Monday, January 21, 2013

ஒன்றுமில்லாத செய்திகளையும் விசுவரூபமாக சித்தரித்து விடுவார்கள்.


24 மணி நேரமும் செய்திகளை அள்ளித்தரும் தொலைக்காட்சிகள் ஆங்கிலம், இந்தியில் மட்டுமல்ல, தமிழிலும் நிறைய வந்து விட்டன. இந்த செய்தி ஊடகங்கள் வெறுமனே ரேடியோ போல் இல்லாது காட்சி ஊடகமாகவும் இருப்பதால் எந்நேரமும் பரபரப்பான செய்திகளுக்காக ஒரு வேட்டை நாயைப் போல அலைகின்றன. குறிப்பிட்ட நாளில் தீனி சரியாக அமையவில்லை என்றால் இவர்கள் டி.ஆர்.பி ரேட்டிங்குக்காக ஒன்றுமில்லாத செய்திகளையும் விசுவரூபமாக சித்தரித்து விடுவார்கள்.
செய்தி, அதன் முக்கியத்துவம், ஆதாரங்களின் நம்பகத்தன்மை, நெருடும் காட்சிகள் மீதான சுய தணிக்கை, பார்வையாளர்களின் மலிவான உணர்ச்சிகளைத் தூண்டாமல் விமரிசனமாகப் பார்க்க கற்றுத்தரும் பொறுப்பு என்று அடிப்படை ஊடக அறவியல் எதனையும் இச்செய்தி ஊடகங்களிடம் பார்க்க முடியாது. 24 மணி நேர செய்திகளின் தாயகம் அமெரிக்காதான். அமெரிக்க மக்களை அறிவும், விமரிசனமும் இல்லாமல் ஒரு ஏகாதிபத்திய நாட்டின் ஆர்வலர்களாக  உருவாக்கியிருப்பதில் இந்த ஊடகங்களுக்கு மிகப்பெரிய பங்குண்டு.
இத்தகைய அமெரிக்க ஊடகங்களை முன்மாதிரியாக வைத்து தான் நமது செய்தி ஊடகங்களும் செயல்படுகின்றன. சன் டி.வி.யின் உலகச் செய்தியோ, புதிய தலைமுறையின் நாசூக்கான விவாதமோ எல்லாமுமே அமெரிக்க கார்ப்பரேட் ஊடகங்களின் பாதையில்தான் பயணிக்கின்றன. அத்தகைய அமெரிக்க செய்தி ஊடகங்களின் வணிக வெறி ஒரு அப்பாவியை எப்படி அலைக்கழித்து, அவனது இயல்பான பிரச்சினையை எப்படி ஒரு தேசியப் பிரச்சினையாக மாற்றி, மக்களை முட்டாளாக்கியது என்பதை அழுத்தமாகப் பேசும் திரைப்படம் தான் இயக்குநர் கோஸ்டா கவ்ராசின் மேட் சிட்டி’.

கதை:

