Tuesday, November 8, 2011

ஆடல் அரசு-பற்றிய எனது கிறுக்கல்


கலைகள் இல்லாத உலகத்தை ஒரு கனம் மனதினால் கற்பனை செய்து பார்க்ககூட முடியவில்லை அவ்வாறு இருப்பின் சுட்டெரிக்கும் வெயிலையும் தொலைதூரத்தில் இருக்கும் வெறுமையும் கொண்டிருக்கும் பாலைவனத்தை விட மோசமானதாகவே இருக்கும்.


சென்னைப்பல்கலைக்கழகத்தின் முற்றம் கலைக்குழு செயலாளரும் நாட்டார் கலைவிற்பனருமான ஆடலரசு வேணு அவர்கள் முதல் முதலாக தனது தாய்நாட்டுக்கு வெளியே தான் கற்றுக் கொடுத்த யாழ்ப்பாண இளைஞர்களுடன் நடத்துகின்ற முதல் நிகழ்ச்சி யாழ்ப்பாணப்பல்கலைக்கழகத்தில் கைலாசபதி கலையரங்கில்  நடைபெற்றது  அதன் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இவை.


தென்னிந்தியாவில் இருந்து வருகைதந்த  இவர் யாழ்பல்கலைக்கழக ஊடக வளங்கள் மற்றும் பயிற்சி மைய மாணவர்கள் , செயற்திறன் அரங்க குழுவினருடன் இணைந்து நாடாத்திய தென்னிந்தி நாட்டார் கலைகளின்  விழா 04/112/2011 அன்றில் இருந்து மூன்று நாட்க்கள் தொடர்சியாக இடம் பெற்றது..


யாழ் மண்ணில் தனது கருத்துக்களை தெரிவித்த ஆடல் அரசு

யாழ் மண்ணின் மீது நான் கொண்ட காதலின் பால் இந்த மக்களைச் சந்திக்கவும் இந்த மண்ணில் இந்தக் கலையினை நடாத்துவதற்கும் வாய்ப்புக் கிடைத்துள்ளது.
இக் கலையானது ஒடுக்கப்பட்ட சமூகத்தினரை உலகத்திற்கு வெளிக்காட்டுவதற்காகவே நாட்டார் கலைகள் உருவாக்கப்பட்டன. அந்த மக்கள் நாட்டார் கலைகளின் மூலமாக தமது வாழ்வியலை உலகிற்குக் காட்டியுள்ளனர். பூஜ்ஜியம் என்ற வடிவம் இல்லை என்றால் கணிதத்திற்கு பூஜ்ஜியம் என்ற சொல் இருந்திருக்காது அது போல் தான் இக் கலையும்.
திருமணம், கோயில் திருவிழா, சாவுவீடு போன்ற நிகழ்வுகளிலேயே தப்பு அடித்து ஆடுவார்கள். இம் மரபு மறைந்து போகாது இருப்பதற்காக தமிழகத்தில் தற்போது மீள் உருவாக்கம் செய்யப்பட்டு வருகின்றது. மதுரையில் கொட்டு என்றும், தஞ்சாவூரில்  தப்பு எனவும், சென்னையில் மேளம் என்றும் இதனைப் பல்வேறு பகுதிகளிலும் பல பெயர் கொண்டு அழைக்கின்றனர்.

 “ஆத்தா உன் சேலை அந்த ஆகாயத்தை போல”



என்ற உன்னதமான உயிரோட்டமான பாடல் மூலம் அனைவரின் மனதிலும் தனக்கு என்றோர் இடத்தை தக்க வைத்த கலைகளின் சங்கமம் அவன். எந்தவொரு பிரதேசமாகிலும் அதன் சிறப்பு அங்கு வாழ்ந்த வாழ்கின்ற மக்களின் தொண்மை அவர்களின் உளபாங்கு வளர்சி என்பனவற்றுக்கு அப் பிரதேசங்களில் வாழ்கின்ற அல்லது காணப்படுகின்ற கலைகளே சாட்சி அக்கால மன்னர்கள் முதல் இக்கால தலைவர்கள் வரை கஜயானவின் பெரும் பகுதியை கலைகளின் பொருட்டே செலவிடுகின்றனர்;.

