டின் முக்கியமான ஐயாயிரம் பேரை நெருக்கமாக கண்காணிக்க வசதியாக இவர்களுக்குப் பணிவிடை செய்ய இன்னும் பத்தாயிரம் பேரும் ஒரே இடத்தில் வசிப்பதற்க்கு ஒர்  இடம் வேண்டாமா? இதற்க்காக தலைநகர் பாரீஸ்லிருந்து முப்பது மைல் தூரத்தில் வெர்ஸேய்ல்ஸ் இடத்தில் அதுவரை உலகமே கண்டிராத அளவுக்கு மன்னன் லூயி! ஓர் பிரமாணடமான மாளிகையை எழுப்பினான் சிலிக்கவைக்கும் ஒவியங்கள் சிற்பங்கள் நீரூற்றுக்கள் என்று அவர் நிர்மாணித்த அந்த மாளிகையின் ஒவ்வொரு சதுர அங்குலமும் ஒர் கலைப் பெட்டகம்! மகாராணி தூங்கும் மஞ்சத்தில்கூட தங்க வேலைப்பாடு

Wednesday, August 17, 2011

இவரின் ஓவியத்தைப்பார்தது அன்று ஹிட்லர் இது என்ன பைத்தியக்காரத்தனம் என்றார் ஆனால்!!

இன்று நவீன ஒவியங்களின் பிரமா என்று வர்ணிகக கூடிய இவரைத் தெரியதவர்கள் யாருமே இருக்க முடியாது அவர் தான் பிக்காஸோ. பிக்காஸோவின் உலகம் தழுவிய புகழுக்கு என்ன காரணம்.ஓவியம் இப்படித்தான் இருக்வேண்டும் என்ற வரையரையைத் தகர்தெரிந்தார்.



Pablo Picasso


இக்காலப்பகுதியில் தொழில்நுட்பப் புரட்சியினால் கமராவும் தோற்றம் பெற்றது ஒவியர்கள் செய்யும் வேலையை குறிப்பிட்ட நிமிடங்களில் செய்து முடித்தது இதனால் வேலையில்லாப் பிரச்சனை தலை தூக்கியது என்னசெய்வது என்று தெரியாமல் இருந்த ஒவியர்களுக்கு புதிய பாதையை திறந்து வைத்தார்
Picasso's Guernica
ஒரு காட்சியை கண்கள் எப்படிப் பார்கின்றதோ அதை அதே மாதிரி வரைவதில் என்ன புதுமை இருக்கிறது அந்த காட்சி மனதில் ஏற்படுத்தும் உணர்சிகளைத்தான் ஒவியம் பிரதிபலிக்க வேண்டும் -இது பிக்கஸோவின் கருத்து இந்த அடிப்படையிலேயே ஒவியங்களை வரைந்தார்
இவரின் இந்த புதிய முயற்சியை எடுத்த எடுப்பிலேயே சிவப்புக்கம்பளம் விரித்து ஏற்றுக் கொள்ள வில்லை. பலமான எதிர்ப்புக்கள் கிளம்பின அதே ஆதரவுக் கைதட்டல்களும் எழுந்தன.கம்பரின் பாடல்களுக்கு ஆளுக்கு
;
Dimentition மட்டும் வரைந்து கொண்டிருந்தார்கள் ஆழம் கொடுத்து Three Dimentition Effect  கொடுக்க ஓவியக்கலை ஒரு மிகப்பொரிய மாற்றம் அடைந்தது இவர்கள் வாழ்ந்து மறைந்து பல நூற்றாண்டுகள் ஆண பிறகும் ஓவியக்கலைக்கு யாராலும் ஒரு மாற்றத்தையோ அல்லது திருப்பத்தையோ கொடுக்க முடியவில்லை ஓவியக்கலை தனது முக்கியத்துவத்தை இழந்து விடுமோ என்ற அச்சம் முளைவிட ஆரம்பித்தது அந்த சமயம் 1907ம் ஆண்டு பிக்காஸோ வரைந்த  Demoiseselles d'Avcignon என்ற ஐந்து பெண்களின் ஓவியம் ஓவியக் கலைக்கு ஒரு மிகப்பெரிய திருப்பு முனையைக் கொடுத்தது


Avcignon
ஒரு அர்த்தம் சொல்வது போல பிக்காஸோவின் இந்த ஒவியத்தை பாராட்டியவர்கள் ஒவ்வொரு புது அர்தம் சொன்னார்கள்”எந்த ஒவியமாக இருந்தாலும் சரி அதுக்கு ஒரேயொரு அர்த்தம் தான் இருக்கு அந்த அர்த்தம் அந்த ஓவியர் கொடுத்த அர்த்தம் மட்டுமே
பிக்காஸோ இதே பாணியில் தொடர்ந்து ஒவியங்களை வரைய ஆரம்பித்தார் உலகம் இந்த ஸ்டைலுக்கு cubism என்று பெயர் பெயர் கொடுத்தது ஜியோமெண்டரியன் கோட்பாடுகளைப் பிரதிபலிக்கும் இந்த ஒவியக்கலை பின் ரொக்கட் வேகத்தில் வளர்ந்தது யோன அந்த காலப்பகுதியில் (சென்ற நூற்றான்டில்) வியக்கத்தக்க விஞ்ஞானி ஆல்பாட் ஐன்டின் பிக்காஸோ ரசிகராக மாறினார்

PabloPicasso-Girl-with-Mandolin-Fanny-Tellier-1910
PabloPicasso-Ambroise-Vollard-1915

பிக்காஸோ அறிமுகப்படுத்திய இந்த style ஓவியம் காகிதத்தோடு நின்று விட வில்லை பிற்காலத்தில் இலத்திரனியல் பொருட்கள் செய்வதற்க்கு அது தான் அடிப்படையாக இருந்தது க்யுபிசம் என்ற modern art தான் பிக்காஸோவுக்கு புகழ் சேர்த்தது என்றாலும் மரபு ஒவியங்களை வரைவதிலும் இவர் வல்லவராக இருந்தார் அது மட்டுமல்ல வான் கா ஆரம்பித்து வைத்த Expressionims ல் ஆரம்பித்து  surrealism வரை அத்தனை style  களிலும் நிபுனத்துவம் வாய்ந்தவராக இருந்தார் .சிற்ப்பம் மேடை டிசைனர் என்று ஆரம்பித்து நாடக நடகர்களுக்கு costuemed  வரை இவர் பல விஷயங்களைச் செய்வதில் கைதேந்தவர்