மேட்-சிட்டி-1அமெரிக்காவின் சிறுநகர தொலைக்காட்சி சானல் ஒன்றில் பணி புரியும் மேக்ஸ், நடுத்தர வயதை எட்டி விட்டவனென்றாலும் அனுபவம் மிக்க, துடிப்பான செய்தியாளர். எப்போதும் பரபரப்பான செய்திகளுக்காக அலைந்துக் கொண்டிருக்கும் மேக்ஸ், ஒரு பிரத்யேக உடனடிச்  செய்தியின் மூலம் நாட்டையே தன் பக்கம் திருப்ப வேண்டுமென்ற இலட்சியம் உள்ளவன்.
இல்லாததை இட்டுக்கட்டி, பரபரப்பான செய்தி உருவாக்கும் முயற்சிகளுக்காக மேக்ஸை கடுமையாக விமரிசிக்கும் சானலின் மேலாளர், அவனை நொடித்துப்போன அருங்காட்சியகம் ஒன்றைக் குறித்து செய்தி சேகரிக்க அனுப்புகிறார். கூடவே புதிதாக வேலையில் சேர்ந்திருக்கும் பயிற்சி பெறுபவரை படம் எடுப்பவராக அனுப்புகிறார். ஆளில்லாத சிவன் கோவிலைப் போல, கூட்டமின்றி வாடும் அந்த அருங்காட்சியகத்தைப் பற்றிய செய்தியைக் கூட பரபரப்பாக மாற்ற முடியாது என்றில்லை. காரணம் மாக்ஸ் எதை நோக்கினாலும் அது சாகாவரம் பெற்று விடும்.
அருங்காட்சியகத்தின் நிதி நெருக்கடி பற்றி விளக்குகிறார் அதன் மேலாளர், திருமதி பேங்க்ஸ். நிதி நிலைமை காரணமாக அருங்காட்சியகத்தின் இரு காவலர்களில் ஒருவரை வேலை நீக்கம் செய்து, ஒருவரை மட்டும் வைத்து சமாளிப்பதாகத் தெரிய வருகின்றது. வேலையில் தக்கவைக்கப்பட்டிருக்கும் கிளிஃப் என்ற  கருப்பு இனக்  காவலர் அருங்காட்சியக கட்டிடத்தின் வெளியில் காவல் இருக்கிறார்.
அந்த நேரத்தில் பள்ளிச் சிறுவர்களின் குழு ஒன்று ஆசிரியையுடன் அருங்காட்சியகத்திற்கு சுற்றுலா வருகின்றது. எதுவும் பரபரப்பாக செய்தி சிக்காததால் சலிப்படைந்து, பேட்டியை முடித்து விட்டு, கேமராவை இயக்கும் பெண்ணை வெளியில் அருங்காட்சியகக் கட்டிடத்தை படம் எடுக்க அனுப்பிவிட்டு மேக்ஸ் அங்கிருக்கும் கழிவறைக்குச் செல்கிறான்.
இந்த நேரம் பார்த்து, அருங்காட்சியகத்தில் காவலாளியாக இருந்து வேலை இழந்த சாம் கையில் ஒரு பையுடன் நுழைகிறான். வேலை இழந்த பிறகும் காவலருக்கான சீருடை அணிந்து வந்திருக்கிறான். வேலை போய் விட்டது என்று வீட்டில் மனைவியிடம் சொல்ல அவனுக்குத் தைரியம் இல்லை என்று பின்னர் தெரிய வருகிறது. தான் சொல்வதை ஒரு ஐந்து நிமிடம் மட்டும் காது கொடுத்துக் கேட்க வேண்டும் எனக் குழந்தையைப் போல் திருமதி பேங்க்ஸிடம் கெஞ்சுகிறான் சாம். வேலை இல்லாமல் அவன் வாழ்க்கை அழிந்து போகும் என்று புலம்புகிறான்.
திருமதி பேங்க்ஸ் சாமிடம் பேசுவதற்குக் கூட மறுக்கிறாள்; உடனே வெளியில் போகச் சொல்கிறாள். சாம் கோபமடைந்து திருமதி பேங்க்ஸை மிரட்டுவதற்காகத் தன் துப்பாக்கியைக் காட்டுகிறான். அதுவும் சூடான விவாதத்தின் அங்கமாக இருக்கிறதேயன்றி வேறு வன்முறை ஒன்றுமில்லை.
உள்ளே கழிவறையில் இருந்தபடி இதைக் கவனிக்கும் மேக்ஸ், வேடிக்கை பார்க்க வந்த குழந்தைகளை சாம் பிடித்து வைத்திருப்பது போல புரிந்து கொள்கிறான். அங்கிருந்த பொது செல்பேசியில் தன் சானலை தொடர்பு கொண்டு ’ஒரு கடத்தல் சம்பவம் நடப்பதாகவும் அதை “பிரத்யேகமாக” நம் சானல் காட்ட வேண்டும்’ என்றும் சொல்கிறான். மேலாளர் அதை ஏற்றுக்கொள்ளவே, வெளியே இருக்கும் பெண் மூலம் நேரடி ‘பிரத்யேக‘ படப்பிடிப்பு ஆரம்பிக்கிறது. சிறுவர்கள் கடத்தப்பட்டதாக உடனடிச் செய்தி வெளியாகிறது.
திருமதி பேங்க்ஸ், சாம் கையில் இருக்கும் துப்பாக்கியைப் பிடுங்க முயற்சிக்க அது எதிர்பாரா விதமாக வெடித்து வெளியே இருக்கும் கருப்பர் கிளிஃபை காயப்படுத்துகிறது.
அருங்காட்சியகத்தில் இருக்கும் தொலைக்காட்சியைப் போட்டு பார்க்கும் சாம் திடீரென்று செய்தியில் தான் கடத்தல்காரனாகச் சித்தரிக்கப்படுவதைப் பார்த்து அதிர்ச்சியடைகிறான். கழிவறையில் ஒளிந்து கொண்டு தொலைபேசி வழியாகப் பேசிக் கொண்டிருக்கும் செய்தியாளர் மேக்ஸை கையும் களவுமாகப் பிடிக்கிறான். ஆனால், அதற்குள் நிலைமை எல்லை மீறிப் போய் விடுகின்றது.
இதுதான் தன் வாழ்நாளை மாற்றப் போகும் பிரத்யேக செய்தி, இந்தச் சூழலை கனகச்சிதமாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என மேக்ஸ் முடிவு செய்கிறான். சாமின் அப்பாவித்தனத்தையும், பள்ளிச் சிறுவர்கள் துப்பாக்கி முனையில் அடைத்து வைக்கப்பட்டிருப்பதான அவனது கற்பனைக் கொடூரத்தையும் கலந்து  அதனை ஒரு சுவாரசியமான செய்தியாக்கத் திட்டமிடுகிறான். ஈரை பேனாக்கி பேனைப் பெருமாளாக்கும் லைவ் தொலைக்காட்சி செய்தியாளரான மேக்ஸ்,  தொலைக்காட்சி மூலமாக சாமை தீவிரவாதியாகச் சித்தரிக்கிறான். இழந்து விட்ட வேலையைக் கேட்க வந்த சாம் தான் ஒரு கடத்தல்காரனாக்கப்பட்டிருப்பதைச் சிறிதும் எதிர்பார்க்கவில்லை. அந்த சூழ்நிலையில் திணறுகிறான். வெளியே ஊடகங்களும், போலிசும் குவிந்து விடுகிறார்கள்.
சாதாரணமாக அவன் வந்ததாகவும், திருமதி பேங்க்ஸை பயமுறுத்துவதற்கு மட்டும் அவன் துப்பாக்கியுடன் வந்ததாகவும், வேலை இழப்பால் அவன் குடும்பமும், குழந்தைகளும் பாதிக்கப்படுவார்கள் என்றும்,  தனக்கு இந்த வேலையை விட்டால் வேறு வேலை கிடைக்காது என்றும் அப்பாவியாகக் கூறுகிறான், ஆறடி உயரமான வாட்டசாட்டமான சாம்.
அதற்குள் போலிசார் தொலைபேசியில் சாமைத் தொடர்பு கொண்டு குழந்தைகளை விடுவிக்க பணயமாக என்ன வேண்டும் என்று கேட்கிறார்கள். அந்தக் கேள்விக்கு அவனிடம் பதிலில்லை. கடத்தினால்தானே கோரிக்கை வைக்க முடியும்? வெளியே போனால் போலிசு கைது செய்துவிடும் என்பதால் செய்தியாளார் மேக்ஸ் சொல்படி கேட்கிறான். மேக்ஸை தன் தூதுவராக வெளியில் அனுப்புவதாகச் சொல்கிறான். இதற்கு மேல் மேக்ஸ் தன் நிகழ்ச்சியைப் பரபரப்பாகத் தொடர்கிறான்.
செய்தியாளார் மேக்ஸ், சாமின் அப்பாவித்தனத்தைப் புரிந்து கொள்கிறான். அவனைக் காப்பாற்றுவதற்கு மாக்ஸ் விரும்பினாலும் அதனூடே தனக்கு வேண்டிய சென்சேஷன் (பரப்பரப்பு) செய்திகளையும் சேர்த்து அறுவடை செய்ய விரும்புகிறான். ’அருங்காட்சியகத்தில் பள்ளிச் சிறுவர்களைப் பிடித்து வைத்திருக்கும் துப்பாக்கி ஏந்திய கடத்தல்காரன்’ என்ற ஒற்றைச் செய்தியை வைத்து அமெரிக்கா முழுவதும் பரபரப்பில் ஆழ்த்த வேண்டும். இதனை உண்மையென நம்பும் வண்ணம் ஒரு கருப்பினக் காவலர் வேறு சுடப்பட்டுக் காயமடைந்திருக்கிறார்.
தன் பேட்டியைத் தொலைக்காட்சிகள் ஒளிபரப்ப வேண்டும் என்பது சாமின் கோரிக்கை என்று மாக்ஸ் வெளியில் நிற்கும் போலீசு அதிகாரியிடம் சொல்கிறான். அவர்களது ஒப்புதலைப் பெற்று தொலைக்காட்சி காமிராவை எடுத்துக்கொண்டு உள்ளே திரும்புகிறான். “வேலை இழந்ததால்தான் இப்படிச் செய்கிறேன். நான் ஏழை, அப்பாவி. எனக்கு வேறு வழி தெரியவில்லை” என்று சாம் சொல்வது தொலைக்காட்சியில் நாடெங்கும் ஒளிபரப்பாகின்றது. மற்ற செய்தி நிறுவனங்களும் இதை போட்டி போட்டுக் கொண்டு ஒளிபரப்புகின்றன.
மேக்ஸ் வெளியில் நிற்கும் பயிற்சிக்கு வந்துள்ள பெண்ணிடம் சாமின் அம்மா, நண்பர்கள், க்ளிஃப் என சகலரையும் பேட்டியெடுக்கச் சொல்கிறான். அனைத்துக் காட்சிகளையும் ஒரு திரைக்கதை போல் அமைத்து,  பேட்டிகளை முன்னும் பின்னுமாகக் கோர்த்து மாற்றியமைக்கிறான். ஆனால் ஏதோ குறைகிறது. மாற்றி மாற்றி கேள்விகள் கேட்டு கடைசியில் உதவியாளர் பெண் கேட்கும் கேள்வியில் சாமின் மனைவி உடைந்து அழுகிறாள். ஆம். மேக்ஸிற்கு வேண்டியது கிடைத்து விட்டது. அதன்படி சாம் மீது அனுதாபத்தை உருவாக்கும் செய்தித் தொகுப்பை உருவாக்கி ஒளிபரப்புகிறான் மாக்ஸ்.
சாம் அமெரிக்காவின் ஹீரோ ஆகிவிடுகிறான். சாம் படம் போட்ட டீ சர்ட்களின் விற்பனை கூட பரபரப்பாக நடக்கின்றது. சாமிற்கு அமெரிக்க மக்கள் ஆதரவு பெருகுகிறது. ஒரு சிறு ஊரில் நடக்கும் நிகழ்வு அமெரிக்கா முழுவதும் பேசப்படும் முக்கியச் செய்தியாகி விடுகிறது.
வெளியே பரப்பரப்பாக இருக்க, அருங்காட்சியகத்தினுள் பள்ளிச் சிறுவர்கள் ஜாலியாக விளையாடுகிறார்கள்; தூங்குகிறார்கள்; தாங்கள் தொலைக்காட்சியில் காட்டப்படுவதைக் கண்டு ஆரவாரம் செய்கிறார்கள். சிறுவர்களுடன் சிறுவனாக சாம் விளையாடி கொண்டிருக்கிறான். அவர்களுக்குப் பசிக்கும்போது அருங்காட்சியகத்தின் உணவு விற்கும் எந்திரத்தைத் திறந்து தின்பண்டங்களை எடுத்துக் கொடுக்கிறான். அவர்களுக்கு விளையாட்டு காட்டுகிறான்.
வெளியே அவர்கள் பெற்றோர்களோ செய்தி நிறுவனங்கள் பரப்பியிருக்கும் பயத்தில் உறைந்து போய் இருக்கிறார்கள்.
இன்னொரு பக்கம் நியூயார்க்கில் இருந்து செயல்படும் அமெரிக்காவின் பெரிய தொலைக்காட்சி நிறுவனங்களின் ஒன்றில் முக்கியச் செய்தியாளராகக் கருதப்படும் கெவின் என்பவன் மேக்ஸூக்கு கிடைக்கும் முக்கியத்துவத்தைப் பார்த்து எரிச்சலடைகிறான். முன்பு மேக்ஸ் இவனுடைய நிறுவனத்தில் வேலை செய்யும் போது இருவருக்கும் ஒத்துப் போகவில்லை என்பதும் இந்த எரிச்சலுக்கு ஒரு காரணம்.
’ஒருவன் குழந்தைகளை துப்பாக்கி முனையில் கடத்தியுள்ளான், அவன் ஹீரோ ஆக்கப்படுவது அமெரிக்காவின் எதிர்காலத்திற்கு ஆபத்து’ என்று மேக்ஸுக்குப் போட்டியாக எதிர்க்கோணத்தில் செய்திகளை உருவாக்குகிறான் கெவின். நியூயார்க்கிலிருந்து சிறப்பு விமானத்தில் வரும் கெவின், மேக்ஸ் வேலை செய்யும் உள்ளூர் செய்தி நிறுவனத்திடமிருந்து செய்தித் தொகுப்புகளை விலைக்கு வாங்கி அவனே இனி ரிப்போர்ட் செய்வதாகச் சொல்கிறான்.
மேக்ஸ் தொகுத்த செய்தி சாமின் மீது அனுதாபம் பிறக்கச் செய்கிறது. ஆனால் அதை அப்படியே நேர் எதிராக திருத்தம் செய்கிறான் கெவின். உதாரணத்திற்கு சாமின் மனைவியின் பேட்டியை எடுத்து, தனக்கு வேண்டியே வாக்கியங்களை திருத்தம் செய்து சாமை ஒரு தீவிரவாதியாகச்  சித்தரிக்கிறான். கெவின் மற்றும் மாக்ஸின் போட்டியால் சாமின் உயிருக்கு பெரும் அபாயம் ஏற்படுகிறது.
யாரோ ஒருவரைப் பிடித்து,  அவர் தான் காவலர் சாமின் பக்கத்து வீட்டுக்காரர் என்று பேட்டியெடுக்கிறார்கள். அவர் ஏதேதோ உளறும்போது “சாம் அவ்வபோது கோபப்படுவான்” என்று பேச்சுவாக்கில் கூறுகிறார். இந்தப் பேட்டியை தொலைக்காட்சியில் பார்த்து சாமின் குடும்பத்தார் குழப்பம் அடைகிறார்கள். ‘யார் இந்த நபர், இவரை நாம் எப்பொழுதுமே பார்த்ததில்லையே?!” என்று யோசிக்கிறார்கள்.
இன்னொரு பக்கம் கருப்பினத் தொலைக்காட்சிகள் கருப்பர் க்ளிஃப் சுடப்பட்டதற்கு இனவெறிதான் காரணம் என்று செய்தியைப் புனைகிறார்கள். காவலர் க்ளிஃப்,சாம் தன் நண்பர் என்றும், அவன் தனக்கு எந்தத் தீங்கும் நினைக்கமாட்டான்  என்றும் சொல்வதை எடிட் செய்து நீக்குகிறார்கள். இதற்கிடையில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கருப்பர் க்ளிஃப் இறந்து விடுகிறார்.
ஏற்கெனவே நாட்கள் சென்று கொண்டிருப்பதால் விரக்தியடைந்த பெற்றோர்கள் சாம் மீது எரிச்சல் கொள்கிறார்கள். நிலைமை தலைகீழாக மாறுகின்றது. சாமுக்கு உதவியாக மேக்ஸ் ஏதும் செய்ய முடியாமல் திணறுகிறான். போலிஸ் சாமை சுட்டுப் பிடிக்க தயாராகின்றது.
சாம் நிலைமையை உணருகிறான். சிறுவர்களையும், மேக்ஸையும் வெளியேறச் சொல்லிவிட்டு, பையில் கொண்டு போயிருந்த வெடிமருந்தை வெடிக்கச் செய்து தற்கொலை செய்து கொள்கிறான். வெடிவிபத்தில் காயமுறும் மேக்ஸ் அதிர்ச்சியில் ஒரு இடத்தில் அமருகிறான். அவனை எல்லா தொலைக்காட்சி காமிராக்களும் சூழ்ந்து கொள்கின்றன. ”உள்ளே என்ன நடந்தது ?” என்று அவர்களைனவரும் கேட்கின்றனர்.
“நாம் சாமைக் கொன்று விட்டோம்‘’ என்று கத்தியபடி நடக்கிறான். அதுவும் நேரடியாக ஒளிபரப்பாகின்றது.