தமிழகத்தின் கலைக்காப்பான் 
வாழ்வியல் தேடல்கள் தொடர்ந்து ஒடிக்கொன்டே இருக்கும் மனிதன் சற்று நின்று இழைப்பாற கவலைகள் மறந்து மனம் இதமாக கலைகளே வழியமைக்கின்றன இத்தகைய கலைகளின் தொண்மையானவை அந்தவகையில் முக்கியமாக அருகிவரும் நாட்டுப்புறக்கலைகளை இன்றை பார்வையில் வெளியுலகிற்க்கு கொண்டுவருவதற்காக வாழ்வில் பல தருணங்களை இழந்து அதனை புத்துயிர் ஊட்டி மேடையேற்றி அணைவரையும் மெய்சிலிர்க்க வைத்தவனை சென்னைப் பல்கலைக்கழகத்திலே சந்தித்தேன் சில விடயங்கள் மனித மனங்களிலே ஆழப்பதிந்துவிடும் ஜந்து மணித்துளிகளில் கண்ணீரை வெளிப்படுத்தும் ஆயுதம்  அவனது கைகளிலும் குரலிலும் கொண்டு இருக்கிறார் என்பதை பலரின் கண்களை பார்த்து அறிந்து கொண்டேன்.

என்னங்க என்ன சொல்ல வாரன்டு புரியல்லையா?

அவனும் அப்பிடித்தாங்க எதுவுமே புரியாது..

அவன் தான் ஆடல்அரசு என்று தமிழ்நாட்டின் கலையுலகத்தினால் அழைக்கப்படும் வேணு. உங்களுக்கு எப்பிடி புரியவைக்கிறது கிட்டதட்ட வைரமுத்துவின் தோற்றம் அவன பார்க்கும் போது கூட எனக்கு வைரமுத்து தனது அம்மாவிற்காக எழுதிய கவிதையின் இரண்டு வரிகள் தான் ஞாபகத்திற்க்கு வரும் ”கன்னுகாது மூக்கோட கறுப்பாய் ஒரு பிண்டம் இடப்பக்கம் கிடக்கையில என்னதான் நினைச்சிருப்பாள்…. ஏன்ற அந்த அற்புதமான வரிகள்

23.10.2011 அன்று காலை 10.00 இருக்கும் சென்னைப் பல்கலைக்கழகத்தில் பெரியார் மண்டபத்தில். புத்தாக்கப் பயிற்சியில் கருத்தமர்வு ஆரம்பிப்பதற்க்கு முன்னர் வைபவ ரீதியான தொடக்க நிகழ்வு இடம்பெற்றது. இனம்புரியாத சோகத்தால் சோர்ந்திருந்த எம்மை நிகழ்காலத்துக்கு மீட்டி வந்தது “ஆத்தா உன் சேலை அந்த ஆகாயத்தை போல தொட்டில கட்டித் தூங்க…” தாயை  விட்டு தொலை தூரத்தில் இருந்த எம்மை அவனின் தாலாட்டோடு கட்டிப்போட்டது அந்த பாடல் முடியும் வரை யாரும் அசைந்தது  கூட எனக்கு தெரியவில்லை. அந்த அற்புதமான உயிருள்ள பாடலை எப்படி இந்த இரண்டு வரிக்குள்ளும் அடக்கி விட முடியும் என்பது எனக்கு தெரியவில்லை.