பிக்காஸோ பிறந்து ஸ்பெயின் நாட்டில் என்றாலும் அவர் வாழ்கையின் பெரும்பகுதியைச் செலவிட்டது கலைகளின் தலைநகரான பாரீஸ் தனது குடிமகனாக மாறச்சொல்லி பிரான்ஸ் பல முறை பிக்காஸோவைக்கேட்டுக் கொண்டது ஆனால் தனது நாட்டின் மீது கொண்ட பற்றால் கடைசிவரை அவர் தனது குடியுரிமையை மாற்றிக் கொள்ளவில்லை
1937 ம் ஆண்டு இரண்டாம் உலகப் போர் அசுரவேகத்தில் நெருங்கிக் கொண்டிருந்த சமயம்
சின்ன வயதில் ஒவியனாக வேண்டும் என்ற கனவுகளோடு வளர்ந்த ஹிட்லர் இது என்ன modern art பைத்தியகாரன் கிறுக்கிய மாதிரி இருக்கு என்று பிக்காஸோவின் ஒவியங்களைத் தடைசெய்தார்
இன்னாரு பக்கம் பிக்காஸோ தாய்நாடான ஸ்பெயின் நாட்டில் உள்நாடடுப் போர் முளைவிட ஆரம்பித்தது இடையில் முக்கை நுழைத்த ஹிட்லர் ஸ்பெயின் நாட்டின் குவர்னிக்கா நகர் மீது குண்டு மழை பொழிந்தார் இதில் அந் நாட்டின் கட்டிடங்கள் எல்லாம் செங்கல் குவியலாக மாறின.அந் நகரே மரண ஒலம் மூடிக்கொண்டது.எங்கு அழுகுரல் இரத்த வெள்ளம்
இதனை பார்த்த பிக்காஸோ உயnஎயள க்கு இடம் பெயர்த்தார் இறந்து போனவர்களுக்காக தீட்டப்பட்ட அந்த ஓவியம் இறவாப்புகழ் பெற்றது பிறகு ஹிட்லரின் நாஜியிஸத்தை எதிர்க்கும் சின்னமாகவே மாறியது
இரண்டாம் உலகப்போர் முடிவை நோக்கி நெருங்கிக் கொன்டிருந்த சமயம் பிக்காஸோ பிரான்ஸ் நாட்டின் கம்னியுசியத்தில் சோந்தார்
ஆமைதி சம்மந்தமாக அந்தக் கட்சி நடத்திய பல சர்வதேச கூட்டங்களில் கலந்து கொண்டார் 1950 ஆண்டு நடத்தப்பட்ட அமைதி மாநாட்டுக்காக அவர் அமைதியை புறவுருவமாகக் கொண்டு ஒர் அடையாள ஒவியம் உருவாக்க அதை மொத்த உலகமும் அமைதியின் சின்னமாக ஏற்றுக் கொண்டது.
ஆரம்ப காலங்களில் ஓவியங்களை அகலம் நீளம் என்ற எல்லைகளுக்குள் மட்டும் அதாவது

Tuesday, August 16, 2011

வரலாறு புகழும் வான்கா

வரலாறு புகழும் வான்கா (தற்போது பல கோடி பெறுமதியான இவரின் ஓவியங்களுக்காக அன்று பெயின்டும் பிறசும் கூட வாங்க இயலாமல் இருந்தவர் தான்)



Vincent Van Gogh
 


Vincent Van Gogh
 
இவர் தனது வாழ்நாளில் விற்பனை செய்த ஒவியம் ஒன்றே ஒன்றுதான்
வன்கா சென்ற நூற்றாண்டின் இறுதியில் வாழ்ந்து மறைந்த இணையில்லாத கலைஞன்.



Start Night


Star Night

ஓவியர்களின் வரலாற்றை புரட்டிப் பார்த்தால் ஆதிகால மனிதன் வரைந்த குகை ஓவியங்களிள் ஆரம்பித்து ரேனேசான்ஸ் என்று பல படிகளைக்க் கடந்து இம்பிரஷனிஸம் என்ற ஸ்டைலில் ஓவியங்கள் வரையப்படடுமுக் கொண்டிருந்த காலம் இது.அதாவது பத்தொன்பதாவது நூற்றாண்டு.இந்த காலகட்டத்தில் ஹாலந்து நாட்டில் பிறந்த வின்சட் வான் கா என்ற ஓவியம் ஓவியக் கலைக்கே ஒரு புதிய திருப்பத்தைக் கொடுத்தான் அவன் வரைந்த ஓவியங்களைத்தான் சரித்திரம் EXPRSSIONISM  என்ற ஓவிய ஸ்டைலுக்கே மூலம் என்று போற்றிப் புகழ்ந்தது.

வான் காவின் ஓவியங்களைப்போலவே அவரது வாழ்கையும் உலகப் பிரசித்தி பெற்றது மைக்கல் ஏஞ்சலோ பிக்காஸோ போன்ற ஓவியர்கள் கூட எத்தனையோ இன்னல்களையும் கஷ்டங்களையும் அனுபவித்திருக்கிறார்கள் என்றாலும் இந்த உலக மகா கலைஞனின் அளவுக்கு வேறு எவராவது கஷ்டப்படிருப்பார்களா என்பது சந்தேகமே



இவர் பிறப்பதற்க்கு முன்பே இவரது குடும்பத்தை சோகம் படர்ந்திருந்தது1853ம் ஆண்டு மார்ச் மாதம் 30ம் திகதி வான்கா பிறந்தார் அதற்க்கு ஒரு வருடத்திற்க்கு முன்னால் இதே திகதிகளில் பிறந்து சில வாரங்களுக்குள்ளாகவே இறந்து போய்விட்ட இவரது அண்ணனின் பெயரையே இவருக்கும் சூட்டினார்கள்
சிறுவன் வான்காவுக்கு நினைவு தெரிய ஆரம்பித்த நாட்களிலேயே இறந்து போன தன் அண்ணனின் பெயரைத் தாங்கி வாழ்வதில் ஒரு தாழ்வு மனப்பான்மை ஏற்ப்பட்டது வான் காவின் அப்பா ஓரு எழ்மையான பிராட்டஸ்டண்ட் மத போதகர் அவரிடம் இருந்து உபதேசங்கள் கிடைத்தளவிற்க்கு சிறுவன் வான்காவிற்க்கு அப்போது வாழ்கை கிடைக்க வில்லை

