Tuesday, January 10, 2012

உச்சிதனை முகர்ந்தால் "இருப்பாய் தமிழா நெருப்பாய்"


இனம் சார்ந்த உணர்வையும் மனிதம் சார்ந்த வலியையும் மையமாக வைத்துக் கலாபூர்வமாக வழங்கப்பட்டிருக்கும் ஒரு தனிக்காவியம் ’உச்சிதனை முகர்ந்தால்’.

தமிழ் சினிமாவுக்கென்று அன்றுதொட்டு இன்றுவரை தவிர்க்க முடியாத சில அடிப்படை அம்சங்கள் உண்டு. எதையும் சாதிக்கவல்ல ஒரு நாயகன் அவனையே நினைத்து அவனுக்காகவே நெகிழ்ந்து அவனுள் கலந்து கரைந்துவிட உருகித் தவிக்கும் ஒரு நாயகி இயற்கைக்கு எந்த வகையிலும் பொருந்தாமல் கடற்கரையிலும் பூந்தோட்டத்திலும் பரபரப்பான வீதிகளிலும் கட்டியணைத்துக் காம விகாரத்தை வார்த்தைகளிலும் அங்க அசைவுகளிலும் வெளிப்படுத்தும் இரண்டு காதல் காட்சிகள்: இரட்டை அர்த்தமுள்ள வசனங்கள் பேசும் நகைச்சுவை நாயகர்களின் சகிக்கமுடியாத சேட்டைகள்: இருபது பேரை ஒரேயொரு தனி மனிதன் பறந்து பறந்து தாக்கும் அசகாய சூரத்தனம் மிகுந்த ஆவேசமான குத்துச்சண்டைகள்: இல்லாத தமிழ் சினிமா அபூர்வம்: இவை எல்லாவற்றையும் திட்டமிட்டு ஒட்டுமொத்தமாக நிராகரித்து
இனம் சார்ந்த உணர்வையும் மனிதம் சார்ந்த வலியையும் மையமாக வைத்துக் கலாபூர்வமாக வழங்கப்பட்டிருக்கும் ஒரு தனிக்காவியம் ’உச்சிதனை முகர்ந்தால்’.







முற்றிலும் வணிகமயமாகிவிட்ட திரைப்படவுலகில் சமூக அவலங்களைச் சமரசமின்றி வெளிப்படுத்தும் ஒரு படத்தைக் கலைநுணுக்கம் கலையாமல் காண்பவர் உள்ளங்களை உலுக்கியெடுத்து விழிகளில் கண்ணீர் வழிய,இருதயத்தில் ,ரத்தம் சூடேற ,இனியும் மௌனப் பார்வையாளர்களாக இருந்துவிடாமல் இன நலனக்குத் தன்னளவில் உருப்படியாக ஏதாவது ஒருவகையில் பங்களிப்பைத் தந்தாகவேண்டும் என்ற உணர்வை உந்தும் விதத்தில் உருவாக்கியிருக்கும் இயக்குனர் புகழேந்தி தங்கராஜ், மிகையான நடிப்புக்கு இடமளிக்காமல் வெகு இயல்பாக ஒவ்வொரு பாத்திரத்தின் தன்மை உணர்ந்து சின்னச் சின்ன அசைவுகளிலும் தங்கள் ஆற்றலை முழுமையாக வெளிப்படுத்தயிருக்கும் கலைஞர்கள் சத்தியராஜ், சீமான், சங்கீதா, நாசர், உச்சிதனை முகர்ந்து நம் வாழ்த்துக்களை வெளிப்படுத்தத் தூண்டும் நீநிகா: இளந் தென்றலாய் வீசியும் எரிமலையாய் பொங்கிப் புரண்டும் பாடல்களில் ரசவாதம் காட்டியிருக்கும் இசைய்மைப்பாளர் இமான் ஒவ்வொரு வார்த்தையிலும் ஈழத் தமிழரின் இதயவலியை இறக்கிவைத்திருக்கும் உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் ஆகியோரின் கூட்டுத் தவத்தில் உருவானதுதான் இந்த ‘உச்சிதனை முகர்ந்தால்’
புனிதவதி என்ற பதிமூன்று வயது சிறுமி உடலும் மனமும் சிங்கள வெறியர்களால் பாலியல் பலாத்காரத்தில் பாதிக்கப்பட்ட நிலையில் அவளுடைய வாழ்வு எப்படி சீர்குலைந்தது. அவளுடைய இனிமை ததும்பிய குடும்ப உறவுகள் எப்படி நிலைகுலைந்து நிர்மூலமாக்கப்பட்டன என்பதை ஒரு புள்ளியாக வைத்து உலகம் முழுவதுமுள்ள மனித குலத்தின் மனச்சான்றை உசுப்பிவிடும் வகையில் உறுக்கமாகவும் அடிமனதில் உரைந்துகிடக்கும் ஒவ்வொருவருடைய மனிதநேயத்தை மலரச் செய்வதாகவும் கலைநயத்துடன் காட்சிகள் அமைக்கப்பட்டு ‘உச்சிதனை முகர்ந்தால்’ உருவாக்கம் கொண்டிருக்கிறது.