மேட்-சிட்டி-2

நாய் மனிதனைக் கடித்தால் செய்தியில்லை, மனிதன் நாயைக் கடித்தால்தான் செய்தி‘ என்ற பிரபலமான கூற்றே இன்றைய 24 மணி நேர செய்தி ஊடகங்களின் தாரக மந்திரம். ஒருவேளை நாய்தான் வழக்கமாக மனிதனைக் கடிக்குமென்றாலும், அதையே ஒரு தூரக்காட்சியில் நேரெதிராகக் காட்டுவதை இந்த ஊடகங்கள் விரும்பிச் செய்கின்றன.
படத்தில் வரும் ஒரு காட்சியின்படி அருங்காட்சியகத்தில் குழந்தைகளுடன் மாட்டிக்கொண்ட சாம் அவர்களுக்கு கதை சொல்கிறான். தன் பாதுகாப்பிற்கு வைத்திருக்கும் துப்பாக்கியை வைத்து அமெரிக்கப் பழங்குடிகளைப் போல் ஆடியும், நடித்தும் காண்பிக்கிறான். ஆனால் இதை ஹெலிகாப்டர் மூலம் மேலிருந்து படமெடுக்கும் செய்தி நிறுவனங்கள் அவன் குழந்தைகளை துப்பாக்கியை வைத்து பயமுறுத்துவதாக அறிக்கை கொடுக்கின்றன. போலிசு அவனைக் கொன்றாவது குழந்தைகளைக் காப்பாற்ற வேண்டும் என்ற நிலைக்குச் செல்கிறது.
ஒரு காட்சியில் அவர்கள் எதிர்பார்க்கும் பொருட்கள் இடம்பெற்று விட்டாலே போதும், மீதித்  திரைக்கதையை ஊடகங்கள் எழுதி, உருவாக்கி விடுகின்றன. சமீபத்தில் கவுகாத்தியில் ஒரு பெண் துகிலுறியப்பட்ட வன்முறை அனைத்து ஊடகங்களிலும் வெளியாயின. எல்லோரும் இந்தக் காட்சியை வெளியிட்டபடி ‘நாடு இப்படிக் கெட்டுக் கிடக்கின்றதே! பெண்களுக்கு பாதுகாப்பில்லையே!‘ என்று கவலைப்பட்டுக் கொண்டனர்.
ஆனால் இந்தக் காட்சியைக் காட்டுவதற்காகத்தான் இத்தகைய ’கவலைகளே’ அன்றி வேறு எதுவுமில்லை. பார்வையாளர்களும் இணையம் முதற்கொண்டு செய்தி ஊடகங்கள் வரை அந்தக் காட்சியை பார்க்கத்தான் விரும்பினார்களே அன்றி, அந்தப் பெண் மீது இரக்கமோ, அந்தக் கயவர்கள் மீதான கோபமோ கொள்ளவில்லை.
உலக ஊடகச் சந்தையைக் கட்டுப்படுத்தும் ரூபர்ட் முர்டோச்சின் செய்தி நிறுவனங்கள் இங்கிலாந்தில் ஒட்டுக்கேட்டு எழுதிய ஊழல் பலராலும் பேசப்பட்டது. அதுவும் இங்கிலாந்து அரச வம்சத்தின் மாளிகைகளுக்குள்ளும் முர்டோச்சின் காது சென்ற பிறகே அது பாரிய தவறாகக் கருதப்பட்டது. ஆனால் முர்டோச்சின் நிறுவனங்கள் ஈராக் மீதான அமெரிக்க ஆக்கிரமிப்பிற்கு ஆதரவாக பல்வேறு பொய்க்கதைகளைத் தயாரித்து வெளியிட்டிருப்பதை யாரும் ஒரு குற்றமாகப் பார்க்கவில்லை. போர்க்களச் செய்தியாளர்கள் என்ற பெயரில் அமெரிக்க இராணுவத்துடன் சென்றவர்கள் வியந்து பேசிய கதைகளெல்லாம் ஊடக அறத்தினைக் கேலி செய்வதாக பொதுவில் கருதப்படுவதில்லை.
அரசியல் ரீதியாக ஏகாதிபத்தியங்களின் ஆக்கிரமிப்புக் கொள்கைகளை நியாயப்படுத்துவது போல, பண்பாட்டு ரீதியாக அரட்டை, கிசுகிசு, வி.ஐ.பி.களின் வாழ்வை வியந்தோதும் செய்திகள் போன்றவற்றை வைத்து மலிவாக கல்லாக் கட்டுவதும் இத்தகைய ஊடகங்கள்தான்.
சில ஆண்டுகளுக்கு முன்னர் வந்த பேஜ் 3‘ எனும் இந்திப்படம் நினைவிருக்கிறதா? அதில் மேட்டுக்குடியினரின் ஆட்டம் பாட்டங்களைச் செய்திகளாக வெளியிடும் போது, அவர்களது பாலியல் வன்முறை குறித்த செய்திகளை வெளியிட முடியாமல் பதவியிலிருந்து நீக்கப்படுவாள், படத்தின் நாயகி. பல்வேறு ஊடகங்களில் உள்ள பத்திரிகையாளர்களெல்லாம் இப்படித்தான் கவனமாக தயாரிக்கப்படுகின்றனர். ஆளும் வர்க்கத்தின் சிந்தனையோட்டத்தை சில மாதங்களுக்குள்ளாகவே உண்டு உரமாக்கி விடுகின்றனர்.
படத்தின் ஆரம்பக் காட்சிகளில் கருப்பு இனக் காவலர் கிளிஃப் துப்பாக்கிக் குண்டு பாய்ந்து காயமடைந்து சாயும் போது, மேக்சின் உதவியாளரான பெண் ஓடி வந்து அவரைத் தூக்கிவிட உதவி செய்வாள். ’அப்போது ஏன் காமராவால் அதைப் பதிவு செய்யவில்லை?‘ என்று பின்னர் மேக்ஸ் அவளைக் கடிந்து கொள்வான். இறுதிக் காட்சியில் காயமடைந்த மேக்ஸ் தன் தலையில் வழியும் ரத்தத்தை துடைக்க முனைகிறான். அதே உதவியாளர் பெண் அதைத் தடுத்து, ரத்தம் வழிய படம் பிடித்தால் நன்றாக இருக்கும் என்று அப்படியே பேச சொல்லுகிறாள். அவளும் ஊடகத்துறைக்கு ’தயாராகி’ விட்டிருக்கிறாள். ஆரம்பத்தில் மனித நேயத்தோடு செயல்பட்டவள் பின்னர் ஊடகங்களின் இரக்கமற்ற நெறிமுறைக்குத் தயாராகி விடுகிறாள்.
கவுகாத்தி பெண் மீதான பாலியல் வன்முறையில் கூட அதைப் பதிவு செய்த உள்ளூர் தொலைக்காட்சி செய்தியாளர் மீது பல விமரிசனங்கள் வைக்கப்பட்டன. தொலைக்காட்சி செய்தி பரபரப்புக்காக நிருபரே தூண்டி விட்டு இந்தச் சம்பவம் நடந்ததாகவும் கூறப்படுகிறது. அதைத் தாண்டி வேறு சில அறிஞர்கள் ஒரு ஊடகவியலாளனின் கடமை ஒரு சமூக நிகழ்வைப்  பதிவு செய்வதிலிருந்தே மதிப்பிடப்பட வேண்டுமே அன்றி, அந்தப் பிரச்சினைக்கு அவன் உதவினானா, இல்லையாவென ஆராய்தல் தவறு என்கிறார்கள்.
ஊடக உலகில் ஒரு பத்திரிகையாளனது அறம் என்பது அவனது தனிப்பட்ட விழுமியங்களால் உருவாக்கப்படுவது இல்லை. அப்படி இருந்தாலும் அது நடைமுறைக்குச் செல்லும் அதிகாரத்தைக் கொண்டிருப்பதில்லை. பத்திரிகை முதலாளிகளின் வர்த்தக நோக்கே ஊடக உலகின் நெறிமுறைகளைத் தீர்மானிக்கும் அடிப்படையைக் கொண்டிருக்கிறது. ஆகவே எதனைச் செய்தியாகப் பார்க்க வேண்டும், செய்தியை எப்படிப் பார்க்க வேண்டும், எதை முன்னிலைப்படுத்த வேண்டும் என்பதிலெல்லாம் இந்த புதிய பத்திரிகையாளர்கள் விரைவில் கை தேர்ந்தவர்களாகி விடுகிறார்கள்.
மலிவான பரபரப்புச் செய்திகளைத்தான் பரந்துபட்ட வாசகர்கள் விரும்பி ரசிப்பார்கள் என்று முடிவு செய்து கொண்டு, இவர்களாகவே அத்தகைய செய்திகளைத் தெரிவு செய்கிறார்கள். அல்லது ஒரு செய்தியின் கோணத்தை அப்படி மாற்றி விடுகிறார்கள். மக்கள் போராட்டம் ஒன்றின்மீது போலீசு நடத்தும் தாக்குதலைக் கூட காட்சி ரீதியாக வெறும் சண்டைக் காட்சி போல மாற்றி விடுகிறார்கள். ஆகவே ஊடக முதலாளிகளும், பத்திரிகையாளர்களும் ஒருவருக்கொருவர் முரண்படுவதில்லை.
நிகழ்வு ஒன்றினைப் பதிவு செய்து, பொது மக்களிடம் காண்பிப்பது ஒரு பத்திரிகையாளனது அடிப்படைக் கடமை என்றாலும் அத்தகைய நிகழ்வின் மீது அவன் யார் சார்பில் பேச வேண்டும் என்பது முக்கியமானது. நடுநிலைமை என்று பொதுவில் கூறப்படும் ஒன்று உண்மையில் இருக்கவே முடியாது. அதிகார வர்க்கத்தை கேள்வி கேட்கும் ஒரு பத்திரிகையாளன் அதை மக்கள் நோக்கிலிருந்தே பேச முடியும். ஆனால் அதிகார வர்க்கத்திடம் அடிபணிந்து போகும் ஊடகச் சூழ்நிலையே இன்று செல்வாக்கு செலுத்துகிறது. இறுதியில் தனது பணி குறித்து எந்த பத்திரிகையாளருக்கும் குற்ற உணர்வு வருவதில்லை. அந்த அளவுக்கு பிழைப்புவாதம் கோலேச்சும் சூழ்நிலையில் வாழ்கிறோம்.
தென் ஆப்பிரிக்காவின் புகைப்பட பத்திரிகையாளரான கெவின் கார்ட்டர் 1993 இல் சூடானுக்கு செல்கிறார். அங்கு ஒரு சிறுமி பட்டினியாலும், வறட்சியாலும் எலும்பும் தோலுமாக இருக்க, அருகே செத்த விலங்குகளைத் தின்னும் ஒரு பெரிய பறவை அவளை நெருங்க முயற்சிக்கிறது. அந்தப் பறவையை தொந்திரவு செய்யாமல் அதுவும், சிறுமியும் கேமராவின் சட்டகத்தினுள் வரும் வரை அவர் 20 நிமிடங்கள் காத்திருந்து புகைப்படம் எடுக்கிறார். அந்தப் புகைப்படம் 1994ஆம் ஆண்டு புக்கர் பரிசைப் பெறுகின்றது.
கருத்தரங்கு ஒன்றில் படத்தில் இருக்கும் அந்தச் சிறுமிக்கு பிறகு என்ன ஆனது என்று பலரும் கேட்கிறார்கள். உண்மையில் கார்ட்டருக்கு அது குறித்து எதுவும் தெரியாது. படம் எடுத்த பிறகு அவர் திரும்பி விட்டார். இதனடிப்படையில் கார்ட்டர் மீது பலமான விமரிசனம் எழுப்பப்படுகின்றது. உயிர் போகும் நிலையில் உள்ள சிறுமியைக் காப்பாற்ற எந்த முயற்சியும் செய்யாமல், வெறுமனே புகைப்படம் மட்டும் எடுத்த அவரது செயலைப் பலரும் கண்டிக்கிறார்கள். இதன் பிறகு இரண்டு ஆண்டுகளாய் இந்தப் பிரச்சினையில் பாதிக்கப்பட்ட கார்ட்டர் இறுதியில் தற்கொலை செய்து கொள்கிறார்.
ஆனால் இன்று அப்படி ஒரு புகைப்படம் எடுக்கப்பட்டால் யாரும் அந்த கேள்வியையோ, விமரிசனத்தையோ முன்வைக்கப் போவதில்லை. அத்தகைய அடிப்படை அறத்தை ஊடகங்கள் கொன்று விட்டதால், எந்தப் பத்திரிகையாளரும் அப்படி தற்கொலை செய்து கொள்ளும் நிலை இன்று இல்லை.