பாடல் முடிந்ததுமே கலந்துரையாடல்கள் ஆரம்பமாகின. புகைப்படக் கருவியினூடாக நிகழ்வுகளை பதித்துக் கொண்டிருந்தேன். நிகழ்வுகளை நண்பர்களுடன் இருந்து அவதாணித்துக் கொண்டிருந்த அவன்; அந்த நேரத்தில் என்னை அழைத்து “இலங்கை பெண்களின் வழிபாட்டுமுறை இந்திய பெண்களின் வழிபாட்டு முறையிலும் தான் அவதானித் விடயத்தைப்பற்றி கேட்டான்;”இவ்வாறு ஆரம்பித்தது எமது நட்பு.

பெங்களுருக்கு சென்னை பல்கலைகழக மாணவர்களுடன் 5நாள் கல்விச் சுற்றலாவிற்க்கு ஆய்தமானோம். மீண்டும் சந்திக்கும் சந்தர்ப்பம்  கிடைத்தது.
என்னுடைய வாழ்வில் கடந்துவந்த பாதையில் சந்தித்திருக்காத வித்தியாசமான நபர். எந்த விடயமாக இருந்தாலும் சாதாரணமாக அதனைச் சொல்வதும் அதனை ஒரு வசனத்தில் சொல்வதும் தனித்திறனே. சில சமயம் யோசிச்சிருக்கன் என்ன மனுசரடா எத கேட்டாலும் எல்லாதுக்கும் ரெடிமெற்றா ஒரு பதில் வச்சிருப்பான் நிறைய யதார்தமா கதைப்பான் அது உண்மையாவும் இருக்கும் அது தான் பிளஸ்.

எல்லாத்தைவிட தான் பிறந்து தவழந்த மண்ணினை உயிராக மதித்து மாவட்டம் வட்டாரம் என்பவற்றின் காரணப் பெயரை மட்டும் ஏனோ உணர்வு பூர்வமாக சொல்லிமுடித்தான். வெறுமென 120 குடும்பத்தை மட்டும் கொண்ட பாலையும் மருதமும் ஒருங்கே இணைந்த மிகச்சிறிய கிராமத்தில் டாக்டர் அம்பேத்கர் தோன்றிய சமூகத்தில் தோன்றிய இவன் பல்வேறு சமூகப்பணிகளில் ஈடுபடுகின்றான்

 “இன்று எம் சமூக அந்தஸ்தினை உயர்த்துவதற்காக அரசின் மற்றும் அரசியல் வாதிகளின் பல சலுகைகளை மறுக்கிறோhம் எங்களுக்கு கல்வி வாய்பு வேலை வாய்பு உள்ளுர் அதிகாரப்பங்கீடு   போன்றவற்றை மாத்திரமே எதிர்பாக்கின்றோம் அதனை மட்டுமே பெற்றுக் கொள்வோம் என தனது ஆதங்கத்தை  வேகத்துடன் சொல்லி முடித்தான்”


“பிறப்பை காரணமாக்கி ஒர் இனத்தை தாழ்த்துவது இந்தியர்கள் அனைவரையும் தலைகுனியச்செய்யும் சமூகக் கொடுமை இந்த சாதிப்பிரிவுகளை வகுப்பவர் எவராயினும் அவர் தீங்கிலைப்பவரே ஆவார். அதே இனத்தைச்  சேர்ந்தவராக தம்மை பிரகடனப்படுத்தி கொள்வபராயினும் இக்குற்றச்சாட்டில் இருந்து தப்புதலாகாது”
இது ஒரு நாவலாசிரியரின் கருத்து

என்னைப் பொறுத்தவரையில் இதற்க்கு விதிவிலக்கு உண்டு ஒடுக்கப்பட்டோருடன் சேர்ந்து அவர்களுடைய உயர்விற்காக மேன்மைக்காக சிந்தித்து தனி வாக்காளர் தொகுதி கோரிய பாபாசாகிப் அம்பேத்கர் போன்றவர்களே அடக்கப்பட்டும் ஒடுக்கப்பட்டும் அல்லல்பட்டும் அவமானப்பட்டும் மனிதப்பிறவியின் ஒரு பகுதி அனுபவித்த சொல்லமுடியா துயரங்களிற்க்கு தீர்வு தேடியவர்கள் அவர்கள். ஒடுக்கப்பட்ட இனங்களுக்கிடையே ஒற்றுமை பிறசாதிகளுடன் இனக்கமான தன்மானம் சிதையா வாழ்வு இவற்றைக் கோரியே தொலைநோக்கு கொண்டவரும் ஆக்கபூர்வருமான சமூகவியலாளருமான டாக்டர் அம்பேத்கர் தோன்றிய சமூகத்தில் பிறந்தார்.