இதெல்லாம் சிறுவன் வான் காவின் மனதைப் பிழிந்து எடுக்க கோபக்காரனாகவும் முரடனாகவும் மாறினான் வான் காவான் காவின் தொல்லை பொறுக்காமல் பல மைல் தள்ளி இருக்கும் பள்ளிக்கூடத்துக்கு இவனை பெற்றோர் அனுப்பினார்கள் வான்காவுக்கு படிப்பின் மீது நாட்டம் வரவில்லை கடைசி முயற்சியாக வெளியூரில் ஓவியக் கூடம் நடத்தும் உறவினர் வீட்டுக்கு இவனை எடுபிடி வேலைக்கென அனுப்பிவைத்தனர்.அங்கு தான் ஓவியங்கள் என்றால் என்ன என்பதை சிறுவன் வான்கா பார்த்தான்.அப்போது வான் காவிற்க்கு வயது பதினாறு
வாழ்கை என்னவாக ஆவது என்று தெரியாமல் குழம்பிய வான் கா தன் அப்பாவைப் போலவே தானும் மத போதகர் ஆகிவிடலாமோ என்று கூட யோசித்தார் சகோதரப்பாசம் தாய் தந்தைப் பாசத்திற்காக ஏங்கிய வான்கா லண்டனில் தங்கி வேலை தேடிக்கொண்டிருந்த சமயம் அவர் தங்கியிருந்த வீட்டின் உரிமையாளருடைய  பெண்ணைக் காதலித்தார் .அது ஒரு தலைக் காதல் அந்தப் பெண் இவரது காதலை ஏற்றுக் கொள்ளவில்லை காதலில் தோல்வியடைந்த துக்கத்தில் அவர் விலை மாதுகளின் வீடுகளில் சரனடைந்து தனது வாழ்கையினையும் வீணாக்கிக்கிக் கொன்டார்.அதன் பின் அவர்களிலேயே ஒரு பெண்ணைத் திருமணமும் செய்து கொண்டார்.மனைவியாக வந்தவள் ஒரு அடாங்காதவள் வான் கா தனது மன வாழ்கையில் கூட நின்மதியடையவில்லை அவள் மிகவும் கொடுமைப்படுத்தினால் !பல வருடங்கள் வான் கா பேசாமல் இருந்தாலும் அதற்க்கு மேல் தாக்குப் பிடிக்கமுடியாமல் இருந்ததால் கடைசியில் இத்திருமணமும் முறிந்து போனது
தனது 33 வது வயதில் அவர் ஓவியன் ஆகலாம் என்று முடிவெடுத்தபோது பெயின்டும் பிறசும் வாங்கக் கூட அவரிடம் பணம் இருக்கவில்லை வான் கா வின் வாழ்கையில் அவர் மீது அன்போடும் கரிசனையோடும் இருந்த ஒரே உறவு அவரது சகோதரர் .அவரின் பண உதவிமூலமே வான் கா தனது வாழ் நாள் முழுவதையும் கழித்தார்.இவர் ஒவியங்கள் தீட்டினார் அவ் ஓவியங்கள் தான் ஓவிய சரித்திரத்தையே மாற்றியமைக்கப் போகின்றது என்று யாரும் அறிந்திருக்க வில்லை கடைசிக் காலத்தில் அவரின் புத்தி பேதலித்திருந்தது பைத்தியம் முற்றி தனது காதை தானே அறுத்துக்கெண்டு நடுத்தெருவில் ஓடும் அளவிற்க்கு அவரது பைத்தியம் முற்றி இருந்தது மனநல மருத்துவமனைக்கும் வீட்டுக்குமான அடம் மாற்றி பொண்டிருந்தபோது தான் காலத்தை வெல்லப் போகும் 200 ஓவியங்களை அவர் தீட்டினார் அதுவும் வாழ்வின் கடைசி நாள் நெருங்க நெருங்க ஒருநாளைக்கு ஒரு அமர ஓவியம் என்ற வேகத்தில் வான் கா ஓவியங்களைப் பெற்றெடுத்தார் இருந்தாலும் தனது வாழ்நாளில் அவர் விற்பனை செய்த ஒவியம் ஒன்றே ஒன்று தான் அவர் தங்கியிருந்த வாடகைப்பணத்திற்க்கு ஈடாக ஒரு சமயம் அவரது ஓவியத்தை வீட்டுக்காரர் வாங்கி போயிருக்கிறார்.இப்போது அந்த ஒவியத்தின் விலை பல கோடி
கடைசியில் 1890ம் ஆண்டு அவர் ஒரு நாள் துப்பாக்கியினால் தன்னைத்தானே சுட்டுக்கொன்டு இறந்து போனார்.

எமது வரலாற்று முதுசம்கள்.


எமது வரலாற்று முதுசம்கள் அழிந்து மற்றும் அழிக்கப்பட்டு வருகின்றன.  நாளைய நம் தலைமுறைக்கு எமது வரலாற்று தடங்களிற்கான ஆதாரங்களைப் பேணி ஒப்படைப்பதில் நாம் எள்ளளவிலும் சிரத்தை எடுத்துச் செயற்படுவதாயில்லை
sankiliyan Fort
 தற்போதய நுற்றாண்டில் கிரகத்தினை விட்டு கிரகம் தாண்டும் அளவிற்கு மனித அறிவியல் தெடர்பாடல் தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்துள்ளது. மனித சிந்தனைக்கு போட்டி போடும் அளவிற்கு தொழில் நுட்பம் வளர்சி இன்று உச்சத்தினை எட்டியுள்ளது. மனிதன் சாத்தியமற்ற விடயங்களுக்கு சவாலாக விளங்குகிறான்.இயற்கைக்கு முரனானதை சிந்திக்கின்றான் .எனினும் இன்றைய தொழில்நுட்பமும் வியக்கும் அளவிற்கு ஆரம்ப மனிதனின் படைப்புக்கள் கானப்பட்டது.

      உலக பொதுபார்வையில் அன்றைய மனித கண்டுபிடிப்புகளே இன்றையதெழில்நுட்பத்துக்கு வித்திட்டது  என்றே கூறலாம். இவற்ரை தொடர்ந்து வந்த விஞ்ஞானமோ,தெழிழ்நுட்பமோ,ஆதிமனிதரின் கலைப்படைப்புக்களை இன்னுமும் ஆய்வுக்கு உற்படுத்திய வண்ணமே இருக்கிறார்கள் . இன்றுவரை இவ் அனைத்து விடங்கங்களும் சவாலகவே காணப்படுகின்றது. பல கட்டுடத்துறை வல்லுனர்கள் ஆராய்சியாளர்களின் ஆராய்விற்கு பின்னும் வியப்பான விடயங்களில் பிரமீட்களும் ஒன்றாகும் இற்ரைக்கு கி.மு 4500 ஆண்டளவில் எகிப்த்தில் ஆரம்பித்ததாக நம்பப்படுகின்றது இன்றுவரையில் இயற்கைக்கு ஈடுகொடுத்து நிற்கின்றன


அதாவது எகிப்தியர்கள் இறந்தபின் அவர்களை மீண்டும் இவ்வுளகிற்கு கொண்டு வர (ka) எனற மாற்றுயிர் செயல்படும் என நம்பினார்கள் இதன் காரணமாக இறந்த உடல்கலை மருந்திட்டு பாதுகாக்கப்பட்டத அவ்வாறு பாதுகாக்கப்பட்ட உடல் “மமி” என அழைக்கப்பட்டது இந்த மமியை பாதுகாக்கும் நோக்குடன் எழுப்பப்பட்ட கட்டிடங்களே பிரமிட்டுக்களாகும்.