Friday, May 18, 2012

காட்சிகளை சாட்சியங்களாய் எண்ணுங்கள்

ஊடகங்களே சமூக அமைப்புக்களே;
உங்கள் ஒற்றுமைதான் தாயக தமிழனை வாழவைக்கும். தமிழர்தாயகமான எங்கள் மண்ணில் வேற்றுநாட்டவன் வந்து எங்கள் பெண்களை மானபங்கப்படுத்தினான். எம்மால் தடுக்கமுடிந்ததா? இல்லை. எல்லாம் முடிந்துபோய் இன்று எங்கள் பெண்களை சீரழித்த காட்சிகளை பார்க்கிறோம். காட்சிப்பொருளாக்கிவிட்டான் சிங்களன்.
தான் செய்த கொடுமைகளை காட்சியாக்கி வைத்துள்ளான் அவன். எங்களுக்கான நீதி நியாயம் கிடைக்கவேண்டும் குற்றம் செய்தவன் தண்டிக்கப்பட வேண்டும் இதுதானே எமக்கெல்லாம் வேண்டும்.
ஊடகங்களில் போர்க்குற்றக்காட்சிகள் குற்றத்துக்கான சாட்சிகளாய் வெளியிடப்படுகின்றன. நடந்தவைகள் தான் சாட்சியங்கள். அவற்றையே பொய்யாக்கத்துடிக்கும் இனவாத அரசின் செயற்பாடுகளுக்கு உலகநாட்டின் மனச்சாட்சியை உருக்கக்கூடிய சாட்சிகள் தான் இந்த காட்சிகள். வேதனையின் விளிம்பில் நின்று தான் இந்தக்காட்சிகளை பார்க்கிறோம். எங்கள் உறவுகள் இப்படியெல்லாம் சீரழிக்கப்பட்டார்களா? என்றெண்ணும் போதெல்லாம் இதயம் வெடிக்கிறது.
எங்களுடன் ஒன்றாய் இருந்து ஒட்டியுறவாடிய உறவுகள் இத்தனை கேவலமாய் துடிக்கதுடிக்க சீரழிக்கப்பட்டு கிடப்பதை எப்படி பார்த்து சகிக்கமுடியும். உலகம் இதற்கு நீதிவழங்கவேண்டும் என்று நாம் உரக்க குரல்கொடுக்க வேண்டும். இதைவிடுத்து சாட்சிகளை வெளிக்கொண்டு வரும் ஊடகங்களை தாக்குவது எந்தவிதத்திலும் நியாயமாகமாட்டாது.
நடந்தவைகள் அனைத்தும் உண்மை நிகழ்வுகள்.அப்படி இருக்கும் போதுஎப்படி அவற்றை ஊடகங்கள் மூடி மறைக்கமுடியும்.எய்தவன் இருக்க அம்பை நோவான் ஏன் ?
ஊடகங்களே ஒற்றுமை தான் எங்கள் பலம். போர்முடிவடைந்து மூன்றாண்டுகளாகின்றன. பெண்களின் மீதான வன்முறைகள் மட்டும் நிறுத்தப்படவில்லை. இன்று எத்தனை பெண்களின் வாழ்வு சீரழிக்கப்பட்டு விட்டது. இவற்றையெல்லாம் தடுக்க முடிந்ததா? நெடுந்தீவிலே எதுவும் அறியாத அந்த சிறுமியை சீரழித்து கல்லால் முகத்தை சிதைத்த அந்த காமுகனை என்ன செய்யமுடிந்தது உங்களால்.? வாய்வீரம் பேசமுடியாது. செயலில் காட்டவேண்டும். இன்று தமிழர்தாயகத்தில் பெண்கள் நடமாடமுடியாத அவலநிலை.

இதை உங்களால் தடுக்கமுடியுமா? பெண்களின் கர்ப்பை சூறையாட நினைக்கும் காமுகன் பணம் பதவி பார்ப்பதில்லை. அவன் வெறி வேறுவிதம். எங்கள் பெண்களுக்கு இத்தனை கொடுமைகளும் நடந்தபின்பும் நாம் இன்னும் ஒற்றுமை கொள்ளவில்லை என்றால் அர்த்தம் என்ன? எங்களுக்கும் எதிரிக்கும் வித்தியாசம் இல்லையே. ஊடகங்களே ஒற்றுமையே பலம். அதை இழந்துதானே இன்று இத்தனை அவலங்களும் நடந்தேறின. இன்னும் இதை புரிந்து கொள்ளவில்லை என்றால் இனியும் தமிழன் அழிவான் என்பது உறுதி. ஆகவே ஊடகங்களே தமிழனுக்கு விடிவு ஒற்றுமையில் தான் உள்ளது.
வெளியாகியுள்ள போர்குற்ற ஒளிப்படங்களை வெளியிடுவதன் மூலமே உலக மனச்சாட்சியை தட்டிக்கேட்கலாம். வெண்ணைதிரண்டு வரும்போது தாளியை உடைக்கத்துடிக்கும் ஊடகங்களே உங்கள் மனச்சாட்சியையும் ஒருதரம் கேட்டுப்பாருங்கள். நியாயத்தின் வழி நின்று ஊடகதர்மத்தை காத்துநில்லுங்கள். காட்சிகளை சாட்சியங்களாய் எண்ணுங்கள்.
எமக்கான விடியலுக்காய் ஒற்றுமையாய் உழைத்திடுங்கள்.

Tuesday, March 27, 2012

நேற்றைய நிஜங்கள் இன்றைய எழுத்தில்....

ச்சே எவ்வளவு பயங்கரக் கனவு..

வயிற்றைக் கிழித்துக் கொண்டு புறப்பட்ட திகில் தூக்கத்தில் இருந்து என்னை தூக்கி வாரிப் போட்டது படுக்கையறையில் இருள் உறைந்திருந்தது மின் தடையால் மின் விசிறி நின்று போனதில் கழுத்தும் பிரடியும் வேர்த்து நசநசத்தன

வெளியே வந்து ஜன்னலின் கேட்டினை தொட்டுத் தடவி திறந்தேன் கையில் தூசி ஒட்டிக் கொண்ட மரமரத்தன மங்கிய நிலா வெளிச்சத்தில் தூரத்து மரங்கள் அமானுஷ்ய வடிவம் கொன்டு வெறியாட்டம் போடுவது போல் என் மனதுக்குப் பட்டது.

  பகல் நேரங்களில் மாபெரும் இசை செண்டுகளாக நிஷ்டையில் ஆழ்ந்த தவமுனிவர் கைதேர்ந்த சிற்பி வடித்த கலைப்படைப்புகளாக முகம் காட்டும் செடிகளையும் பதர்களையும் மரங்களையும் இரவு நேரம் பயந்தவர்களை மிரட்டும் மருட்டும் சாதனங்களாக மாற்றி மாஜாலம் செய்து  வைத்திருந்து. சூழ்ந்திருந்த தனிமை என் இருதயத்தை இரும்புக்கரங்களால் நெரித்தது.

வாசல் கதவை திறந்து கொண்டு வெளியே வந்து நின்றேன் பிறைநிலா மேகங்களுக்குள் மறைந்து கொள்ள முற்றம் இருளில் முழ்கிக் கிடந்தது. தொப் என்று சத்தம் கேட்டது. எனக்கு தூக்கி வாரிப் போட்டது மரத்துப் போய் அப்பிடியே நின்றேன் யாராவது சுவரோரிக் குததிக்கிறானோ என் சுவாசதத்தின் ஒசை பாம்பின் சீறலாக இதயத் துடிப்பு  உடுக்கையின் ஒலியாக எனக்கே கேட்டது.