Doctor.Ambedkar

இன்று தன் கிராமத்தில் முதல் பட்டாதாரியாகி வெளியேரி தமிழகத்தில் இவர் முகம் தெரியா மனிதர்களே இல்லை என்ற அளவிற்ககு சட்டதரணியாகவும் ஊடகவியலாளாளனாகவும்  கலைஞனாகவும்  என பல் துறைகளில் இவன் இன்றும் ஜொலித்துக் கொன்டிருக்கின்றான். இன்று  இவன் இதழியல் மற்றும் தொடர்பியல் துறையில் இரண்டாம் வருட முதுகலைமானி கற்று வருகின்றான். எல்லா விடயதத்தைப்பற்றி சிறிய அளவும் சில விடயத்தைப்பற்றி முமுமையாகவும் தெரிந்து வைத்துள்ளான் என்பது ஒவ்வொரு வார்த்தைகளும் யோசித்தே வெளிவரும்பேதே உணர்ந்து கொள்ள முடியும்

சிலப்பதிகார காலத்தில் பல்வேறுபட்ட நடனமாதுக்கள் கூத்தர் குழாம்களில் இருந்து நடனத்தை வெளிப்படுத்தினர் இருப்பினும் இப் பெண்களின் நடனங்கள் யாவும் எல்லோர் மனங்களையும் கொள்ளை கொன்டது என்று இல்லை ஆனால் அக் காலத்தில் மாதவி என்ற நடனமாது 11 வகையான ஆடல்களையாடி எல்லோர் மனதிலும் இடம் பிடித்தால் அது போல் இன்றும் தமிழ் நாட்டில் பல்வேறு பாரம்பரிய கலை வடிவங்களை ஆடிவந்தாலும் கலைக்கென்ற தனித்துவ கலைஞனாக  இந்த ஆடல்அரசு தமிழ்நாட்டில் பல்லேறு பார்வையாளர்களை 11வகையான ஆடல்களின் மூலம் கவர்ந்துள்ளான்.
இதனைவிட கலையுலகிற்க்கு இரண்டு வகையான ஆடல்களை அறிமுகப்படுத்திய தந்தை இந்த ஆடல் அரசு சேவல் சண்டை மற்றும் யுத்தக்காட்சிகளை கண் முன் நிறுத்துவதற்க்கு எடுத்த முயற்சி வெற்றியளித்துள்ளது. என்பது உறுதியான பேச்சு முலம் புலப்படுகின்றது இதனை விட முற்றம் கலைக்குழு மூலம் அழிந்துவரும் பாரம்பரிய நாட்டார் கலைகளை முக்கியமாக பறை இன்றைய சந்ததியினரின் ரசனைக்கேற்ப்ப மேடையேற்றுவதற்காக சக மாணவர்களுடன் எடுத்த முயற்சி வெற்றியின் சிகரத்தை தொட்டுவிட்டது என்பது பார்வையாளரின் முகபாவனையூடாகக் கண்டுகொண்டேன்.

உங்க ரோல் மொடல் எண்டா நீங்க யாரை சொல்லுவீங்க என்றதுமே...