எகிப்தியர்களின் கலைப்படைப்பை தொடர்ந்து வந்த கிரேக்கர்கள் எகிப்த்திய சாம்பிராச்சியத்தை மிஞ்சும் அளவிற்கு கிரேக்கக காலம் உயிர்பெற்றது இதில் “பாதினன் தேவாலயம்” மிகவும் சிறந்த எடுத்துகாட்டு.


அதனைத் தொடர்ந்து உரோமிய வரலாறு கிரேக்கர்களின் சமகாலமாக இருந்தாலும் கிரேக்கரை விட பலம் பொருந்திய அரசாக கானப்பட்டது  அதனால் உரோமில் இன்றும் எச்சமாக காணப்படும் கட்டிடங்களில் “கொலாசியம"  முக்கியமானது.

இதனைத் தொடர்ந்து பல்வேறு நாகரிகம் தோற்றம் பெற்று வீழ்ச்சியடைந்தும் இன்றைய காலத்திலும் அவற்றுக்கான எச்சங்கள் சான்று பகிர்கின்றன.

வரலாற்றுக்கு முற்ப்பட்ட கற்கால மனிதர்களால் உருவாக்கப்பட்ட படைப்புக்கள் உலகின் பல்வேறு பாகங்களிலும் பரந்து கிடக்கின்றன அன்னிய நாடுகளில் மரபுரிமைச் சொத்துகள் பாதுகாக்கப்பட்டு வருகின்ற போதும் வீரம்நிறைந்த தமிழ் தேசமான எமது மண்ணில்  பாதுகாக்கபடாமல் சிதைந்து போகும் எச்சங்கள் பற்றிய ஒரு அலசல் .

எமது வரலாற்று முதுசம்கள் அழிந்து மற்றும் அழிக்கப்பட்டு வருகின்றன. நாளைய நம் தலைமுறைக்கு எமது வரலாற்று தடங்களிற்கான ஆதாரங்களைப் பேணி ஒப்படைப்பதில் நாம் எள்ளளவிலும் சிரத்தை எடுத்துச் செயற்படுவதாயில்லை. ஓவ்வெரு நாட்டின் பெருமையை உலகிற்கு எடுத்தியம்புவது அந்நாட்டு அரசாங்கம் முக்கிய பங்கை வகிக்கின்றது ஆனால்?
எமது தேசத்தில்…பல நூற்றாண்டுகளையும் கடந்து பல யுத்தங்களையும் எதிர் கொண்டு இன்றும் யாழ்பாணத்தில் அழிந்த மற்றும் அழிந்து வரும் பல்வேறு பொக்ஷங்கள் கானப்படுகின்றது எனினும் அவை நாளுக்கு நாள் சிதைவடைந்து வருவதும். காதலர்களின் சின்னங்களாக அவர்களின்  பெயர்களை சுமந்தும்
காணப்படுவதும் வருத்தத்திற்கு உரியது இவற்றில் ஒரு சிலததைப் பற்றியது.

நல்லூரில் உள்ள மந்திரிமனை. இலங்கையின் வடபகுதியான யாழ்ப்பாணஇராச்சியத்தின் தலைநகராக இருந்தாக கூறப்படுகின்றது. யாழ்ப்பாண நகரில் இருந்து சுமார் இரண்டு மைல்கள் தொலைவில் உள்ள நல்லூரில் அமைந்துள்ளது. யாழ்ப்பாணம் - பருத்தித்துறை வீதியில், நல்லூர் கந்தசுவாமி கோயிலுக்குச் சிறிது தூரத்தில் கானப்படுகின்றது. இது ஒரு ஒல்லாந்தர் காலக்கட்டிடமென்றே கூற முடியும்.

இக் கட்டிடத்தின் உள்ளே மரத்தாலான சிலதூண்கள், போதிகைகள் உட்படச் சில பகுதிகள் தற்பொழுது கானப்படுகின்றன உள்ளே பல மர வேலைப்பாடுகளுடனான தூண்களையும் காணலாம். அதுவும் சிதைவடைந்த வாறேயுள்ளது. குடியிருப்பாக மாறிஇருப்பதும் பாலடைந்த நிலையில் இருப்பதுமாக கானப்படுவது . வருத்தத்திற்குரியது.



எப்படியாயினும், யாழ்ப்பாணத்தில் அதன் காலனித்துவ காலத்துக்கு முற்பட்ட தொடர்புகளைக் கொண்ட, எஞ்சியுள்ள மிகச் சில கட்டிடங்களில் ஒன்று என்றவகையில் இது முக்கியத்துவம் பெறுகிறது .மற்றும் சங்கிலித்தோப்பு வளைவு, இது சங்கிலியன் மந்திரிமனைக்கு எதிரே சற்றுத் தொலைவில் உள்ளது யாழ் பருத்தித்துறை வீதியில் அமைந்துள்ள ஒரு நுளைவாயில் ஒன்று. பழைய அரண்மனையின் சிதைவு தற்பொழுது இதற்குத் தகரத்தாலான கொட்டகையொன்று அமைத்து மழை, வெயிலிலிருந்து பாதுகாக்கப்பட்டு வருகின்றது






