Saturday, November 5, 2011

வெகுசனத் தொடர்பு சாதனங்கள் ஏற்படுத்தும் உளவியல் மாற்றங்கள்.

தகவல் தொடர்பு என்பது செய்திகள் கருத்துக்கள் மற்றும் எண்ணங்களை ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொள்ளும் செயற்பாடாகும். இதில் தகவல் அனுப்புகின்றவரும் பெற்றுக் கொள்கின்றவரும் முக்கியமானவர்கள். இவ்விருவரும் எவ்விதம் முக்கியத்துவம் கொண்டு காணப்படுகின்றனரோ அதைவிட மேலாக தகவலை அனுப்பப்பயன்படும் சாதனம் இன்றியமையாததாகக் காணப்படுகின்றது.

மனிதர்கள் சிந்திக்கத் தொடங்கிய காலத்தில் சைகைகளையும், குறியீடுகளையும், அடையாளங் களையும் பயன்படுத்தியே ஒருவருக்கொருவர் தொடர்பு கொண்டும் கருத்துக்களையும் பரிமாறியும் வந்துள்ளனர்.  ஆதிகால மனிதன் மரக்கட்டை, களிமண், குச்சி, ஆட்டுத்தோல், பாறைகள், எலும்பு போன்றவற்றை தனது தகவல் தொடர்பு சாதனங்களாக பயன்படுத்தினான். இடைக்காலத்தில் வாழ்ந்த மனிதன் புறாக்கள், தீப்பந்தங்கள், ஒற்றர்கள், தூதுவர்கள், தோழன், தோழியர், போன்றவற்றை தமது தகவல் தொடர்பு சாதனங்களாக பயன்படுத்தினர்.இவ்வாறான படிப்படியான மாற்றத்துக்கு கைத்தொழில் புரட்சி, உலகமயமாதல் என்பனவும் காரணமாக அமைந்துள்ளன.  இவ்வாறு பல்பரிமாற்றத் தன்மையை தன்னகத்தே உள்வாங்கிக் கொண்டு அன்று முதல் இன்றுவரை வளர்ச்சியடைந்து வந்த வெகுசனத் தொடர்பு சாதனங்கள் மக்களின் மனங்களை தம்பால் வளைத்துப் போடும் பணியையே செய்து வந்துள்ளன. தற்கால சமூக அமைப்பில் நாகரிக வளர்ச்சி, சமூக ஏற்றத் தாழ்வு, சமூக அடக்குமுறை, பிரிவு, வேலைப்பழு, யுத்தம் போன்ற பல்வேறு காரணங்களினாலும் தனிமையில் வாழ வேண்டிய சூழல் சிலருக்கு ஏற்பட்டு விடுகின்றது.

இத்தகைய பண்பாட்டுக் கலாசார சூழலில் மக்களின் தனிமை உணர்வைப் போக்கி அவர்களின் உளநிலையை மாற்றியமைப்பதோடு அவர்களுக்கு ஓர் உற்றதோழன் அவர்களின் உணர்வுகளைத் தட்டியெழுப்பி அவர்களைப் பரவசம் அடையச் செய்வது போல வுஏஇ சுயனழை என்பவற்றில் ஒளி, ஒலிபரப்பப்படுகின்ற பொழுது போக்கு நிகழ்ச்சிகளும் மக்கள் மனங்களை கவர்ந்து அவர்களின் தனிமை உணர்வைப் போக்கி அவர்களைச் சிரிக்க வைக்கவோ அல்லது சிந்திக்க வைக்கவோ அல்லது ஆடவோ, பாடவோ வைக்கின்றது என்றால் மிகையாகாது. மனிதனாகப் பிறந்த யாவருமே அமைதியானதும் சந்தோஷமானதுமான வாழ்வையே விரும்புவார்கள். ஆனால் அவர்களின் எண்ணம் இதர காரணங்களினால் நிறைவேறாமல் போகலாம். குடும்பப் பொறுப்பு, வேலைச்சுமை, உறவுகளின் விரிசல் போன்ற காரணங்களுக்குள் உணர்வுகள் தத்தளித்துக் கொண்டிருக்கின்ற போது மனதுக்கு அமைதி தேவைப்படும்.

இன்று உலகில் உள்ள அனைத்துத் தரப்பினாலும் ஏன் இலங்கையிலும் அதிகமாகப் பேசப்படும் ஒரு வெகுசனத் தொடர்பு சாதனம் தொலைபேசி என்றால் மிகையாகாது. பல காலமாக தொலைபேசி பாவனை புழக்கத்தில் இருந்து வந்தாலும் கூட இன்று நவீன விஞ்ஞான வளர்ச்சி காரணமாக அது புதுப்புது வடிவங்களைப் பெற்றுள்ளது.கணனி மென்பொருட்கள் பொருத்தப்பட்ட தொலைபேசி, digital camera பொருத்தப்பட்டவை, இணைய பாவனை வசதி ரி.வி பார்க்கும் வசதிகள் என ஏராளமான சிறப்பியல்புகளைக் கொண்டு இன்றைய யுகத்தில் தொலைபேசிகள் தயாரிக்கப்படுகின்றன.
இத்தகைய பல்லியல்பு கொண்ட தொலைபேசிகள் மக்கள் உள்ளத்தை வெகுவாகக் கவர்ந்துள்ளன என்றால் ஆச்சரியப்படுவதற்கில்லை. வெகுசனத்தொடர்பு சாதனங்களில் ஒன்றாகிய தொலைபேசி பாவனையினால் எமக்கு ஏராளமான நன்மைகளே கிடைக்கின்றன. இருப்பினும் அவை உடல் ரீதியானதும், உளரீதியானதுமான சில பாதிப்புக்களையும் தரத் தவறுவதுமில்லை. இதனை உளவியல் ரீதியில் கருதுவதானால் தொலைபேசி பாவனையால் உறவுகளின் உறவுநிலை வலுப்படுத்தப்படும். இதனால் உள்ளத்தில் சந்தோஷமும், மகிழ்ச்சியும் ஏற்படுகின்றது. இதனால் பாசம் என்னும் மனநிலை எம்மை அறியாமலே ஏற்பட்டு விடுகின்றது. இவ்வாறான உணர்வலைகளுக்கு மத்தியிலும் தவறான அழைப்பு ஏதாவது எமது தொலைபேசிகளில் வந்துவிட்டால் எமது உள்ளம் விரக்திpயின் விளிம்புக்கே சென்றும் விடுகின்றது. குறிப்பாக எமது தொலைபேசிகளுக்கு யாராயினும் விளையாட்டிற்கேனும் அழைப்பு செய்து மிரட்டுகின்ற போது எமது உள்ளம் படும் வேதனை, அந்நேரத்தில் ஏற்படும் கலக்கம் எம்மை விரக்தியின் விளிம்புக்கே அழைத்துச் செல்கிறது.
எனவே தொலைபேசி பாவனை என்பது கூடுதலான நேரங்களில் எம்மை உளரீதியாக சந்தோசப்படுத்தவும் குறிப்பிட்ட சில  எம்மை மனரீதியாக வேதனைப்படுத்தவும் செய்கின்றது.அதே நேரம் தெலைபேசியை சரியான முறையில் பாவித்து தொடர்பினை வலுப்படுத்த வேண்டியுள்ளது தொடர்ச்சியாக தொலைபேசியில் கதைப்பதனால் உடல் ரீதியிலான பாதிப்புகளும் ஏற்படுகின்றன என இன்றைய விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

1 comments:

Unknown said...

Essay is not bad, But add more ideas.

Post a Comment

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | cheap international calls