முற்றத்து மின்விளக்கு பளிச்சென்று உயிர்பெற்றது சத்தம் வந்த திசையில் கீழே விழுந்திருக்கும் தென்னை மட்டை என்கன்களில் பட்டது என்னை எப்படிப்பயமுறுத்திவிட்டது இந்த யடப் பொருள்சின்னப் பொன்னாக நான் அக்காவுக்கு பக்கத்தில் படுத்து தூங்கும் வேளையில் என்னை பயந்து எழச்செய்யும் இத்தகைய கனவுகள் வரடத்துக்கு ஒரிரு முறைகள் வந்துண்டு நான் உடனே எழுந்து போய் தூக்கக்கலக்கத்துடன் கண்களை கசக்கியபடி அப்பாவின் ரோமம் அடர்ந்த மார்பின் மேல் என் தலையை சாய்த்துக் கொள்வேன் அப்பாவின் இருதயம் நிதானமாக அடித்துக்கொள்ளும் சத்தமும் ஏறி இறங்கும் நெஞ்சில் அமைதியாய் தூங்குவேன்..

அப்பாவின் அருகமை எல்லா பயங்களையும் விரட்டிடும்...

நாளைக்குக் காலையில் இந்தக் கனவும் இரவும் ஒரு பொருட்டு அல்ல இருந்தாலும் இந்த நெடி என்னை பயம் கௌவிக்கொள்கின்றன ….

Wednesday, February 15, 2012

மூர்த்தி

வெயிலில் உலர்ந்து வாடிய உடலும்
துவைக்காத உடையும்
மழிக்காத தாடியும்
வாராத தலையுமாக

மூர்த்தி என்ற இளைஞன்
என்னிடம் தன்னை அறிமுகப்படுத்திக் கொன்டான்
கண்களில் மட்டுமல்ல நகத்து நுணி வரை துயரம் பொங்கி வழிகிற தோற்றம்எதிராளியைக் கூட வலுவாகத் தாக்கும் சோகம்..
12/02/2012
9.25am

Wednesday, February 1, 2012

இந்தியாவில் நாம்-கலாட்டாக்காலம்

இந்த பயணத்தை எழுத இரவில் வெளியே பார்த்திருந்தேன் இருளில் ஒன்றும் தெரியாததினால் தான் எனக்கு எண்ணம் ஏதுவும் வரவில்லை அதானால் தான்; வார்த்தைகள் ஏதும் வழிக்கோலவில்லை அத்தனை அழகான காலங்கள் அந்த இனிமையான நினைவுகள் வாசனையோடு என்றும் நினைவிருக்கும்.


நாம் தாண்டி வந்த நாட்களின் கீறல்கள் எம் மனதில் அடியாளத்தில் கோடு போல் பதிந்துவிட்டன நாம் அவர்களுடன் இருந்த அந்த 15 நாட்களும் கனப்பொழுதில் மறைந்து போகாது மனங்களிளே பல மாற்றத்தை ஏற்படுத்தி பயணத்தில் புது வசந்தத்தினை நுகர்ந்து கொண்டோம்
பல எதிர்பார்ப்புகளுடன் பரபரப்பாய் ஒக்டோபர் 16ம் திகதி MRTC யில் ஒன்று கூடினோம் 9.20am  பஸ் கொழும்பை நோக்கிப்பயணிக்கத் தொடங்கியது யாழ்ப்பாணத்தை விட்டு எத்தனையோ தடைவை வெளியேறியுள்ளேன் ஏதோ இப் பயணம் தனிமைப்படுத்துகின்றது என்பதை நன்பர்களுடன் இருந்தும் உணர்ந்து கொன்டேன் நேரம் செல்லச்செல்ல பஸ்சுக்குள் சத்தம் தெருவைப் பிளந்தது சுமார் 11 மணி நேரம் எவ்வாறு கழிந்தது என்றே தெரியாமல் தலைநகரை இரவு12.45க்கு சென்றடைந்தோம்.


விமான நிலையத்திற்க்கு வெளியே வாகனத்தரிப்பிடத்தில் 2மணி நேரம் காத்திருந்தோம்.

காற்றின் மென்மையான வருடல்.அங்குள்ள தெருவிளக்கைத்தாண்டி தன்னை இனம் காட்டும் சந்திரனின் பொன்னான ஒளி. ஜில் என சிலிர்க்க வைக்கின்ற பணியின் அட்டகாசம்.அடுத்தடுத்து வானில் பறக்கும் விமானங்களின் இரைச்சல்கள். இதமான அந்த நடு இரவில் மரத்திடியில் உள்ள கதிரையில்..ஈர விழிகளுடன் பல நட்புகள் என் அருகே....தொலைபேசி அழைப்பின்னூடாக தகவலை பரிமாரிக்கொள்கின்றனர் வீட்டாருடன்


புரியுது உங்க MIND VOICE இவ்வளவு நேரமும் ரொம்ப வதச்சிட்டனோ? (என்ன கேள்வி அது தானே உன்மை)OK OK எனி நாம STORY வந்திடலாம்.

எல்லாருமே செம TIRED   ஒரு நாள் கொழும்பில் தங்கிட்டு அடுத்தநாள் இந்தியாக்கு போவம் எண்டு நம்பி தானே போனம் கண்ண முளிச்சுப் பார்த்த AIRPORT அப்பிடியே Shork அகிட்டோம் எக்கனமே கன்னக்கட்டுது இதுக்க Meeting  வேற.(சாவடிகிறாங்களேய்யா)

இந்த meeting கே over  அதில  mints   ஐ note பன்னுறதுக்கு ஒரு group  வேற.

இந்தியாக்கு போய் வரும் வரையும் girl's க்கு முன்று பேர பொறுப்பா விட்டாங்க.. விட்ட அந்த மூன்று பேரும் யார் தெரியுமா ஆப்பு NO 1 மறீன்...அப்டியே ஜஸ்வரியா கௌசி...நாம விடுவமா மறீன வச்சு மொக்க போட்டம். அதெப்பிடி மறீன் எங்களுக்கு பொறுப்பு தன்னையே பாத்துக்க கானல..

இத விட கொடும 10 Condisition வேற சின்னப்புள்ளதனமா தான் இருக்கும் Follow பன்னுறது தாங்க ரொம்ப கஸ்டம்.

condisition  NO 01:- எத பேசினாலும் அந்த முண்று பேரிட்டயும் கேட்டுட்டுத்தான் பேசனும்

Madras university  இருந்தோ இல்ல classல   இருந்தோ எழும்பி வெளிய யாராவது போனால் 2 பேர் கூடவே போகனும்

(எங்க போனாலுமா)

Friends  ஒன்றா ஒரே room  ல இருக்கக்கூடாது
Dairy  dialy  எழுதி  Sir  கிட்ட  Singnature  வாங்கனும்
(என்னும் இருக்கன்னு Feelings )

மறீன் Girlsக்கு பொறுப்பாம் அவ என்ன சொன்னாலும் கேக்கனும்

(தூக்கில தொங்க சொல்லியிருக்கலாம் இத விட)

இப்பிடியே List நீண்டு கொன்டே போகுது

அந்த முண்று பேரும் அதுதாங்க மறீன் ,ஜஸ் கௌசி ....கொசு கூட குவாட்டர் அடிச்சிட்டு குப்பற படுக்கிற Time 1 மணி பனியோ எங்கள பதம் பாக்குது இந்த மூண்று பேரோட விரிவுரை
 ‘நீங்கள் இந்தியாவில எப்படி இருக்கனும்’

((தெரியாம தான் கேக்கிறன் இது எங்களுக்கு தெரியாத இல்ல இவங்க சொன்னா மட்டும் அப்பிடியே கேட்டுடுவமாக்கும்)

Classலயே சும்மா இருக்க மாட்டம் விட்டமா இவர்களின் கொள்கைகளை எதிர்போர் Commity போட்டம் போட்டு ஒரு நிமிஸம் கூட ஆகல 6 Members

கம்சா துவா கஸ்ரோ ஜனா முருகா மிருசா அப்புறம் நான்.....கஸ்ரோக்கும் ஜனாக்கும் ளசை செம திட்டு அதோட moudoutஆகிட்டாங்க எதயோ பறிகூடுத்தவங்க போல பில்டப் மட்டும் பலமா கொடுத்தாங்க ஜனா Feel பன்னலாம் அதில ஒரு Reson  இருக்கு எபப்பவும் பேச்சு வாங்காதவன்.sir பேசினாலே அது  கஸ்ரோக்காக தான் இருக்கும் அவன் seen  இருக்கே அந்த நடுச் சாமத்தில  தனியா இருந்து Feel  பன்னுறாங்களாம். 7மணி பாத்தலே Clear  அ தெரியாது இதில போய் அந்த இருட்டுக்க மரத்துக்குக் கீழ இருந்தா.

இத பார்த்த துவாரகி தானும் Feel பன்னுறாங்களாம் எத்தின Seen  பாத்திட்டம் இத பாக்க மாட்டமா..¬

யாரோ ஒருத்தன் Journalist  என்டு proff பன்னிட்டான் நான் அவங்க Meetingக குழப்பிட்டனாம் அப்பிடி ஒன்டும் பெரிசா செய்யல அப்பப்ப Dout தான் கேட்டன் ரொம்ப lenth அ போய்டே இருந்திச்சா அது தான் அது பெரிய தப்பாம் அப்ப கூட கம்சா சொல்லிச்சு வேணாம் கவி பேசாம இரு என்டு அதுக்காக கம்சா நல்ல பொன்னு என்ன விட கொஞ்சம் தான் Better  என்ன அப்பப்ப Alert ட இருக்கும் துவா சொல்லத் தேவயில்ல ஒரு ஆர்வக்கோளாறு சொல்லுற எல்லாத்தயும்  கேக்கும் அத அப்பிடியே செய்யும் இதால நமக்குத் தானே சிக்கல்.