யழுனா ஏரி யாழ்ப்பாண அரசின் தலைநகரமாக இருந்த நல்லூரில் "ப" வடிவிலமைந்தஒரு கேணி ஆகும். இது யாழ்ப்பாணத்தைக் கடைசியாக ஆண்ட சங்கிலியனின் மாளிகை அமைந்திருந்த சங்கிலித்தோப்பு வளவில் உள்ளது .யமுனா நதியின் நீர் கலக்கப்பட்டதால் இது யமுனா ஏரி எனப்படுகிறது . புதர் மண்டிய பற்றைக் காட்டினிடையே அமைதியாய் சிதைவடைந்தவாறு  இன்றுமிருக்கிறது. யமுனா ஏரிக்குச் செல்வதற்கான பாதையை அதற்கு அண்மையில் சென்று நின்று கேட்டால் கூட தெளிவான பதில் இல்லை அப்பகுதியில் வாழ்மக்கள் கழிவுகளினை வீச சிறந்த இடமாக திகழ்கின்றது பற்ரைகளுக்கு மத்தியில் நிர்கதியான நிலையில்  உள்ளது அரசு ஏன் இதனை பொறுப்பேற்கவில்லை நாளடைவில் சிதைந்து இருக்கிடமும் தெரியாமல போய்விட்டால் தமிழர் வாழ்ந்த தடங்கள் இன்றி அழிந்துவிடும். யாழ்மக்களும் எவ்வித அக்கரையும் எடுப்பதாக தெரியவில்லை எமது சொத்துக்கள் அழிவடைகின்றன அழிக்கப்பட்டு வருகின்றன என்பதை மட்டம் மறக்காமல் கூறிக்கொள்வர் மரபுரிமைகளை பாதுகாக்கும் விடயத்தில் ஏனோ? மௌனம் காக்கின்றனர்


இவ்வாறான. சுற்றுளாதளங்களாக  இருக்கவேண்டிய இடம. வரலாற்று புகழ்பூத்த மன்னர்கள் ஆட்சிசெய்த களம் அது. என்னும் எத்தனை தலைமுறை தான் இதனை பார்கபோகின்றனவோ! யாழ்ப்பாணத்தில் இராசதானி அமைத்து தமிழ் மன்னர்கள் ஆண்டார்கள் என்று நாளைய தலைமுறைக்கு கட்புல ஆதாரமாகக் காட்டக்கூடிய சில ஆதாரங்களே இன்று நம்மிடையே எஞ்சியுள்ளது.அவையும் சிதைவடைந்து நலிவடைந்து
அழிவடையும் நிலைக்குச் செல்வதை நாமெல்லாம் அமைதியாக பார்த்துக்கொண்டு இருக்கிறோம்;!


 
அதைவிட கலை மதிப்பீட்டில் பௌத்த கலாச்சார மரபுரிமை சம்மந்தப்பட்டவிடையங்களே பெருமளவில் உள்ளன. சிங்கள மன்னர்கள் ஆட்சி செய்த காலப்பகுதியை விட தமிழ் மன்னர்கள் அதை விட அதிக காலம் ஆட்சி செய்திருக்கிரார்கள் என்பதற்கான தொல்பொருள் சான்றுகள் உள்ளன. அவர்களின் சிறு எச்சங்கள் கூட இன்னு வராற்று சிறப்புமிக்க இடங்களில் பெக்கிஷமாக பேணப்படுகின்றது.பராமரிப்புச் செலவுக்காக ஆண்டு தோறும் நிதியை ஓதுக்குகின்றது அரசு . ஆனால் எமது மரபுரிமை அழிந்து வருகின்றன .ஒரு தேசத்தின் சுவடுகளே நாகரிகத்தின் கலைகள் .எனவே தான் வரலாற்றுடன் தொடர்பு பட்டதாகவும் உள்ளது .கலை மனிதனின் பொது மொழி ஆகும். ஒவ்வோர் கணமும் அவை சிதைவடைந்து அழிவடைந்து கொண்டேயிருப்பது தவிர்க்க முடியாதது என்பதுமட்டும் அனைவரும் அறிந்ததே!


வீதிகளுக்கு மன்னர்களின் பெயர்களும் வீதியின் மத்தியில் சிலைகளும்இருந்தால் போதுமா? நமது உரிமைகளுக்கு நாமே தான் பொறுப்பாளிகள்…



 

Saturday, August 6, 2011

இரும்புத் தலைவன் ! ஃபிடல் காஸ்டோ

(உலகம் மூன்றாம் உலகப் போரை நோக்கிப் போய்கொண்டிருக்கிறதோ? ஏன்று அச்சம் எழுந்தது)
நாற்பது வருடங்களாக ஒரு நாட்டைத் தொடர்ந்து தனது இரும்புப் பிடிக்குள் வைத்திருக்கும் ஒரு தலைவன் உண்டு என்றால் இன்றைய தேதிக்கு ஃபிடல் காஸ்டோ மட்டுமே !


காஸ்ரோவின் வாழ்கையில் பல விந்தையான விஷயங்கள் நடந்திருக்கின்றன தனது நாட்டைச் சுரண்டிக்கொண்டிருந்த சர்வதிகாரி பாடிஸ்டாவை எதிர்தது காஸ்ரோ கொரிலா போரில் ஈடுபட்டிருந்த சமயம் அவர் தன்னை ஒரு கம்யூனிஸ்ட் என்றே சொல்லிக்கொள்ள வில்லை கியூபாவில் ஃபிடல் காஸ்டோ ஆட்சிக்கு வந்த புதிதில் கியூபாவின் கம்னீயூஸ்ட் கட்சியே அவரை கடுமையாக எதிர்த்ததுஅப்படியென்றால் ஃபிடல் காஸ்டோவை திடீரென்று கம்யூனிஸ்ட் ஆக்கியது யார்? சோவியத் ரஷ்யாவா? இல்லை அமெரிக்கா! 


கீயூபாவில் ஃபிடல் காஸ்டோ ஆட்சியைக் கைப்பற்றிய போது பாடிஸ்டாவின் ஆதரவாளர்களையும் அவருக்கு விசுவாசமானவர்களையும் கடுமையாக நடத்தினார் இவர்களைத் தேடி ஃபிடல் காஸ்டோவின் படைகள் வீடுவீடாக வேட்டை நடத்திய போது பலர் மூர்க்கத்தனமாக கொல்லப்பட்டார்கள் இந்த அடக்கு முறையையும் கொலைகளையும் அப்போது அமெரிக்கா கடுமையாக எதிர்த்தது.