"என்னோட மாமா என்று உணர்வு பூர்வமாக சொல்லத் தொடங்குகின்றான் இன்று இவ்வளவு பாராட்டுக்கும் சொந்தக்காரர் அவரே. என்னை அனு அனுவாக செதுக்கிய சிற்பி கலையுலகிற்க்கு அறிமுகப்படுத்தியவரும் அவரே. எனக்கு போட்டி என்டு யாராவது இருப்பீனம் என்ட மாமா பையன் தாங்க இப்ப 9 வயசாகிறது நான் என்ன செய்யிறனோ அத்தனையும் செய்வான் என்னோட பிரதி விம்பம் அவன் தான் .மாமாவின் கலைத்திறனும் என்னுடைய உற்சாகமும் என்னை விட பல மடங்கில் எதிர்காலத்தில் பிரகாசிக்க செய்யும் என நம்புகின்றேன்”


அம்மா என்ற வார்த்தைக்கு அர்த்தம் என்னவோ அவன் உதட்டில் இருந்தே பிறக்கின்றது.

“என்னோட ஆத்தா இதுவரை எனக்கு அடிச்சதே கிடையாது.அந்த ஒரு கவல என்னும் என்மனசில இருந்திட்டே இருக்குது……(ஒரு பெரு மூச்சு) அத விட எங்க ஆத்தாக்குத் தெரியும் எந்த விசியத்த எனக்கு எப்ப எப்பிடி சொல்லனும்மென்டு"


சில மணி நேரம் சென்டிமென் பிண்ணி யெடுக்கிறான்


இந்த பாசம் எல்லாம் ஆத்தா சாகும் வரைக்கும் தானே யாதார்தமா யோசிச்சு பாரன் என்ன? என்னிடமே விடை தேடுகின்றான்.

உங்களின் எதிர்காலத்தைப் பற்றிய சிந்தனை? எல்லோருக்குமே வரப்போர மனைவி பற்றிய எதிர்பார்பு இருக்கத்தான் செய்யும் (குறுக்கிட்டு)


பெரிசா ஒண்டும் எதிர்பாக்கல

எங்கூட நிறைய சண்டை போடனும்
எங்க போற எதுக்கு போற எண்டு கோக்கக்கூடாது
முற்போக்கு சிந்தனையுள்ளவளாக இருக்கவேண்டும் நாளைக்கு என்ன நடக்க போகுது என்று சிந்தித்து வாழகத்துக்கனும்
பொதுவா சென்னா எங்க ஆத்தா போல இருக்கனும்
என்னோட கலையை ரசிக்கனும் மதிக்கனும்
இப்பிடியே list நீண்டு கொண்டே போகுது.

இத தான் சொல்லுவாங்களோ பெரிசா ஒண்டும் எதிர்பாக்கல எண்டு

இப்பிடியே 15 நாட்கள் ஓடிவிட்டது.பிரியும் நேரம் நெருங்கிக் கொன்டிருந்தது காலமும் வாழ்வும் இருவேறு திசைகளில் பிரயாணிக்கையில் பிரிவு என்பது நிச்சயமே15 நாட்களின் விளிம்பில் நிண்று திரும்பிப்பார்த்தால் சென்னைப் பல்கலைக்கழகமும் நண்பர்களும் மட்டுமே தெரிகின்றனர் இனப்புரியா நெருடல் அனைவரையும் கௌவிக்கொள்கின்றது எல்லோருடைய முகத்திலும் சோகம் இழையோடிக் காணப்பட்டது.

வேனு அண்ணாவ பார்த்தன் எந்த கவலயும் இருக்கிற மாதிரித் தெரியல
ok  நாமளா போய் கேப்பம் “வேனு அண்ணா இங்க எல்லோருமே கநநட பன்னுறாங்களே உஙகளுக்கு கநநடல இல்லையா என்று கேட்டன்
எதுக்கு Fell  பண்ணனும் எங்கிறாய் இல்ல தெரியாம தான் கேக்கிறன் எதுக்கு fell
எண்டா கேட்டம் என்டு இருந்திச்சு


கொஞ்ச நேரத்தால கவி நீங்க எல்லாம் வெளியாள அழுகிறீங்க நான் உள்ளுக்க அழுகிறன் எண்டு ஒரு பிட்டு போட்டான் கடைசிவரைக்கும் ரியாக்சனே இல்லயே…