இரண்டு மணி Airport க்க பேனம் Bording pass 4.00am தூங்கி ஒரு நாள் ஆகப்போகுது 7.15 am Piloit  க்குள்ள போயாச்சு என்னுடைய முதலாவது விமானப்பயணம் 28 பேர்ல 25 பேருக்கு முதற்தடைவை 7.25யஅ க்கு சென்னையை நோக்கி புறப்பட்டது 10 நிமிடம் இருக்க ும் நம்ம Friends
Flight க்கள்ள சுத்திப்பாக்கிறாங்க அங்க அப்பிடி என்ன தான் சுத்தி பாக்கிற அளவுக்கு இருக்கோ(அவனவனுக்கு உயிர் போகுது இதுக்க picnic ஒரு கேடு)

 ஏதாச்சும் வெட்டி வேல நடந்தா Leder இல்லாமலா .பட்டாம்பூச்சி சிந்து  அதென்ன அடைமொழி . சொல்றன் யாராவது அழகா இருந்தா அவ மனசில பட்டாம்பூச்சி பறக்குமாம்
(கண்ணாடில தன் முகத்த மட்டும் பார்த்த பறக்காது))

8.28 க்கு சென்னையில் கால்பதித்தோம்..சென்னை பல்கலைக் நன்பர்கள் reseve  பன்ன வந்திருநந்தங்க. நாம 28 பேர் சேர்ந்து தானே வந்தம் பட்டாம்பூச்சி சிந்துவ Resev  பன்ன ளிஉயைடய ஒரு group அவங்க relation  MRTC  என்டு Bord  வேற.இத மட்டும் sir பாத்திருக்கனும் அடுத்த Flight ல சிந்து Srilankaக்கு வந்திருக்கும்.

சென்னை (சத்தம்) இது ரெண்டுக்குமே செம பொறுத்தம்.Jaffnaல வெய்யில் அதிகமாத்தான் இருக்கும் ஆனா சென்னை வெய்யில் தாங்க முடியாது

Airport வாசல் பரபரப்பான சூழல் வாகன இரைச்சல் இதற்க்கு மத்தியில் அன்பான வரவேற்ப்பு..சாந்தோம் church க்கு செல்ல வாகனம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன

துட்டுக் கூடும்மா’சென்னையில் நான் கேட்ட முதலாவது மக்கள் குரல் ஆங்காங்கே பல பெண்கள்.தரிப்பிடங்களுக்கு வெளியே நிரம்பி வழியும் வாகனங்கள்.வெற்றிலை துப்பலால் நிலத்தினை அலங்கரிக்கும் சாரதிகள். குடமையை மறந்து நட்புடன் பேசிக்கொன்டிருக்கும் காவல்துறையினர்.பயணிகளை சலிர்க வைக்கும் அளவுக்கு நடந்துகொள்ளும் வாகனசாரதிகள். உறவினர்களுக்காக எதிர்பார்புடன் இருப்போரின் ஏக்கம். அத்தனையையும் தான்டி ஒலிக்கும் வாகன இரைச்சல்கள்.1 மணி நேரத்திற்க்குள் நான் கேட்ட ஆறு விதத்தியாசமான தமிழ் மொழிநடைகள்.சென்னை பல்கழைக்கழக மாணவர்களின் ஆங்கிலம் கலந்த தமிழ் ஒட்டோ சாரதியின் குப்பத்து தமிழ். பிச்சை எடுப்போரின் கெஞ்சலான தமிழ்.என பல மாவாட்டங்களின் தமிழினை முதல்நாளே கேட்டேன்.நான் சென்னையில் பார்த்து ரசித்த விடயத்தில் முதலாவதாக அவர்களின் தமிழ்.

17.10.2011 காலை 9.30க்கு அங்கிருந்து 1மணிநேர பயணத்தின் பின் சாந்தோம் உhரசஉh இனை அடைந்தோம்.பஸ்சுக்க என்ன நடந்தது என்றே தெரியாது அவ்வளவு தூக்கம் 11.00யஅ நாந்தோம் முண்றாவது மாடியில் 9 அறைகள் எமக்காக ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
ஏன் இதில நிக்கரிங்க மூன்றாவது மாடிக்கு போகட்டாம்.............(பாவிப் பயலுங்கலா படிவழியாதான் போகனுமா)சரி மேல வந்தாச்சு மறீன் ரெம்ப மேசங்க அப்ப கூட சலைக்காம தன்னோட duty ய செய்யிறாவம் கூடவே கொளசி ஐஸ்வரியா சொல்லவா வேனும் friend's ஒரே Room அ க்க போக வேண்டாம் நாம தான் பிரிச்சு விடுவம்.....டboy's sir கூட போய்டாங்க (தப்பிச்சிட்டாங்க)
ஐஐஐயோ ஆரம்பிச்சிட்டாங்க ஏய் நீ கதைக்க வேண்டாம் வேனும் என்டா room க்க கூட்டிட்டு போய் அடி தயவு செய்து இப்பிடி மட்டும் அறுகாத
(என்டு சொல்லனும் என்டு எனக்கு மட்டும் ஆசை இருக்காத எப்படா போட்டு குடுகலாம் என்டு பாத்திட்டு இருப்பாங்க..).))
நீங்க முன்று பேரும் 1000 சொன்னாலும் காதில வாங்கிறது இல்ல எண்டு முடிவெடுத்தாச்சு அப்புறம் என்ன .அவங்க duty ல அவங்க ஒழுங்கா தான் இருந்தாங்க..
சழழஅ பிரிச்சு விட்டாச்சு 10 நிமிசம் கூட இல்ல நான் கம்சா முருகா துவா தட்சா மிருசா கூடவே மறீன்
(தன்னயும் சேத்துக்க சொல்லி அழுதிச்சு)
நாம friend's இருக்கிற matter  sir க்கு தெரியாது..12க்கு கிழ இருக்கிற hallக்கு வரட்டாம் 
(எப்பிடி இருந்திச்சு தெரியுமா 3வது மாடில இருந்து தள்ளி விடனும் போல)
classலயே நம்மல ஒண்டா இருக்க விடமாட்டாங்க room ல இருந்தா சொல்லவா வேணும் பக்கத்து Room Father    (ரொம்ப நல்லவரங்க இல்லாட்டி உயிரோட விட்டிருக்க மாட்டார்)
lunch ready  எல்லாரயும் சத்தம் போடாம வரட்டாம் அதுக்கு முதல் meetin
முதல்ல சாப்பட்ட போடுங்கப்பா)
 madras university students பாக்க சுமாரா இருந்தாங்க எங்களோட பார்க்கும் போது ரொம்ப அழகு தான் பொதுவாவ சொன்னங்க)
டரnஉh கொன்டுவந்தாங்க நந்து ரசூல் யாதவ் அஸ்வின்...அப்பியே 10 பேர் இருக்கும் lunch முடிச்சு அப்பிடியே போய் துங்கிடலாம் என்டு தான் நினைச்சம் முடியுமா அப்புறம் ஒரு meeting

 sir:- அவங்க MA student's உங்களுக்கு Serve  பன்னனும் என்டு அவசியமில்ல படிப்புக்கு முதல்ல பழக்கவழக்கத்த பழகுங்க
(தெரியாம வாங்கி சாப்பிட்டோம் சாமி)

Sir நம்மள திட்டிரதில தப்பே இல்ல என்டு எங்களுக்கு புரியுது தான் என்ன செய்யிறது...நாம என்ன விளக்கம் குறைவா அத மெறீன் Repet பன்னுது....(அப்பிடியே அப்பினா எப்பிடி இருக்கும் )தோனிச்சு
Meeting போட்டாலே அதிகமா திட்டு வாங்கிறது சுகந்தி ரூபினி இப்பிடி ரெண்டு முன்ற பேர் சுகந்தி அக்கா விரதம் அதாலயே அப்பப்ப நல்லா வாங்கிக் கட்டுவாங்க

 Sir:- Healthy  இருந்தா தான் active அ இருக்க முடியும் இங்க வந்தது விளையாட இல்ல படிக்க கஸ்டம் என்டா வீட்டுக்குப் போகலாம் என்டு சுகந்திய பார்த்துத் தான் Sir சொன்னாரு

பக்கத்தில  யாரே அழுகிற சத்தம் கேட்டிச்சு வேற யாரு நம்ம கம்சா
 (இவளுக்கு என்ய்யா நடந்திச்சு ) கவி Sir என்ன தான் சொல்லியிருப்பார்
(என்டா அக்கா கம்சாவும் விரதம்) துவா மறீன் அவள சமாளிக்க ரொம்ப risk  எடுத்தாங்க.
மறு நாள் காலை 18.10.2012 சென்னை பல்கலைக்கழகத்திற்க்கு  செல்ல அனைவரும் தாயாரானோம்

பஸ்சில தான் போகனும் Sharp  8.00க்கு கீழ வரட்டாம் வராதவங்கள விட்டுட்டு பேயிடுவாங்களாம்.

கவி எழும்பு  7.30 ஆகிட்டு ½ மணித்தியாலம் தான் இருக்கு
(அப்பா ½ மணித்தியாலம் இருக்கு) 

கம்சா துவா மறீன் எல்லாம் 8.00 எண்டா 7.00க்கு Ready ஆகிடுவாங்க அதுகாக நாம அப்பிடி இருக்க முடியுமா என்ன போல தான் முருகா அத அவங்க Term எழுப்பப் பற்ற பாடு .
இருந்தாலும் Sharp 8.15க்கு Ready ஆகிட்டன்

பஸ்சிற்காக காத்திருந்த அந்த மணித்துளிகள் பாடசாலை மாணவர்களின் பரபரப்பு தெருவோர பிச்சைக்காரர்கள் .பஸ்தரிப்புக்கு அருகே குப்பை கூட்டிக் கொன்டிருக்கும் அந்த பென். என்றும் நினைவில்
 பொது இடங்களில் பேசவேன்டாமாம் சென்னை தமிழ் பேசிற என்டா சரி...srilankan என்டு தெரியபடுத்த வேன்டாமாம்

(அது சரி தான்....நாம என்ன வச்சிட்டா வஞ்சகம் பன்னுறம் இருந்தா வரும் தானேங்க)


சென்னை பல்கழைக்கழகம் பிரமாண்டமான கட்டிட அமைப்பு மேற்க்கு வானில் சூரியன் மறையும் போது செவ்வானம் காட்சியளிப்பது போல செங்கற்களினால் சென்னை பல்கழைக்கழகம் அதனுல்தான் அத்தனை அன்பான உறவுகளை சந்திப்பேன் என நான்அ நினைக்கவில்லை அதுக்குப்பிறகு வீட்டு ஞாபகம் வரவில்லை.