இன்னொரு பக்கம் புதிதாக ஆட்சப்பொறுப்பேற்ற ஃபிடல் காஸ்டோ அமெரிக்கர்கள் கீயூபாவில் நடத்தி வந்த அத்தனை சக்கரைத் தொழிற்சாளைகலையும் வர்த்தக நடவடிக்கைகளையும் அரசுடமையாக்கினார் இதற்க்கு பதிலடி பொடுக்க அமெரிக்கா இனி கீயூபாவில் இருந்து சக்கரையை இறக்குமதி செய்ய மாட்டோம் என்று அறிவித்திருந்தது கீயூபாவைப் பொறுத்தவரை சக்கரை ஏற்றுமதிதான் அதன் சுவாசக்காற்றே இந்தச் சமயம் நான் உனது சக்கரையை வாங்கிக் கொள்கிறேன் என்று ரஷ்யா ஆபத்பாந்தவானாக முன் வந்தது அத்துடன் புதிய கனரக தொழிற்சாலைகள் அமைக்கும் கீயூபாவுக்கு ரஷ்யா பெரும் உதவி புரிந்தது

கீயூபாவை பணியவைக்க தான் எடுத்த முயற்சிகளுக்கு இப்படி எக்குத்தப்பாக விளைவுகள் ஏற்படுவதைப் பார்த்து “எங்கே கீயூபா கம்யூனிஸ்ட் நாடாக மாறிவிடுமோ என்று அமெரிக்கா பயந்தது அமெரிக்காவின் உளவு ஸ்தாபனமான சி.ஐ.ஏ தனது நரித்தனத்தை காட்டியது.சுமார் 1400 கியூபாவை முற்றுகையிட ஆனுப்பியது ! பே ஆஃப் பிக்ஸ் என்று பெயரிடப்பட்ட இந்த படையெடுப்புக்கு கியூபா நாட்டு மக்கள் பெருமளவில் ஆதரவு அளிப்பார்கள் என்று அமெரிக்கா போட்ட கணக்கு தப்பானது! தன்னை ஒரு கம்யூனிஸ்ட் தன்னை எதிர்க்க அமெரிக்காவில் இருந்து  ஆயுதங்களோடு வந்தவர்களை வந்தவர்களை ஃ பிடல் காஸ்டோ மண்டியிட வைத்தது வெற்றியுரை நிகழ்த்தினர் அப்போதுதான் ஃபிடல் காஸ்டோ தன்னை ஒரு கம்யூனிஸ்ட் என்று முதல் முதலாக அறிவித்துக் கொண்;டார் அன்று தான் கீயூபாவையும் கம்யூனிஸ்ட் நாடாகப் பிரகடனப்படுத்தினர்!

உலகசரித்திரத்தையே மாற்றியமைத்த ஹிட்லர்

ஹிட்லர் ஆரம்பித்துவைத்த இரண்டாம் உலகப்போர் காவு வாங்கியது எவ்வளவு உயிர்களைத் தெரியுமா சுமார் ஆறரைக் கோடி பேர்!


இதில் மிகப்பெரிய சோகம் என்னவென்றால் இறந்தவர்களில் சுமார் ஜந்து கோடிப் பேர் எந்த வம்புக்கும் போகாத பொதுமக்கள்!
போரினால் இறந்தவர்களின் கதைகளைவிட ஹிட்லர் தன் நாட்டின் சொந்த மக்களுக்குச் செய்த இனப்படுகொலை பொடுமையானது.இதைப்பற்றி இப்போது கேட்டாலும் ஈரக்குலை நடுக்கம் எடுக்கும்!



யூதர்களைத் துரோகிகள் என்று முத்திரை குத்திய ஹிட்லர் ஆடிய கொலை வெறி ஆட்டத்தைப் போல ஒரு கொடுமை உலக சரித்திரத்தில் இதுவரை நடந்தது இல்லை யூதர்களைக் கொலை செய்வதற்க்கு என்று தனி அமைச்சகம் யூத மக்களைக் கொலை செய்வதற்க்கு என்றே நாடு முழுவதும் மரணத் தொழிற்சாலைகள் ..நாள் ஒன்றுக்கு குறைந்த பட்சம் இரண்டாயிரம் யூதர்கலை கொன்று குழியில் வைக்கவேண்டும் என்று இலக்கு..


இந்த மரணத் தொழிற்சாலைகளில் கொன்று குவிக்கப்படும் யூதர்களை நாசிப்படையினர் கனக்கு வைத்துக் கொள்ளும் முறை மிகவும் சவாரசியமானது கைதாகும் போதே யூதர்களின் கை அல்லது கால்களில் செப்பு வளையம் மாட்டப்படும் .பல சித்திரவதைகளுக்கு பிறக அவர்கள் கொல்லப்பட்டதும் பிணங்கள் மொத்தமாக ஒரிடத்தில் குவிக்கப்பட்டு கொளுத்தப்படும் .அவர்கள் சடலங்கள் சாம்பல் ஆனதும் சாம்பலில் இருந்து பிரித்தெடுக்கும் வலையங்களின் எண்ணிக்கையை வைத்து இன்று எத்தனை பேரைக் கொன்றோம் என்று நாஜிப்படை கணக்கு எழுதிக்கொல்லும்


 நினைத்துப்பதத்க்கவே நடுக்கம் எடுக்கும் ஹிட்லரின் மிருகத்தனமான ஆட்சியில் இறந்து போன யூதர்களைவிட உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு கஷ்டப்பட்ட யூத மக்கள் பட்ட சித்திரவதை அதிகம்
சரி ஹிட்லருக்கு யூத மக்கள் அப்படி என்னதான் துரோகம் செய்தார்கள்?
ஹிட்லர் தனது நாஜி கட்சியினரிடையே கேள்வி பதில் பாணியை ஆற்றிய இந்த உரையைக் கேளுங்கள்
“எனதருமை ஜெர்மன் நாட்டு மக்களே…முதல் உலகப்போரில் நாம் தோல்வி அடைந்தோம் .நம் வசம் இருந்த நிலப் பகுதிகளை இழந்தோம் எதிரி நாடுகளுக்கு போரில் ஏற்பட்ட இழப்புகளுக்கு நாம் பொறுப்பேற்றுக் கொண்டுஇருப்பது இப்போது அதற்க்கு நஷ்ட ஈடு பொடுக்கிறோம்!இந்தக் கடன் சுமை நமது வசதிகளைப் பறக்கின்றது !நமது தலைச்சுமையைக் கூட்டுகின்றது அத்தோடு இது நமது சுய கௌரவத்தின் மீது சகதி வாரி அடிக்கின்றது இதற்க்கு யார் காரணம்?
“ஆட்சி முறை!”இது ஹிட்லரினால் மூளைச்சலவை செய்யப்பட்ட கட்சியின் கோஷம்!
இந்த ஆட்சிக்கு பின்னனியில் இருப்பவர்கள் யார்?
“யூதர்கள்”
“இந்தத் துரோகிகளின் பிரச்சனைக்கு நாம் கடைசித் தீர்வு கன்டாக வேண்டும்”



என்று ஹிட்லர் கட்டளையிட கட்சித் தொண்டர்கள் இனவெறிடும் கொலை வெறியுடன்
அந்த இடத்தை விட்டுப்புறப்படுவார்கள்.
மனிதர்களைக் கொல்ல எத்தனை முறைகள் இருக்கின்றதோ அத்தனை முறைகளையும் ஹிட்லரின் படை யூதர்களைக் கொல்லக் கையான்டது !இதில் “காஸ சேம்பர்” முறை விசித்திரமானது பிடிபடும் யூதர்களை ஆடைகளை எல்லாம் கலையச்சொல்லி “போய் குளித்து வரச்சொல்லி நாஜிப்படை கட்டளை இடும்அதன் பின் இவர்களை ஒர் அறைக்குள் அனுப்புவார்கள் அத்தனை கதவுகளும் சார்த்தப்பட்டு விஷப்புகை திறந்து விடப்படும் அடுத்த சில நிமிடங்களில் குளியல் அறை பிண அறையக மாறியிருக்கும்
பிடிபடும் அத்தனை யூதர்களுக்குமே இது மாதிரி சுலபமான மரணம் கிடைத்து விடாது .