"கண்கலங்க வைத்த உண்ணதமான நட்பு பாசம் வாழ்கையின் இறுதிவரை கொண்டு சென்ற போராட்டங்கள்.அடியாழத்தில் இருந்த தன் சமூகத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுவதற்க்காக எடுத்த முயற்சிகள் தியாகங்கள் சொல்லென்னா துயரங்கள் லட்சிய பாதையின் வெற்றிகள். உருவாக்கிய கலைக்குழு நிறைவேறிய ஆசைகள் மறக்க முடியா நிகழ்வுகளின் நினைவலைகள் என கடந்த 26 வருடங்களையும் இரண்டே மணிநேரங்களில் சொல்லி முடித்தான்.  என்னை பொறுத்தவரையில் அவன் ஒர் லட்சிய வாதி லட்சியத்தை நோக்கி எடுத்து வைக்கும் ஒவ்வெரு அடியும் வெற்றியளிக்கும்…….


"ஆத்தா உன் சேல
ஆந்த ஆகாயத்த போல
தோட்டில் கட்டித் தூங்க
தூலி கட்டி ஆட…


ஆத்தில மீன்புடிக்க
அப்பனுக்கு தலை துவட்ட..


(ஆத்தா உன் சேல)

நான் இடுப்பில கட்டிக்கிட்டு நீச்சல் பழகியதும்
உன் சேலதானே வண்ணப் பூஞ்சோல தானே ..


வெறுந் தரை விரிப்பில நான் படுத்துக் கிடந்ததுவும்
உன்சேல தானே வண்ண பூஞ்சோல தானே…


(நான் இடுப்பில கட்டிக்கிட்டு நீச்சல் பழகியதும் )

ஈரத்தில காயும் போது வாணவில்லா தெரியும்
இத்துப்போன சேலையில் உன் சோக கதை புரியும்
கஞ்சி கொன்டு போகையில
சும்மாடயா இருக்கும்


நீ சேல கட்டி இறைச்ச தண்ணி
சக்கரயா இனிக்கும்
(சேல கட்டி இறைச்ச தண்ணி
சக்கரயா இனிக்கும்)


(ஆத்தா உன் சேல)
அக்கா கட்டி பழகியதும்
ஆடுகட்டி மேச்சதுவும்
உன் சேலதானே வண்ண பூஞ்சோல தானே…


வெக்கையில விசிறியாகும்
வெயிலுக்குல்ல குடையாகும்
உன் சேல தானே வண்ண பூஞ்சோலதானே….


பெட்டிக்குள்ள மடிச்சு வைச்ச அழகு முத்து மாலை
காயம் பட்ட விரல்களுக்கு கட்டுப்போட்டும் சேல
கைவிரலா உன் சேல மனசுக்குள்ள விரியும்
வெளுத்த சேல திரி
விளக்குப் போட்டா ஏரியும்"


பார்த்தாலே சேர்தனைக்க தோனும்
நான் செத்தாலும் என்ன போத்த வேனும்…..
செத்தாலும் என்ன போத்த வேனும்…….







6 comments:

mareen said...

நீங்கள் குறிப்பிடும் நபர் பற்றி உங்கள் எழுத்தாக்கத்தில் இருந்து அவர் பற்றி தெரியாதவர் கூட புரிந்து கொள்ளும் விதத்தில் சிறப்பாக உள்ளது வாழ்த்துக்கள்.

Kavi Ra said...

thx mareen.....

செல்வதி said...

இந்திய மண்ணுக்கு தெரிந்த ஆடலரசை யாழ்ப்பாணத்திலும் தெரிந்து கொள்ள வைத்திருக்கின்றாய்
வாழ்த்துக்கள் கவி!

Kavi Ra said...

நன்றி நண்பி கொளசி...

மகேஸ்வரி said...

அற்புதம்.

Kavi Ra said...

நன்றி நண்பி
மகேஸ்வரி

Post a Comment

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | cheap international calls