காலை உணவை முடித்துக்கொன்டு. வகுப்பரையில் நுழைந்தோம் முதலாவது செயற்திட்டம் சென்னை பல்கழைக்கழகத்தினை சுற்றியுள்ள சேரிக்கு சென்று Rural Reporting செய்ய வேன்டும்.அதற்காக பிரிக்கப்பட்ட குழுவினுள் தான் மகேஸ்வரியை சந்தித்தேன் .
சேரிப்பயணத்தின் முடிவில் எம் நட்புப் பயணம் ஆரம்பித்தது.


சென்னையின் மறுபக்கம் சேரி என சொல்லும் அளவுக்கு குப்பங்களும் சேரிகளும் நிறைந்துள்ளன.நிறைந்திருப்பது குப்பைகள் மடடுமல்ல சோகங்களும் கண்ணீரும் தான் நாம் சென்ற அயோத்திக்குப்பத்தில் பார்த்த நபர்கள் தான் எத்தனை பேர் .தன்னீர் குழாய் அருகே உடுப்புத் துவைத்துக் கொண்டு தன் சோக காவியத்தை பகிர்ந்து கொன்ட அன்னம்மாள்..
வண்டியில் வாழைப்பழங்களை விற்று வாழ்வினை நடாத்தும் 45 வயதுள்ள அப்பெண் .சினிமா கனவுடன் நடனக்குழுவில் இணைய தான் பட்ட கஸ்ரத்தினை வெளிக்காட்டாமல் வெளிப்படுத்தும் இளைஞன்....வீட்டுக்கு வெளியே இருந்து ஈரவிறகுடன் போராடிக் கொன்டிருக்கும் 38 வயதுடைய சிவக்கொழுந்து..கமராவை ஆவலாக தொட்டு பார்த்த சிறுவர்கள் தங்கள் புகைப்படத்தை கமராவில் பார்த்து வெட்கப்பட்டு அக்காவின் பாவாடைக்கு பின் ஒழிந்த அந்த முகம்..11.00 மதியம் குழுவாக சேர்ந்து சூதாட்டத்தில் ஈடுபடுகின்ற தந்தை வர்க்கம்..நடு வெயிவில் மீன்களை வைத்து கூவி கூவி விற்க்கும் தாய் வர்கம்..அரசாங்கம் குப்பத்தை விட்டு வெளியேறுமாறுமாறு கேட்டும் தங்கள் கருத்தை முன்வைக்க போராடும் ஒட்டுமொத்த குப்பத்து மக்கள்..அயோத்திக்குப்பமும் வாழ்வும் என்னை பாதித்த அந்த கனங்கள் வார்த்தைகளால் சொல்ல முடியவில்லை....




தொடர்ந்து மெரீனா கடற்கரையில் ஒர் பயணம். மகேஸ் இன் செல்லமான திட்டல் அக்கரையான பார்வை குழந்தை தனமான செய்கை....இதெல்லாத்தயும் விட கதைச்சே வதைப்பாலே வடிவேல படத்தில பாத்திருப்பீங்க சினிமாவில பாத்திருப்பீங்க போஸ்டரில பாத்திருப்பீங்க ஏன் கட்சிக் கூட்டத்தில கூட பாத்திருக்கலாம் சென்னை பல்கழைக்கழகதில பாத்திருப்பிங்களா அது தான அவள்......அடுத்தது மொனிக்கா அக்கா ரொம்ப பிடிச்சவங்க என்டா எனக்கு திட்டவே மாட்டாங்க என்ன செய்தாலும் அன்பா செல்லுவாங்க.........

                                                                                                                                                       தொடரும்....

இப்போதைக்கு இதோட முடிச்சுக்கிறேன் என் பேனா மை முடிந்தாதாலும் type  பன்னி Bour அடிச்சதாலயும்...........(அங்கால என்ன பார்வ அது தான் Cut  பன்னி தொடரும் என்டு போடாச்சுல்ல)

Tuesday, January 10, 2012

உச்சிதனை முகர்ந்தால் "இருப்பாய் தமிழா நெருப்பாய்"


இனம் சார்ந்த உணர்வையும் மனிதம் சார்ந்த வலியையும் மையமாக வைத்துக் கலாபூர்வமாக வழங்கப்பட்டிருக்கும் ஒரு தனிக்காவியம் ’உச்சிதனை முகர்ந்தால்’.

தமிழ் சினிமாவுக்கென்று அன்றுதொட்டு இன்றுவரை தவிர்க்க முடியாத சில அடிப்படை அம்சங்கள் உண்டு. எதையும் சாதிக்கவல்ல ஒரு நாயகன் அவனையே நினைத்து அவனுக்காகவே நெகிழ்ந்து அவனுள் கலந்து கரைந்துவிட உருகித் தவிக்கும் ஒரு நாயகி இயற்கைக்கு எந்த வகையிலும் பொருந்தாமல் கடற்கரையிலும் பூந்தோட்டத்திலும் பரபரப்பான வீதிகளிலும் கட்டியணைத்துக் காம விகாரத்தை வார்த்தைகளிலும் அங்க அசைவுகளிலும் வெளிப்படுத்தும் இரண்டு காதல் காட்சிகள்: இரட்டை அர்த்தமுள்ள வசனங்கள் பேசும் நகைச்சுவை நாயகர்களின் சகிக்கமுடியாத சேட்டைகள்: இருபது பேரை ஒரேயொரு தனி மனிதன் பறந்து பறந்து தாக்கும் அசகாய சூரத்தனம் மிகுந்த ஆவேசமான குத்துச்சண்டைகள்: இல்லாத தமிழ் சினிமா அபூர்வம்: இவை எல்லாவற்றையும் திட்டமிட்டு ஒட்டுமொத்தமாக நிராகரித்து
இனம் சார்ந்த உணர்வையும் மனிதம் சார்ந்த வலியையும் மையமாக வைத்துக் கலாபூர்வமாக வழங்கப்பட்டிருக்கும் ஒரு தனிக்காவியம் ’உச்சிதனை முகர்ந்தால்’.







முற்றிலும் வணிகமயமாகிவிட்ட திரைப்படவுலகில் சமூக அவலங்களைச் சமரசமின்றி வெளிப்படுத்தும் ஒரு படத்தைக் கலைநுணுக்கம் கலையாமல் காண்பவர் உள்ளங்களை உலுக்கியெடுத்து விழிகளில் கண்ணீர் வழிய,இருதயத்தில் ,ரத்தம் சூடேற ,இனியும் மௌனப் பார்வையாளர்களாக இருந்துவிடாமல் இன நலனக்குத் தன்னளவில் உருப்படியாக ஏதாவது ஒருவகையில் பங்களிப்பைத் தந்தாகவேண்டும் என்ற உணர்வை உந்தும் விதத்தில் உருவாக்கியிருக்கும் இயக்குனர் புகழேந்தி தங்கராஜ், மிகையான நடிப்புக்கு இடமளிக்காமல் வெகு இயல்பாக ஒவ்வொரு பாத்திரத்தின் தன்மை உணர்ந்து சின்னச் சின்ன அசைவுகளிலும் தங்கள் ஆற்றலை முழுமையாக வெளிப்படுத்தயிருக்கும் கலைஞர்கள் சத்தியராஜ், சீமான், சங்கீதா, நாசர், உச்சிதனை முகர்ந்து நம் வாழ்த்துக்களை வெளிப்படுத்தத் தூண்டும் நீநிகா: இளந் தென்றலாய் வீசியும் எரிமலையாய் பொங்கிப் புரண்டும் பாடல்களில் ரசவாதம் காட்டியிருக்கும் இசைய்மைப்பாளர் இமான் ஒவ்வொரு வார்த்தையிலும் ஈழத் தமிழரின் இதயவலியை இறக்கிவைத்திருக்கும் உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் ஆகியோரின் கூட்டுத் தவத்தில் உருவானதுதான் இந்த ‘உச்சிதனை முகர்ந்தால்’
புனிதவதி என்ற பதிமூன்று வயது சிறுமி உடலும் மனமும் சிங்கள வெறியர்களால் பாலியல் பலாத்காரத்தில் பாதிக்கப்பட்ட நிலையில் அவளுடைய வாழ்வு எப்படி சீர்குலைந்தது. அவளுடைய இனிமை ததும்பிய குடும்ப உறவுகள் எப்படி நிலைகுலைந்து நிர்மூலமாக்கப்பட்டன என்பதை ஒரு புள்ளியாக வைத்து உலகம் முழுவதுமுள்ள மனித குலத்தின் மனச்சான்றை உசுப்பிவிடும் வகையில் உறுக்கமாகவும் அடிமனதில் உரைந்துகிடக்கும் ஒவ்வொருவருடைய மனிதநேயத்தை மலரச் செய்வதாகவும் கலைநயத்துடன் காட்சிகள் அமைக்கப்பட்டு ‘உச்சிதனை முகர்ந்தால்’ உருவாக்கம் கொண்டிருக்கிறது.



உலகத்தின் பொதுமொழி மனிதநேயம். இந்த மொழியை அறிந்தவர்கள் அனைவரும் தவறாமல் கண்டு கனத்த இதயத்துடன் கண்ணீர் சிந்தியபடி திரையரங்குகளில் இருந்து வெளியே வருவார்கள் என்பது தின்னம்.இது ஒரு சாதாரணத் திரைப்படம் அல்ல.மனிதம் மறந்த மக்களுக்கும் இன உறவு துறந்த தமிழர்களுக்கும் சினிமா என்னும் சக்திமிக்க ஊடகத்தின் மூலம் நடத்தப்பட்டிருக்கும் ஓர் உயர்ந்த பாடம்.

ஒவ்வொரு தமிழனும் குறிப்பாக மென்மையான உணர்வு படைத்த ஒவ்வொரு பெண்ணும் பிள்ளைகளுடன் திரையரங்கம் சென்று பார்க்கவேண்டிய படம் ‘உச்சிதனை முகர்ந்தால்’. இதுபோன்ற நான்கு படங்கள் தொடர்ந்து வந்தால் தமிழீழம் உருவாவதற்கு தார்மீக துணையாக தமிழகம் தலைநிமிர்ந்து நிற்கும் என்பதில் இருகருத்துக்கு இடமில்லை.