சுண்டெலியை வைத்து சோதனை செய்வது போல யூதர்களை வைத்து பல மருத்துவ பரிசேதனைகள் நடத்தப்பட்டன!
ஜேர்மன் நாட்டில் வாழும் யூதர்கள் என்று இல்லாமல் தான் கைப்பெற்றும் நாடுகளில் வசிக்கும் யூதர்களையும் ஹிட்லரின் நாஜிப்படை கொன்று வெறியாட்டம் ஆடியது 1943ம் ஆண்டு வார்ஷா நகரில் நாஜிப்படைகளை எதிர்த்து கைதிகளாக பிடிபட்ட யூதர்கள் பொங்கி எழுந்தாளர்கள்!
இந்த சம்பவத்தில் நாஜிப்படையின் சிலர் கொல்லப்பட்டனர்  இதற்க்கு பதிலடியாக படையெடுத்துவந்த நாஜிப்படை 56000 யூதர்களை  ஒரே இடத்தில் வைத்து தீயிட்டு பொசுக்கியது 1945ம் ஆண்டு அமெரிக்கத் துருப்புகள் ஜெர்மனியில் காலடி எடுத்துவைத்த பிறகே யூத இனம் பட்ட அத்தனை அவஸ்தைகளும் உலகின் கண்களுக்கு முழுமையாக தெரியவந்தன.
Add caption

Monday, August 1, 2011

ஆதாமின் மறுபிறப்பு

உயிரற்ற உடம்பாக இருந்த ஆதாமின் சுண்டு விரலை இறைவன் தீண்ட ஆதாம் உயிர்பெற்று எழுந்ததாகச் சொல்லும் பைபிள் காட்சியை மைக்கேல் ஏஞ்சலோ தன் துரிகையால் படைத்தபோது ஆதாம் இரண்டாவது முறையாக உயிர் பெற்றான்!

கலை என்பது என்ன என்பதை இவன் வடிக்கப்போகும் சிற்பங்களிலிருந்து ஓவியங்களில் இருந்தும் உலகம் அறிவதாக மைக்கல் ஏஞ்சலோவை படைக்கும் போது இறைவன் இப்படி அறிவித்ததாக ஒரு நம்பிக்கை யாதார்தம் தத்துரூபம் என பார்போரை மெய்சிலிர்க்க வைத்த இவரின் படைப்புக்கள்  இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கின்றன இவர் இல்லாத இந்த உலகிலும்
ஆதாமின் பிறப்பு என்ற ஓவியம் உலகத்தில் இருக்கும் அனைத்து ஓவியர்களையும்; நிலைகுலைய வைத்தது. அந்த அற்புதமான படைப்பு சிஸ்டைன் மாதா கோயிலின் வாட்டிகான் மேற்கூரையில் உள்ளது இதனைப்போலவே வேறு 340 ஓவியங்கள் இருக்கின்றன இவற்றை ஓவியங்கள் என்று கூறுவதை விட ஓவியங்களின் டிக்ஷனரி என்று சொல்வது தான் பொருத்தமாக இருக்கும். மேற்கூரையில் வரையப்பட்ட மனித ஓவியங்கள் மனிதர்களைகப்போலவே காட்சியளிக்கின்றது முப்பரிமானத் தன்மையைப் பிரதிபலிக்கின்றது உட்காரும் போது குனியும் போது நிமிரும் போது ஓடும்போது  என்ற ஒவ்வொரு மனித அசைவுகளையும் ஒவியமாக ரெக்கார்ட் செய்த முதல் கலைஞன் மைக்கல் ஏஞ்சலோ அடிப்படையில் இவர் ஓவியர் அல்ல மகா சிற்பி
1504-ம் ஆண்டு மைக்கல் ஏஞ்சலோh தனது இருபத்தொன்பதாவது வயதில் செதுக்கிய பதின் மூன்று அடி உயரமான டேவிட் சிலை அதுவரை இருந்த நடைமுறையினை மாற்றியமைத்தது
அப்போது தான் சர்வ அதிகாரத்தோடு விளங்கிய போப் ஆண்டவரான இரண்டாம் யூலியஸ் இடம் இருந்து மைக்கல் ஏஞ்சலோவிற்க்குத் சம்மன் வந்தது சிஸ்டைன் தேவாலயத்தில் மேற்கூரைகளிலும் சுவர்களிலும் பைபிலின் காட்சிகளை ஓவியங்களாகத் தீட்ட போப் ஆண்டவர் ஏஞ்சலோவுக்கு கட்டளை பிறப்பித்தார் நான் சிற்பி ஓவியன் இல்லை என்னை விட்டுவிடுங்கள் என்ற ஏஞ்சலோவின் கெஞ்சல் போப் பாண்டவரின் காதில் விழவில்லை ஏஞ்சலோ வேண்டா வெறுப்புடன் தான் இந்த வேலையைத் தொடங்கினர் சுமார் பத்தாயிரம் சதுர அடியில் ஓவியங்களை வரையும் மாபெரும் பொறுப்பு பணியை நான்கு 5 ஓவியர்களை வைத்துக்கொண்டு ஏஞ்சலோ ஆரம்பித்தார் அவர் ஒரு முன்கோபக் காரர் சுற்றிவளைத்துப் பேசத்தெரியாதவர் அதனால் வேலைக்குத் சேர்ந்த வேகத்திலேயே உதவியாளர் விலகிட தேவாலயத்தின் உயர்ந்த உட்கூரைகளில் ஓவியம் வரையும் கஷ்டம் பணியைத் தனி ஒரு மனிதராக ஏஞசலோ மின்சார விளக்குகளை இல்லத அந்தக் காலத்தில் மொழுகுவர்தி வெளிச்சத்தின் சாப்பாடு தூக்கம் என்று எல்லாவற்றையும் மறந்து ஏஞ்சலோ தேவாலயத்தின் விதானத்தின் ஓவியம் தீட்டியபோது தூரிகையில் இருந்து சிதறிய வர்ணங்கள் அவர் கண்களை கசக்கி எடுத்தன இப்படி நாலு ஆண்டுகள் அவர் இரவுபகலாக  உழைக்க சிஸ்டைன் தேவாலயம் ஒர் ஒவியக்கூடமாக  மாறியது
இந்த அற்புதமான கலைஞன் இளைஞனாக இருந்த போது தான் செதுக்கிய டேவிட்சிலையப் போல இறுக்கமான உருண்டு திரண்ட தசைகளுடன் திடகாத்திரமாக இருந்தார் ஆனால் கடைசிக் காலத்தில் இவர் விசித்திரமான உபாதைகளினால் தவித்தார் சார்க்ஸைக் கலற்றினால் கால் தோலும் சோர்ந்து கழன்றது
திருமணம் மனைவி குழந்தை பார்காத ஏங்சலோ 1564 ஆண்டு மரணப்படுக்கையில் அருகே இருந்த நன்பரிடம்
நான் இந்த உலகத்துக்கு விட்டுச் செல்வது என்னுடைய படைப்புக்கள் என்ற குழந்தைகளைத்தான் என்னுடைய குழந்தைகள் என்று சொல்லவே அவற்றுக்குத் தகுதி இல்லை என்றாலும் என்றும் அவற்றில் நான் வாழ்வேன்.