உலகத்தின் பொதுமொழி மனிதநேயம். இந்த மொழியை அறிந்தவர்கள் அனைவரும் தவறாமல் கண்டு கனத்த இதயத்துடன் கண்ணீர் சிந்தியபடி திரையரங்குகளில் இருந்து வெளியே வருவார்கள் என்பது தின்னம்.இது ஒரு சாதாரணத் திரைப்படம் அல்ல.மனிதம் மறந்த மக்களுக்கும் இன உறவு துறந்த தமிழர்களுக்கும் சினிமா என்னும் சக்திமிக்க ஊடகத்தின் மூலம் நடத்தப்பட்டிருக்கும் ஓர் உயர்ந்த பாடம்.

ஒவ்வொரு தமிழனும் குறிப்பாக மென்மையான உணர்வு படைத்த ஒவ்வொரு பெண்ணும் பிள்ளைகளுடன் திரையரங்கம் சென்று பார்க்கவேண்டிய படம் ‘உச்சிதனை முகர்ந்தால்’. இதுபோன்ற நான்கு படங்கள் தொடர்ந்து வந்தால் தமிழீழம் உருவாவதற்கு தார்மீக துணையாக தமிழகம் தலைநிமிர்ந்து நிற்கும் என்பதில் இருகருத்துக்கு இடமில்லை.

சிங்கள பயங்கரவாதிகளின் ஈரமில்லாத கொடுங்கோன்மைக்கு தமிழ் சொந்தங்கள் ஒட்டுமொத்தமாக பாதிக்கப்பட்டாலும் அதிலும் மிகப் பெரும் துயரங்களை சுமந்தவர்கள் குழந்தைகள் தான். அவர்களில் ஒருவரான் புனிதாவின் துயரத்தை அங்குலம் அங்குலமாக நம் கண் முன்னே கொண்டு வந்து சிங்கள பேரினவாதத்தின் அராஜகத்தை நம் நெஞ்சில் பதித்துள்ளார் இயக்குனர் புகழேந்தி.

 ஈழத் தமிழர்களை கொன்று குவித்ததை வேடிக்கைப் பார்த்த, அதற்கு எல்லா வகையிலும் உதவி புரிந்த நம் நாட்டின் ஆட்சியாளர்கள் கட்டாயமாக பார்க்க வேண்டிய படம் இது. இப்படத்தை பார்த்தாவது அவர்கள் தங்கள் பாவத்திற்கு பிரியாசித்தம் தேடுவார்கள் என்று நம்புகிறேன். ஒரு பேராசிரியர், ஒரு இல்லத்தரசி இரு மருத்துவர்கள், ஒரு காவல்துறை அதிகாரி, ஒரு திருநங்கை, முகம் தெரியாத ஒரு ஆட்டோ ஓட்டுனர் ஆகியோர் மனிதநேயத்துடன் புனிதாவை நேசித்து அச்சிறுமியை காப்பாற்ற எடுக்கும் முயற்சிகள் நெஞ்சை நெகிழ வைத்தன. இந்தியாவின் சாதாரண குடிமக்களான இவர்கள் பெரும் சவால்களுக்கிடையில் வெளிப்படுத்தும் மனிதநேயம் ஈழத்தில் தமிழ் சொந்தங்கள் கொத்துக் கொத்தாக கொன்று குவிக்கப்படும் போது மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சியில் இருந்தவர்களிடம் இருக்கவில்லை. இவர்களது மனப்போக்கைத் தான் பேராசிரியர் நடசேனின் மாமியார் இப்படத்தில் பிரதிபலிக்கிறார்.
திரைப்படம் என்றாலே விரசம் நிறைந்து கிடக்கும் இக்காலக்கட்டத்தில் தமிழ் மக்களின் சோகத்தை சித்தரித்து நம் பங்கிற்கு ஏதாவது செய்தாக வேண்டும் என்ற வேட்கையை தூண்டும் வகையில் உச்சிதனை முகர்நதால் அமைந்துள்ளது.


Uchithanai Mukarnthal Press Meet





Uchithanai Mukarnthal Press Meet

0 comments:

Post a Comment

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | cheap international calls