சிங்கள பயங்கரவாதிகளின் ஈரமில்லாத கொடுங்கோன்மைக்கு தமிழ் சொந்தங்கள் ஒட்டுமொத்தமாக பாதிக்கப்பட்டாலும் அதிலும் மிகப் பெரும் துயரங்களை சுமந்தவர்கள் குழந்தைகள் தான். அவர்களில் ஒருவரான் புனிதாவின் துயரத்தை அங்குலம் அங்குலமாக நம் கண் முன்னே கொண்டு வந்து சிங்கள பேரினவாதத்தின் அராஜகத்தை நம் நெஞ்சில் பதித்துள்ளார் இயக்குனர் புகழேந்தி.

 ஈழத் தமிழர்களை கொன்று குவித்ததை வேடிக்கைப் பார்த்த, அதற்கு எல்லா வகையிலும் உதவி புரிந்த நம் நாட்டின் ஆட்சியாளர்கள் கட்டாயமாக பார்க்க வேண்டிய படம் இது. இப்படத்தை பார்த்தாவது அவர்கள் தங்கள் பாவத்திற்கு பிரியாசித்தம் தேடுவார்கள் என்று நம்புகிறேன். ஒரு பேராசிரியர், ஒரு இல்லத்தரசி இரு மருத்துவர்கள், ஒரு காவல்துறை அதிகாரி, ஒரு திருநங்கை, முகம் தெரியாத ஒரு ஆட்டோ ஓட்டுனர் ஆகியோர் மனிதநேயத்துடன் புனிதாவை நேசித்து அச்சிறுமியை காப்பாற்ற எடுக்கும் முயற்சிகள் நெஞ்சை நெகிழ வைத்தன. இந்தியாவின் சாதாரண குடிமக்களான இவர்கள் பெரும் சவால்களுக்கிடையில் வெளிப்படுத்தும் மனிதநேயம் ஈழத்தில் தமிழ் சொந்தங்கள் கொத்துக் கொத்தாக கொன்று குவிக்கப்படும் போது மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சியில் இருந்தவர்களிடம் இருக்கவில்லை. இவர்களது மனப்போக்கைத் தான் பேராசிரியர் நடசேனின் மாமியார் இப்படத்தில் பிரதிபலிக்கிறார்.
திரைப்படம் என்றாலே விரசம் நிறைந்து கிடக்கும் இக்காலக்கட்டத்தில் தமிழ் மக்களின் சோகத்தை சித்தரித்து நம் பங்கிற்கு ஏதாவது செய்தாக வேண்டும் என்ற வேட்கையை தூண்டும் வகையில் உச்சிதனை முகர்நதால் அமைந்துள்ளது.


Uchithanai Mukarnthal Press Meet





Uchithanai Mukarnthal Press Meet

Wednesday, January 4, 2012

யாழ்பாடிய மண்ணில் பன்பாடிய பறை ஒலி

கடிவாளம் பத்திரிகை யின்பக்கம் 


aho;kz;iz gw;wp cq;fsJ fUj;J

யாழ்ப்பாணத்துக்கு வர ரொம்ப ஆர்வமாக இருந்தது. கடல்கடந்து இருக்கின்ற அதுவும் தமிழ் நாட்டை போன்று தமிழ் பேசுகின்ற  மக்களை சந்திக்க வந்திருந்த பொழுதுகளை வார்த்தைகளால் சொல்ல முடியாது. 


யாழ் மண்ணின் மீது நான் கொண்ட காதலின் பால் இந்த மக்களைச் சந்திக்கவும் இந்த மண்ணில் இந்தக் கலையினை நடாத்துவதற்கும் வாய்ப்புக் கிடைத்துள்ளது.
இக் கலையானது ஒடுக்கப்பட்ட சமூகத்தினரை உலகத்திற்கு வெளிக்காட்டுவதற்காகவே நாட்டார் கலைகள் உருவாக்கப்பட்டன. அந்த மக்கள் நாட்டார் கலைகளின் மூலமாக தமது வாழ்வியலை உலகிற்குக் காட்டியுள்ளனர். பூஜ்ஜியம் என்ற வடிவம் இல்லை என்றால் கணிதத்திற்கு பூஜ்ஜியம் என்ற சொல் இருந்திருக்காது அது போல் தான் இக் கலையும்.
திருமணம், கோயில் திருவிழா, சாவுவீடு போன்ற நிகழ்வுகளிலேயே தப்பு அடித்து ஆடுவார்கள். இம் மரபு மறைந்து போகாது இருப்பதற்காக தமிழகத்தில் தற்போது மீள் உருவாக்கம் செய்யப்பட்டு வருகின்றது. மதுரையில் கொட்டு என்றும், தஞ்சாவூரில்  தப்பு எனவும், சென்னையில் மேளம் என்றும் இதனைப் பல்வேறு பகுதிகளிலும் பல பெயர் கொண்டு அழைக்கின்றனர்.




நாட்டார் கலைகள் கற்க வந்த மாணவர்களின் ஆர்வம்


யாழ்ப்பாணத்தில் 30 வருடங்களுக்கு முன்னர் இருந்தவர்களுக்கு இந்தக் கலை பற்றி தெரிந்திருக்கும் ஆனால் இந்த 30 வருட காலகட்டத்தில் எத்தனையோ பிரச்சனைகள் மத்தியில் இவர்கள் வாழ்ந்துள்ளார்கள். யாரும் இக் கலையை கற்றுக் கொடுக்க இல்லை. முதலில்  இந்த மாணவர்களுக்கு இந்த கலையை சொல்லிக் கொடுக்கும் போது மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் எல்லாவற்றையும் பயின்றார்கள். மாணவர்களின் ஆர்வத்தை பார்த்து நான் மிகவும் சந்தோசப்பட்டேன்.


பறை பற்றியும் சமூகம் பற்றியும் உங்கள் கருத்து.

சமூகத்திலே பறையை ஒரு இழிவாகதான் பார்க்கின்ற ஒரு நோக்கு உள்ளது. கலையை போர் சார்ந்த கலை, சமயம் சார்ந்த கலை. சமூகம் சார்ந்த கலை என 3வகையாக பிரிப்பார்கள். இதில் பறை சமூகம் சார்ந்த கலையாக கூறுவார்கள். இப் பறை சாவுவீடுகளிலேயே அடிக்கப்படுகின்றது. இந்தப்பறை எப்படி இழிவானது என்பதுதான் வரலாறு. ஆனால் ஆதிவாசிகள் பாதுகாப்பிற்காகவே பறையை பயன்படுத்தினார் இவ்வாறு விலங்குகள் தம்மை தாக்க வரும் போது பறையை அடித்து தம்மை பாதுகாத்து கொண்டனர். அத்தோடுஒரு மலையில் இருந்து இன்னொரு மலையில் உள்ளவர்களை கூப்பிடுவதற்காகவும் பறையை பயன்படுத்தினார்கள். இவ்வாறு ஆரம்பகாலத்தில் பயன்பட்ட பறையை  சமூகத்தில் இன்றைய காலத்தில்  இழிவான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
முக்கியமாக சமூகத்தில்  பறையடிப்பவர்கள் பறையர்கள் என்றே பார்க்கப்படுகிறார்கள். ஆனால் சாவுவீடுகளில் பறை அடிப்பவர்களை வெட்டியான் என்றே அழைப்பார்கள். பறை அடிப்பவர்கள் எல்லாம் பறையர்கள் அல்ல என்பதை முதலில் மக்கள் மனதில் கொள்ள வேண்டும்.
யாழ்ப்பாணத்;தில் கொண்டு வந்து ஆடப்பட்ட பறை ஒருமுகப்பறையாகும். இப்பறையை நெருப்பிலே சூடுபண்ணி அடிக்கின்ற ஒரு வாத்தியம் ஆகும். பறை அடிக்கின்றவர்கள் எல்லா வகையான வாத்தியங்களையும் வாசிக்கும் வல்லமை பெற்றிருப்பார்கள்.
துமிழ் நாட்டில் மட்டுமன்றி  யாழ்ப்பாணத்திலும் மக்கள் பறையை இழிவாக பார்க்கின்ற நிலையை நான் இங்கு வந்து பார்த்தபோது உணர்ந்து கொண்டேன்.

பறையை எப்படி செய்கிறார்கள் 

பறை செய்வதற்கு வேம்பு மாட்டுத்தோல் போன்றவற்றை பயன்படுத்துகிறார்கள். அதிலும் குறிப்பாக தெரு வோரங்களில் இருக்கும் வேப்பமரங்களையே பயன்படுத்துகிறார்கள். அதற்கு காரணம் யாதெனில் தெருக்களில் இருக்கினற மரங்கள் வாகன சத்தங்களை உள்வாங்கிக் கொள்ளும். ஆப்படியான மரங்களில் பறை செய்தால் அதன் சத்தம் அதிகமாக ஒலிக்கும் என்பதகால் தெருக்களில் இருக்கின்ற மரங்களை தேடி பறைக்கு பயன்படுத்துவார்கள். அதே போலத்தான் மாடுகளிலும் இளம் ஆண் மாடுகளின் தோலை எடுத்துத்தான் பறை செய்வார்கள். ஏனெனில் அதன் தோலில் உள்ள ரோமம் உரமாக இல்லாமல் இருக்கும்.







சென்னைப்பல்கலைக்கழகத்தின் முற்றம் கலைக்குழு செயலாளரும் நாட்டார் கலைவிற்பனருமான ஆடலரசு வேணு அவர்கள் முதல் முதலாக தனது தாய்நாட்டுக்கு வெளியே தான் கற்றுக் கொடுத்த யாழ்ப்பாண இளைஞர்களுடன் நடத்துகின்ற முதல் நிகழ்ச்சி யாழ்ப்பாணப்பல்கலைக்கழகத்தில் கைலாசபதி கலையரங்கில்  நடைபெற்றது  அதன் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இவை.


தென்னிந்தியாவில் இருந்து வருகைதந்த  இவர் யாழ்பல்கலைக்கழக ஊடக வளங்கள் மற்றும் பயிற்சி மைய மாணவர்கள் , செயற்திறன் அரங்க குழுவினருடன் இணைந்து நாடாத்திய தென்னிந்தி நாட்டார் கலைகளின்  விழா 04/112/2011 அன்றில் இருந்து மூன்று நாட்க்கள் தொடர்சியாக இடம் பெற்றது.. 






கடிவாளம் பத்திரிகை யின்பக்கம் 

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | cheap international calls