போல்பார்டின் வெறியாட்டம்!

ஆட்சியாளன் நல்லவனாக இருந்தால் அவன் இறந்ததும் மக்கள் சோகத்தில் மூழ்கிப்போவர்கள் கொடுங்கோலனாக இருந்தால் நின்மதிப் பெருமூச்சு விடுவார்கள்
ஆனால் கம்போடிய மக்கள் ஆத்திரப்பட்டார்கள் அவர் இறந்தாலும் பரவாயில்லை அவர் பிணத்தையாவது தூக்கில் போடுவோம் !என்று கொதித்து தெழுந்தார்கள் அந்த அளவுக்கு பொடுங்கோளன் போல்பாட்.




போல்பாட்டுக்கு சீனாவின் மாசேதுங்தான் மானசீக குரு! 1975 லிருந்து 1979 ம் ஆண்டு வரை போல்பார்டின் ஆட்சியின் கீழ் கம்போடியா இருந்தது. ஏழை –பணக்காரன் என்ற வர்க்க வேறுபாடு இல்லாத ஆதர்சநாட்டை உருவாக்கப் போகிறேன் என்று சொல்லி போல்பாட் ஆடிய வெறியாட்டத்தைப்பார்த்து கம்போடியா மக்களின் முதுகெலும்பு சில்லிட்டுப் போனது
இப்படி  நடந்த போல்பாட்டின் நான்கு ஆண்டு கால காட்டுமீராண்டி ஆட்சியில் அந்த நாட்டின் கால்வாசி ஜனத்தொகை காலியானது கடைசியில் 1979ம் ஆண்டு வியட்நாமுக்கும் கம்போடியாவுக்கும் இடையே கசிந்து வந்த எல்லைப்பிரச்சனை பூதாகரமாக வெடிக்க வியட்நாம் துரப்புகள் கம்போடியாவிற்க்குள் புகுந்தன இதை அடுத்து போல்பாட்டும் அவரது படையினரும் நாலா திசைகளிலும் தப்பி ஓடினர்.


கும்போடியா விவசாய நாடு இந்த நாட்டுக்குத்தேவை நிலத்தில் இறங்கி கடுமையாக வேலை செய்யக்கூடிய உழைப்பாளிகளே தவிர சட்டையின் மடிப்பு கலையாமல் வேலை செய்யும் அரச ஊழியர்களோ வியாபரிகளோ ஆசிரியர்களோ இல்லை “..என்று அத்தனை பெயரையும் துப்பாக்கி முனையில் வயர்காடுகளை  நோக்கி ஓட ஓட விரட்டினார் போல்பாட்
வீடு சொத்து சுகம் எல்லாவற்றையும் அப்படி அப்படியே விட்டுவிட்டு ஆண்-பெண் குழந்தைகள் என்று அத்தனை பேரும் ஓடினார்கள்.

 கிராமங்களுக்கு குடி பெயர மறுத்தவர்களை போல்பாட்டின் படையினர் ஈவு இரக்கமே இல்லாமல் சுட்டுக் கொன்றார்கள்  ஒவ்வொரு நகரமாகப் போன இந்த இயந்திரத்துப்பாக்கிப் படையினர் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக படுத்திருந்த நோயாளிகளையும் கூட வயதானவர்களையும் கூட விட்டு வைக்கவில்லை ! அவர்களைத் தரதர வென்று இழுத்துவந்து வீதிகளில் போட்டுவிட்டு மருத்துவமனைகளையும் வெடிவைத்துத் தகர்த்தினார்கள் .

"பள்ளிக்கூடங்களில் படித்துக்கொன்டிருந்த பிஞ்சுக் குழந்தைகளையும் போல்பர்’டின் படைவிட்டு வைக்கவில்லை மக்களிடையே பீதியைக் கிளப்புவதற்காக குழந்தைகளின் இரண்டு கால்களையும் பிடித்து அரக்கத்தனமாக அவர்கள் கிழித்தெரிய ..."
மக்களுக்கு  பயத்தில் மூச்சுப் பேச்சே வரவில்லை !காகிதப்பணமே தேவையில்லாத ஒன்று என்று போல்பாட் சொல்ல கம்போடியாவின் எல்லா வங்கிகளையும் அவரது படையினர் தரைமட்டமாக்கினர்.தெருவில் பணம் மலைபோல் குவிக்கப்பட்டு கொளுத்தப்பட்டது





 கம்போடியாவைத் தனது பினாமியின் மூலம் வியட்நாம் ஆட்சி செய்ய ஆரம்பித்து ஒரு கட்டத்தில் காட்டில் மறைந்திருந்த  போல்பாட்.தனது படையினராலயே காடடுச் சிறையில் வைக்கப்பட்டு இருந்தார் 1998ம் ஆண்டு ஏப்பிரல் 18ம் திகதி அந்தக் காட்டுச் சிறையிலேயே இறந்து போனார்.



இருபது லட்சம் மக்களின் கொலைபற்றி நிருபர்கள் ஒருசமயம் கேள்வி எழுப்ப அதற்க்கு போல்பர்ட் சொன்ன பதில் “நான என்ன செய்தாலும் அதை என் நாடடின் நன்மைக்காகவே செய்தேன்..”

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | cheap international calls