Wednesday, January 4, 2012

யாழ்பாடிய மண்ணில் பன்பாடிய பறை ஒலி

கடிவாளம் பத்திரிகை யின்பக்கம் 


aho;kz;iz gw;wp cq;fsJ fUj;J

யாழ்ப்பாணத்துக்கு வர ரொம்ப ஆர்வமாக இருந்தது. கடல்கடந்து இருக்கின்ற அதுவும் தமிழ் நாட்டை போன்று தமிழ் பேசுகின்ற  மக்களை சந்திக்க வந்திருந்த பொழுதுகளை வார்த்தைகளால் சொல்ல முடியாது. 


யாழ் மண்ணின் மீது நான் கொண்ட காதலின் பால் இந்த மக்களைச் சந்திக்கவும் இந்த மண்ணில் இந்தக் கலையினை நடாத்துவதற்கும் வாய்ப்புக் கிடைத்துள்ளது.
இக் கலையானது ஒடுக்கப்பட்ட சமூகத்தினரை உலகத்திற்கு வெளிக்காட்டுவதற்காகவே நாட்டார் கலைகள் உருவாக்கப்பட்டன. அந்த மக்கள் நாட்டார் கலைகளின் மூலமாக தமது வாழ்வியலை உலகிற்குக் காட்டியுள்ளனர். பூஜ்ஜியம் என்ற வடிவம் இல்லை என்றால் கணிதத்திற்கு பூஜ்ஜியம் என்ற சொல் இருந்திருக்காது அது போல் தான் இக் கலையும்.
திருமணம், கோயில் திருவிழா, சாவுவீடு போன்ற நிகழ்வுகளிலேயே தப்பு அடித்து ஆடுவார்கள். இம் மரபு மறைந்து போகாது இருப்பதற்காக தமிழகத்தில் தற்போது மீள் உருவாக்கம் செய்யப்பட்டு வருகின்றது. மதுரையில் கொட்டு என்றும், தஞ்சாவூரில்  தப்பு எனவும், சென்னையில் மேளம் என்றும் இதனைப் பல்வேறு பகுதிகளிலும் பல பெயர் கொண்டு அழைக்கின்றனர்.




நாட்டார் கலைகள் கற்க வந்த மாணவர்களின் ஆர்வம்


யாழ்ப்பாணத்தில் 30 வருடங்களுக்கு முன்னர் இருந்தவர்களுக்கு இந்தக் கலை பற்றி தெரிந்திருக்கும் ஆனால் இந்த 30 வருட காலகட்டத்தில் எத்தனையோ பிரச்சனைகள் மத்தியில் இவர்கள் வாழ்ந்துள்ளார்கள். யாரும் இக் கலையை கற்றுக் கொடுக்க இல்லை. முதலில்  இந்த மாணவர்களுக்கு இந்த கலையை சொல்லிக் கொடுக்கும் போது மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் எல்லாவற்றையும் பயின்றார்கள். மாணவர்களின் ஆர்வத்தை பார்த்து நான் மிகவும் சந்தோசப்பட்டேன்.


பறை பற்றியும் சமூகம் பற்றியும் உங்கள் கருத்து.

சமூகத்திலே பறையை ஒரு இழிவாகதான் பார்க்கின்ற ஒரு நோக்கு உள்ளது. கலையை போர் சார்ந்த கலை, சமயம் சார்ந்த கலை. சமூகம் சார்ந்த கலை என 3வகையாக பிரிப்பார்கள். இதில் பறை சமூகம் சார்ந்த கலையாக கூறுவார்கள். இப் பறை சாவுவீடுகளிலேயே அடிக்கப்படுகின்றது. இந்தப்பறை எப்படி இழிவானது என்பதுதான் வரலாறு. ஆனால் ஆதிவாசிகள் பாதுகாப்பிற்காகவே பறையை பயன்படுத்தினார் இவ்வாறு விலங்குகள் தம்மை தாக்க வரும் போது பறையை அடித்து தம்மை பாதுகாத்து கொண்டனர். அத்தோடுஒரு மலையில் இருந்து இன்னொரு மலையில் உள்ளவர்களை கூப்பிடுவதற்காகவும் பறையை பயன்படுத்தினார்கள். இவ்வாறு ஆரம்பகாலத்தில் பயன்பட்ட பறையை  சமூகத்தில் இன்றைய காலத்தில்  இழிவான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
முக்கியமாக சமூகத்தில்  பறையடிப்பவர்கள் பறையர்கள் என்றே பார்க்கப்படுகிறார்கள். ஆனால் சாவுவீடுகளில் பறை அடிப்பவர்களை வெட்டியான் என்றே அழைப்பார்கள். பறை அடிப்பவர்கள் எல்லாம் பறையர்கள் அல்ல என்பதை முதலில் மக்கள் மனதில் கொள்ள வேண்டும்.
யாழ்ப்பாணத்;தில் கொண்டு வந்து ஆடப்பட்ட பறை ஒருமுகப்பறையாகும். இப்பறையை நெருப்பிலே சூடுபண்ணி அடிக்கின்ற ஒரு வாத்தியம் ஆகும். பறை அடிக்கின்றவர்கள் எல்லா வகையான வாத்தியங்களையும் வாசிக்கும் வல்லமை பெற்றிருப்பார்கள்.
துமிழ் நாட்டில் மட்டுமன்றி  யாழ்ப்பாணத்திலும் மக்கள் பறையை இழிவாக பார்க்கின்ற நிலையை நான் இங்கு வந்து பார்த்தபோது உணர்ந்து கொண்டேன்.

பறையை எப்படி செய்கிறார்கள் 

பறை செய்வதற்கு வேம்பு மாட்டுத்தோல் போன்றவற்றை பயன்படுத்துகிறார்கள். அதிலும் குறிப்பாக தெரு வோரங்களில் இருக்கும் வேப்பமரங்களையே பயன்படுத்துகிறார்கள். அதற்கு காரணம் யாதெனில் தெருக்களில் இருக்கினற மரங்கள் வாகன சத்தங்களை உள்வாங்கிக் கொள்ளும். ஆப்படியான மரங்களில் பறை செய்தால் அதன் சத்தம் அதிகமாக ஒலிக்கும் என்பதகால் தெருக்களில் இருக்கின்ற மரங்களை தேடி பறைக்கு பயன்படுத்துவார்கள். அதே போலத்தான் மாடுகளிலும் இளம் ஆண் மாடுகளின் தோலை எடுத்துத்தான் பறை செய்வார்கள். ஏனெனில் அதன் தோலில் உள்ள ரோமம் உரமாக இல்லாமல் இருக்கும்.







சென்னைப்பல்கலைக்கழகத்தின் முற்றம் கலைக்குழு செயலாளரும் நாட்டார் கலைவிற்பனருமான ஆடலரசு வேணு அவர்கள் முதல் முதலாக தனது தாய்நாட்டுக்கு வெளியே தான் கற்றுக் கொடுத்த யாழ்ப்பாண இளைஞர்களுடன் நடத்துகின்ற முதல் நிகழ்ச்சி யாழ்ப்பாணப்பல்கலைக்கழகத்தில் கைலாசபதி கலையரங்கில்  நடைபெற்றது  அதன் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இவை.


தென்னிந்தியாவில் இருந்து வருகைதந்த  இவர் யாழ்பல்கலைக்கழக ஊடக வளங்கள் மற்றும் பயிற்சி மைய மாணவர்கள் , செயற்திறன் அரங்க குழுவினருடன் இணைந்து நாடாத்திய தென்னிந்தி நாட்டார் கலைகளின்  விழா 04/112/2011 அன்றில் இருந்து மூன்று நாட்க்கள் தொடர்சியாக இடம் பெற்றது.. 






கடிவாளம் பத்திரிகை யின்பக்கம் 

0 comments:

Post a Comment

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | cheap international calls